என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாரியம்"
- சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
- குடிநீர் அளவு குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் பேட்டியளித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் ஆத்தூர் நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வாரிய அதிகாரியிடம் ஆத்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறித்து கேட்டறிந்தனர்.
தனிக்குழு
அதன் பின்னர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறும்போது, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு மற்றும் அவை முறையாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நாள் ஒன்றுக்கு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும் தண்ணீர் வினியோகம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸ், மண்டல நகராட்சி இயக்குனர் பூங்கொடி, ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, ஆத்தூர் நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணி, நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் சம்சுதீன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் அசோசியேஷன், 24ம் ஆண்டு மகாசபை கூட்டம் ஓட்டலில் நடந்தது.கூட்டத்துக்கு அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பனியன் தொழிலாளருக்கு விடுதி, கல்வி வசதியை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வலியுறுத்துவது, மின் கட்டண உயர்வை கைவிட அரசை வலியுறுத்துவது, பல்வேறு கோரிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பார்வைக்கு வைப்பது, சணல், தேங்காய் வாரியம் இருப்பது போல் பின்னலாடைக்கென வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் நிர்வாகி சிவக்குமார் மின் இயக்க சாதனங்கள் அவற்றின் பாதுகாப்பான செயல்பாடுகள் குறித்தும், ஆடிட்டர் அரசப்பன் மத்திய, மாநில அரசுகளின் மானியம், சலுகை குறித்தும் பேசினர்.
- மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
- கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்து தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.
கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேங்காய் நார் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவி செய்ய வேண்டும். தென்னங்கன்றுக்களுக்கு பராமரிப்பு மானியம் வழங்க வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, தென்னை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க முதல் நாளான இன்று பலர் திரண்டனர்.
- தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள 2 -ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), சிறைத்துறையில் உள்ள 2-ம் நிலை சிறை காவலர், தீயணைப்புத்துறையில் உள்ள தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.
விண்ணப்பப்பதிவு தொடங்கியது
இதில் 2-ம் நிலை ஆயுதப்படை போலீசார் 2,180 , சிறப்பு காவல் படை போலீசார் 1091 , 2-ம் நிலை சிறை காவலர் 161, தீயணைப்பாளர்கள் 120 என மொத்தம் 3552 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வுக்கு இன்று முதல் இணையதள வழியாக விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. கல்வித்தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், எஸ்.எஸ்.எல்.சி. முதல் முதுநிலை பட்டம் படித்தவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.
உதவி மையம் ஏற்பாடு
இதில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உதவ இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை சேலம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் உதவி மையம் செயல்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
அதன்படி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளில் பலர் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேரில் வந்தனர். இணையதளம் வழியாக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து போலீசார் செயல் விளக்கம் அளித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியம் அறிவித்துள்ள 3552 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பிக்க உதவி வேண்டுவோர் இந்த மையத்தை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக அணுகலாம். மேலும் விபரம் பெற 9445978599 என்ற எண்ணில் அழைக்கலாம் என கூறினர்.
சம்பளம் ரூ. 67 ஆயிரம்
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகளில் தேர்வாகி பணியில் சேரும் நபர்களுக்கு ஊதியம் ரூ. 67 ஆயிரத்து 100 வழங்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்