search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள்கள் மோதல்"

    • சண்முகம் லட்சுமி இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர்.
    • சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    வானூர் அருகே அருவாப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி லட்சுமி (55). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர். அப்போது கிளியனூர் சாலையில் சென்ற போது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் சண்முகம், லட்சுமி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் லட்சுமி, சண்முகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சண்முகம் உயிர் தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    சேலம்:

    சேலம் அயோத்தியா பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் அடுத்த முட்டை கடை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (வயது 22). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எருமாபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியி லேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து கிச்சிப்பா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.
    • மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யா ணசுந்தரம்.இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது சொந்த ஊரில் திருவிழாவை காண்பதற்கு இரு சக்கர வாகனத்தில் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடது புறமாக சென்று கொண்டிருக்கும் பொழுது அதே எதிர் திசையில் வடக்கு காட்டு கொட்டாய் தென் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் அதிவேகமாக வந்து கல்யாணசுந்தரம் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தினமீது மோதினார்.இந்த விபத்தில் கல்யாணசுந்தரம், அவரது மனைவிமஞ்சுளா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகுகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே காட்டு கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 27) இவர் நேற்று இரவு நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் நேரு சிலை வழியாக என்எல்சி ஆர்ச் கேட்டுக்கு தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது இவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் நெய்வேலி அரசுகுழி பகுதியைச் சேர்ந்த செந்தமிழர் மகன் பிரசாந்த் (19) வந்தார். இருவரும் எதிர்பாராத நேரத்தில் வேகமாக மோதிக்கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சச்சிதானந்தம் பிரசாந்த் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சச்சிதானந்தத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதை பார்த்த அக்கமுக்கு உள்ளவர்கள் அவர்களை மீட்டு என்எல்சி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சச்சிதானந்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுல் ஹமீர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×