என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 243057"

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மேக்கா மண்டபம் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 50).

    இவரது மகள் ஆரல்வாய் மொழி அருகே செண்பக ராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.மகளை பார்ப்பதற்காக இன்று காலை ஜோசப் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் தோவாளை அருகே முத்து நகர் பகுதியில் குருச டிக்கு செல்லும் சாலை யில் திரும்பும் போது நெல்லை யிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் ஜோசப் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட ஜோசப் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கினார். பஸ் சக்கரத்தில் சிக்கிய ஜோசப் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.அவரது மோட்டார் சைக்கிளும் பஸ்சுக்கு அடியில் சிக்கியது.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பஸ்சுக்கு அடியில் சிக்கிய மோட் டார் சைக்கிளையும் சக்க ரத்தில் சிக்கிய ஜோசப்பை யும்போலீசார் போராடி மீட்டனர்‌.

    பின்னர் ஜோசப்பின் உடல் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜோசப் பலியானது குறித்து அவரது மகள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகளை பார்க்க வந்த இடத்தில் தந்தை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
    • கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    பட்டுக்கோட்டை கோட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.

    கூட்டத்திற்கு தஞ்சை கூடுதல் கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டங்களில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் நுகர்வோர் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து வரும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எரிவாயு சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.
    • ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் அஜய்ராஜ் சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல கூட்டம் அலைமோதியது
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமானோர் குவிந்திருந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போதும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ×