search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்பவானி பாசனம்"

    • முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • பழையகோட்டை பகுதி கீழ்பவானி பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க, பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதில், அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளை சேதப்படுத்தியும், மரங்களை வெட்டியும், அரசு அதிகாரிகளும், ஒப்பந்தாரர்களும் செயல்பட்டு வருவதைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் நேற்று முன்தினம் முதல் தினமும் ஒரு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி 3-வது நாளாக இன்று காலை, ஈரோடு அடுத்துள்ள நத்தக்காடையூர், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆகஸ்ட் 15 அன்று கீழ்பவானி வாய்க்காலில், பாசன நீர் திறந்துவிட வேண்டும்.

    நல்ல நிலையில் இருந்த மண்கரைகளை சேதப்படுத்தி, அந்த இடங்களில் கட்டுமானங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல் தயாரித்த மோகன கிருஷ்ணன் அறிக்கையை திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண்: 276ஐ அரசு உறுதியாக ரத்து செய்ய வேண்டும். 68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும்.

    வாய்க்கால் கரையில் மண் திருட்டு, நீர் திருட்டு மற்றும் மரங்களை வெட்டி திருடுவது மற்றும் பவானி ஆறு மாசுபடுதல் உள்ளிட்ட செயல்களுக்கு காரண மானவர்கள், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இதில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை, இயற்கை ஆர்வலர் பொடாரன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி செங்கோட்டையன் மற்றும் வெள்ளியங்காடு, மருதுறை, நத்தக்காடையூர், பழையகோட்டை பகுதி கீழ்பவானி பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று கீழ்பவானி கால்வாயில் பாசன நீர் திறந்து விட வேண்டும்.
    • முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    சென்னிமலை:

    கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    அதில் அரசு அறிவிப்புக்கு மாறாக மண்கரைகளை சேதப்படுத்தி வருவதை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் இன்று முதல் தினம் ஒரு பகுதியில் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி முதல் நாளான இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்பவானி வாய்க்காலின் 83-வது மைலில் உள்ள ஓட்டக்குளம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று கீழ்பவானி கால்வாயில் பாசன நீர் திறந்து விட வேண்டும். நல்ல நிலையில் இருந்த மண் கரைகளை சேதப் படுத்தி அந்த இடங்களில் கட்டுமானங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் தயாரித்த மோகன கிருஷ்ணன் அறிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண். 276-ஐ அரசு ரத்து செய்ய வேண்டும்.

    68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும்.

    வாய்க்கால் கரையில் மண் திருட்டு, மர திருட்டு, நீர் திருட்டு, பவானி ஆறு மாசுபடுதல் உள்ளிட்ட செயல்களுக்கு காரணமானவர்கள் மற்றும் துறை அதிகாரிகள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் ஓட்டக்குளம் பகுதி கீழ்பவானி பாசன தாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசால் ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமா் மோடி கீழ்பவானி பாசனக் கால்வாய் புனரமைப்பு துவக்கிவைத்தாா்
    • சில விவசாய சங்கங்கள் சாா்பில் கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் போடக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கீழ்பவானி பாசனக் கால்வாய் புனரமைப்பு செய்வது குறித்து பா.ஜ.க. சாா்பில் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டது. முத்தூா் மங்களப்பட்டியில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் இதனை தொடங்கி வைத்தாா்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசால் ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமா் மோடி இதனை துவக்கிவைத்தாா்.ஆனால், சில விவசாய சங்கங்கள் சாா்பில் கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் போடக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் நடந்த தோ்தல் பிரசாரத்தில் விவசாயிகளின் கருத்தறிந்து திட்டம் நிறைவேற்றப்படும் என தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

    விவசாயிகளின் மற்றொரு தரப்பினா் கால்வாய்களுக்கு கான்கிரீட் போட வேண்டும் என்றனா்.இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் மங்களப்பட்டி முதல் அரச்சலூா் வரை மதகுகள், கரைகள் எப்படி இருக்கிறது என்பது குறித்துநேரடியாக ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று பா.ஜ.க.வினா் தெரிவித்தனா்.

    ×