search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றாலை மின் உற்பத்தி"

    • காற்றலை மின்சார உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
    • வீடுகளில் அறைகளில் பயன்படுத்தப்படும் ஏசியின் பயன்பாடு காலநிலை மாற்றத்தால் தற்போது சற்று குறைந்து உள்ளது.

    சென்னை:

    இந்திய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8 ஆயிரத்து 894 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் காற்றாலை மின்சார உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தினசரி உற்பத்தி செய்வது வழக்கம். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும் என்பதால் எதிர்பார்த்த அளவு காற்றின் வேகம் அதிகம் இருக்க வாய்ப்பு இல்லை.

    புயல் மையம் கொண்டால் மட்டும் சம்பந்தப்பட்டப் பகுதிகளில் மட்டும் காற்றின் வேகம் இருக்கும். அப்பகுதிகளில் காற்றாலைகள் இருந்தால் மட்டும் மின்சார உற்பத்தி நடக்கும். தற்போதைய நிலையில் காற்றாலை சீசன் நிறைவடைந்தத நிலையில் ஒரு சில பகுதிகளில் காற்றின் வேகம் இருப்பதால் நேற்றுமுன்தினம் காலை 7.50 மணி நிலவரப்படி 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    காற்றலை மின்சார உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. சராசரியாக தற்போது 3 ஆயிரத்து 800 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    அதேபோல், சோலார் மூலம் 7 ஆயிரத்து 134 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் கொள்திறன் உள்ளது. அதன்படி 4 ஆயிரத்து 314 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலைகள் மற்றும் சோலார் மின்சாரம் உற்பத்தி இருப்பதால் மின்வெட்டு செய்யப்படாமல் தேவைக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

    வீடுகளில் அறைகளில் பயன்படுத்தப்படும் ஏசியின் பயன்பாடு காலநிலை மாற்றத்தால் தற்போது சற்று குறைந்து உள்ளது. மின்சாரத்தின் தேவையும் சற்று குறைந்து இருப்பதால் அனல் மின்சார நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி சராசரியாக 2 ஆயிரத்து 400 மெகாவாட் என்ற அளவில் உற்பத்தியும் குறைக்கப்பட்டு உள்ளது என்று எரிசக்தித்துறை அதிகாரிகள் கூறினர்.

    • கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
    • இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.

    நெல்லை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கி உள்ளது.

    இதனால் கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகத்தால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

    தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 18 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது.

    மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன் என்பதால் இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டங்களான நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000-க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மே மாதம் காற்றாலை சீசன் தொடங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.

    • தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம்.
    • காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழ்நாடு மின்வாரியம் பெற்று கொள்கிறது.

    கோவை:

    தமிழகத்தில் காற்று சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன.தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15-ந் தேதி காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கியுள்ளது.

    காற்று சீசன் தொடங்கியுள்ள காரணத்தா ல் தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்ப டும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்து ள்ளது.ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்ப ட்டுள்ளது.இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:

    காற்று சீசன் தமிழகத்தில் தொட ங்கியுள்ள காரணத்தால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருகிறது. ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் இன்று வரை ஒரே நாளில் அதிக மின்சாரம் 4-ந் தேதி உற்பத்தி செய்யப்பட்டது.

    ஜூலை 3-ந் தேதி ஒரே நாளில் 10.4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தின் தினசரி மின் தேவையில் காற்றாலைகள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்க தொடங்கியுள்ளன.

    ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழ்நாடு மின்வாரியம் பெற்று கொள்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×