என் மலர்
நீங்கள் தேடியது "2 பெண்கள் மாயம்"
- தேனி அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமாகினர்.
- புகாரின்பேரில் மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி அருகே கடமலை க்குண்டுவை சேர்ந்தவர் பெத்தன் மகள் நிவேதா(17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் சம்பவ த்தன்று வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கடமலை க்குண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நிவே தாவை தேடி வருகின்றனர்.
கம்பத்தை சேர்ந்தவர் பொன்ராம் மகள் ஹரிதாதேவி(20). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மற்றும் அம்சாபுரம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மாமனார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தை மனைவி பழனியம்மாள் (53). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். அதன் பிறகு மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகில் உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி பிரவீனா (24). இவர் வேலுச்சாமிக்கு 2வது மனைவியாவார். இவர்களுக்கு 1 பெண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போடி புதூர் வடிவேல் நகரை சேர்ந்த நர்சிங் மாணவி மற்றும் ஒரு பெண் மாயமானார்கள்.
- புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி புதூர் வடிவேல் நகரை சேர்ந்த பழனிவேல் மகள் மாரீஸ்வரி(17). இவர் சத்தியமங்கலத்தில் நர்சிங் படித்து வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லை எனக்கூறி சொந்தஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த மாரீஸ்வரி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருநாக்கமுத்தன்பட்டி இந்திராகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லபாண்டி மனைவி மதுபாலா(24). இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. செல்லபாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அப்போதுமுதல் குழந்தை அவரது தாத்தா வீட்டில் வசித்து வந்தது.
சம்வத்தன்று மதுபாலா ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசிபோட்டு வருவதாக கூறிச்சென்று மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை மச்சக்காளை கொடுத்த புகாரின்பேரில் கூடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள அல்லிநகரம் கக்கன்கா லனியை சேர்ந்தவர் ஆண்ட வர் மகள் சரண்யா(18). கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தனக்கு உடல்நிலை சரியில்லை என கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
பின்னர் தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறை வானார். இதுகுறித்து அவரது தாய் வீரலட்சுமி அல்லிநகரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த பாலமுரு கன் மனைவி செல்வி(32). இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலைய த்தில் அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
- காலையில் எழுந்துபார்த்தபோது மாணவி வீட்டில் காணவில்லை.
- பதறிப்போன பெற்றோர் மாணவி உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூரில் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மாணவி வீட்டில் தூக்க சென்றார். காலையில் எழுந்துபார்த்தபோது மாணவி வீட்டில் காணவில்லை.
இதனால் பதறிப்போன பெற்றோர் மாணவி உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாணவி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவியின் தந்தை அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பெருமாள் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் அருள்மொழி (வயது20). இவர் பி.ஏ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர். மீண்டும் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து நாராயணன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அருள்மொழியை தேடிவருகின்றனர்.
- சம்பவத்தன்று வெங்கடேசன் வழக்கம்போல் கிருஷ்ணகிரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
- வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு ஜோதி மட்டும் வெளியே சென்றதாக தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி அருகே இருளப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டில் தூங்க சென்றார். அதிகாலையில் மாது எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பல இடங்களில் தனது மகளை தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது தந்தை ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மாரண்டஅள்ளி ஜி.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி (27). இவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும், நிகிதா (3½) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன் வழக்கம்போல் கிருஷ்ணகிரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் போன் எடுக்கவில்லை. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜோதி வெளியே சென்றதாக தெரிவித்தனர். உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு ஜோதி மட்டும் வெளியே சென்றதாக தெரியவந்தது. உடனே அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் ஜோதி கிடைக்கவில்லை. இதனால் அவர் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து வெங்கடசேன் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோதியை தேடிவருகின்றனர்.
- சம்பவத்தன்று கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- கடந்த 29-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரம்யா திரும்ப வீடு திரும்பவில்லை.
தருமபுரி,
தருமபுரி பகுதியை சேர்ந்தவர் 16 வயது கல்லூரி மாணவி. இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது21). இருவருக்கும் திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது.
இந்நிைலயில் கடந்த 29-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரம்யா திரும்ப வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள அருந்ததியர் காலணி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் பாட்டியான பொன்னி வீட்டில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து பொன்னி கொடுத்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கல்கூட அள்ளி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகுனா (வயது 29).
சம்பவத்தன்று ஆதார் திருத்தம் மேற்கொள்ள சுகுனாவை பாலக்கோடு தாலுகா அலுவலகத்திற்கு மகாலிங்கம் ஆட்டோவில் கூட்டி சென்று விட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினை மற்றும் கைக்குழந்தையுடன் வீட்டைவிட்டு சென்ற பெண்களை காணவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டி காளி யம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி(27) என்ற மனைவியும், விஸ்வந்த்(1) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக ஈஸ்வரன் ஊருக்கு வந்திருந்தார்.
அப்ேபாது அவரது மனைவி முனீஸ்வரி குழந்தையுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானர். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
ஜெயமங்கலம் அருகில் உள்ள கீழகாமக்காபட்டிைய சேர்ந்த வைரமுத்து மனைவி நந்தினி(30). வைரமுத்து மீன்பிடித்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் ஜீவானந்தம்(8). கடன் பிரச்சினை இருந்துவந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் சம்பவத்தன்று நந்தினி தனது குழந்தையுடன் வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி அருகே மூதாட்டி மற்றும் இளம்பெண் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மனைவி லட்சுமியம்மாள்(80). சம்பவத்தன்று கடைக்கு சென்றுவருவதாக கூறிச்சென்ற லட்சுமியம்மாள் மாயமானார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் தாமஸ்காலனியை சேர்ந்தவர் அந்தோணி மகள் பாஸ்டினா(21). இவர் பி.ஏ.பி.எட் படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தார். சம்பவத்தன்று செல்போனுக்கு ரீஜார்ஜ் செய்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.
நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாஸ்டினாவை தேடி வருகின்றனர்.
- கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமாகினர்
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் ஐஸ்கூல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் விமலா(20). இவர் பி.காம் முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அருகில் உள்ள மருத்து கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது அம்மா செல்லத்தாய் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தேவதானப்பட்டி 15-வது வார்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகள் சந்தனேஸ்வரி(19). இவர் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அருகில் இருந்த கடைக்கு சென்ற சந்தனேஸ்வரி மாயமானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினை காரணமாக 2 பெண்கள் கைக்குழந்தைகளுடன் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூர் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது29). இவருக்கும் கற்பகம் (25) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகளும், கார்த்திகேயன் என்ற 1½ வயது மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற கற்பகம் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுசி (20). இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.
சம்பத்தன்று சுசி தனது குழந்தையுடன் தேனிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து சுசியின் தாய் லட்சுமி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.