என் மலர்
நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர் தேர்தல்"
- மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் தைரியம் பாஜகவினருக்கு இல்லை.
- கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தனது சொந்த முடிவை எடுக்கவில்லை.
ஸ்ரீநகர்:
தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாஜக விரும்பவில்லை. ஏனென்றால், தேர்தலில் தோற்றுவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. தேர்தலுக்காக பிச்சை எடுக்க நாங்களும் தயாராக இல்லை. தேர்தலை நடத்தினால் நல்லது.
பாஜக தேர்தலை விரும்பவில்லை என்பதால், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தனது சொந்த முடிவை எடுக்கவில்லை. எப்போது முடிவெடுத்தாலும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன்பிறகே முடிவெடுக்கிறது.
- தேர்தலை முன்னிட்டு முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது.
- முதல் நபராக ராகுல் காந்தி பிரசாரம் செய்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஜம்மு:
காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு வருகிற 18, 25, அக்டோபர் 1-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
தேர்தலை முன்னிட்டு முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. அதுபோல நேற்று முன்தினம் முதல் நபராக ராகுல் காந்தி பிரசாரம் செய்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் பாரதிய ஜனதா இன்று பிரசாரம் தொடங்குகிறது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காஷ்மீர் செல்கிறார். இன்று பிற்பகல் 4 மணிக்கு அவர் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். நாளை அவர் ஜம்மு பிராந்தியத்தில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் அவர் ஸ்ரீநகர், ஜம்மு உள்பட 3 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிய வந்து உள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அந்த மாநிலத்துக்கு அறிவித்தார். தற்போது அவர் பிரசாரம் செய்வதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
- 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
அடுத்தக்கட்டமாக வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அந்த 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே ஜம்மு பிராந்தியத்தில் பிரசாரம் செய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி 2-வது முறையாக காஷ்மீர் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி முதலில் ஸ்ரீநகரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர், கத்ரா நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தத் தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கானது. இந்தத் தேர்தல் 'புதிய ஜம்மு-காஷ்மீரை' புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காகும்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும்.
அது பாஜகதான். இது உங்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, பல தசாப்தங்களாக பிராந்தியத்துடனான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா கந்தர்பால் மற்றும் புட்காம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
புட்காம் தொகுதியில் 7 சுற்றுகள் முடிவில் உமர் அப்துல்லா 8612 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தார். சுந்தர்பால் தொகுதியில் 7 சுற்றுகளில் 5958 ஓட்டுகள் கூடுதல் பெற்றுள்ளார்.
இதற்கிடையே உமர் அப்துல்லா கூறும்போது, ஜம்மு-காஷ்மீர் வாக்காளர்கள் என்ன முடிவு எடுத்தாலும் பிற்பகலில் தெளிவாகிவிடும். தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எதிராக இருந்தால் அக்கட்சி குறுக்குவழியில் ஈடுபடக் கூடாது.
5 நியமன எம்.எல்.ஏ.க்கள் குறித்து சில வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த இடங்களை நிரப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை என எங்கள் வக்கீல் ஒருவர் கூறியுள்ளார் என்றார்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜனதா 26, மெகபூபாவின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி-3, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு-2, மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு-1 இடத்தில் முன்னிலையில் உள்ளன. சுயேட்சை 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார். அவர் 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவி வகித்து இருந்தார்.
- ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார்.
இந்நிலையில், தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் தண்னி எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜய் சிங் ராணாவை விட 4538 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான அரியானாவில் ஒரு இடத்தை கூட வெல்லமுடியாத ஆம் ஆத்மி கட்சி ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக ஒரு தொகுதியை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார்.
- 7838 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யூசூப் தாரிகாமி வெற்றி
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யூசூப் தாரிகாமி, குல்காம் தொகுதியில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
1996, 2002, 2008, 2014 தேர்தல்களில் வென்ற இவர் தற்போது நடந்த தேர்தலில் 7838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
- பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய பாடத்தை புகட்டி உள்ளனர்.
- கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
அரியானாவில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து 3ம் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர், அரியானா தேர்தல் முடிவுகள் குறித்து எம்.பி. திருமாவளவனிடம் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அதற்கு பதில் அளித்த அவர், "ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்தது போல இந்தியா கூட்டணி தேசிய மாநாடு கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய பாடத்தை புகட்டி உள்ளனர்.
ஹரியானாவில் கருத்துக்கணிப்பில் சொன்னது போல நடக்கவில்லை. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் சிதறிப் போய் தனித்தனியாக நின்றதால் வாக்குகள் சிதறிப் போய்விட்டன.
இனிவரும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்.
ஹரியானாவில் வலுவான எதிர்க்கட்சி உருவாகியுள்ளது. பிற கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருந்தால் பாஜகவின் வெற்றியை தடுத்திருக்க முடியும். கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
அகில இந்திய அளவில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க முன் வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 100 இடத்தில் வெற்றி பெற்றதும் வாக்கு சதவீதத்தை அதிகரித்ததும் அதற்கு ஒரு சான்று" என்று தெரிவித்தார்.
- காங்கிரஸ், தேசிய மாநாட்டு கூட்டணிக்கு வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி
- மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கள் அரசு பணியாற்றும்
ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் 56 இடங்களில் போட்டியிட்டு 42 இடங்களில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெட்டி பெற்றுள்ளதால் உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஆகிறார். அவர் 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதலமைச்சராக பதவி வகித்து இருந்தார்.
இந்நிலையில் ஆட்சியை கைப்பற்றியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு வாய்ப்பளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் கூட்டணி அரசின் தலைவரான உமர் அப்துல்லாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர். மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கள் அரசு பணியாற்றும்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான ஆயத்த பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
- பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல.
ஜம்மு:
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பயணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜம்முகாஷ்மீர் சட்டசபைத் தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார். அது பஞ்சாயத்து தேர்தலாக, சட்டசபை தேர்தலாக, நாடாளுமன்ற தேர்தலாக என எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.