என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "2 பேர் படுகாயம்"
- உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் மினி லாரி நின்று கொண்டிருந்தது.
- இன்று அதிகாலை இந்த நெடுஞ்சாலையில் வந்த கார் இந்த மினி லாரி மீது மோதியது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் மினி லாரி நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை இந்த நெடுஞ்சாலையில் வந்த கார் இந்த மினி லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து போனவர்களில் ஒருவர் கார் டிரைவர் என்பதும், மற்றொருவர் கோவையைச் சேர்ந்த விவேகானந்தன் என்பதும் தெரியவந்தது. மேலும், பலத்த காயம் அடைந்தவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சரவணன், மகாலிங்கம் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருநாவலூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு சொகுசு கார் அதிவேகமாக ஏ.வி.ஆர் ரவுண்டானா நோக்கி வந்து கொண்டிருந்தது.
- 2 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு முதியவர் மீது மோதியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம், ஜங்ஷன் பகுதியில் இருந்து இன்று காலை 9.30 மணி அளவில் ஒரு சொகுசு கார் அதிவேகமாக ஏ.வி.ஆர் ரவுண்டானா நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த சொகுசு கார், 2 கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவிகளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் லேசான காயத்துடன் தப்பினார்.
இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் அந்த சொகுசு காரை ஓட்டி வந்த இளைஞர் உட்பட 2 பேரை சாரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த இளைஞர்கள் குடி போதையில் இருப்பது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், சேலம் அழகாபுரம் சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகள் கிருத்திகா (வயது 19), பெருமாள் மகள் சிவரஞ்சனி (19) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதில் ஒரு மாணவிக்கு கால் முறிவும், மற்றொரு மாணவிக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டு உள்ளது.மேலும் சொகுசு காரை ஓட்டி வந்தவர்கள், சேலம் சித்தனுர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் விஜய் (26), சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் அருள் (35) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாறுமாறாக வந்த கார் மோதி கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்ததும், அந்த வழியே சென்றவர்கள் சிதறி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி மினி லாரி சென்றது.
- நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் மோதாமல் இருக்க கார் டிரைவர் லாவகமாக திருப்பும் போது லாரி ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி மினி லாரி சென்றது. அப்போது அந்த லாரி ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் இன்றி நின்றது. நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த கார் மோதாமல் இருக்க கார் டிரைவர் லாவகமாக திருப்பும் போது லாரி ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் பள்ளத்தில் இருந்து காரை மீட்டு படுகாயம் அடைந்த மதுரையைச் சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த நபர் மாவீரன் உள்ளிட்டோரை சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகமான போதை யில் காரை இயக்கியதால் ஏரிச்சாலை கலையரங்கம் பகுதியை ஒட்டிய சாலை ஓர நடைமேடையில் தாறு மாறாக ஓடியது.
- போலீசார் விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
நாகர்மாகோவில் அருகே மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கொடைக்கானலுக்கு காரில் வந்தார். அதிகமான போதை யில் காரை இயக்கியதால் ஏரிச்சாலை கலையரங்கம் பகுதியை ஒட்டிய சாலை ஓர நடைமேடையில் தாறு மாறாக ஓடியது.
இதில் சாலையோரம் நின்றிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாடகை சைக்கி ள்கள், இருசக்கர வாகனம், அங்கு நின்றிருந்த புகை ப்படக்காரரின் பிரிண்டர் மெஷின் ஆகியவை மீது மோதியது. மேலும் சாலை யோர சோளவியாபாரியான லட்சுமி (45) என்ற பெண், வேலூர் மாவட்டம் குடியா த்தம் பகுதியை சேர்ந்த நளினி (36) என்ற சுற்றுலா பயணி ஆகியோர் மீதும் மோதியதால் அவர்கள்படு காயம் அடைந்தனர். உடன டியாக அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து 2 பேரையும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கொடைக்கானல் போலீசார் விபத்து ஏற்படு த்திய சுரேசை கைது செய்து அவர் ஓட்டி வந்த காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஏரிச்சாலை முழுவதும் சில மாதங்களுக்கு முன் சாலையோர ஆக்கிர மிப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தள்ளுவண்டிக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.