என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாலி செயின்"
- கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- பொதுமக்கள் எருமை மாட்டை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் வாசிம் மாவட்டத்தில் சார்சி கிராமத்தில் வசித்து வருபவர் ராம் ஹரி. இவரின் மனைவி கீதாபாய். வீட்டில் வளர்க்கும் எருமை மாட்டுக்கு இவர் தான் உணவு அளிப்பார்.
வழக்கம் போல் கீதாபாய் எருமை மாட்டுக்கு உணவு அளிக்கும்போது, தாலி செயின் கழன்று உணவுடன் விழுந்துள்ளது. அப்போது உணவோடு உணவாக தாலி செயினை விழுங்கியது எருமை மாடு.
சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் செயின் காணாமல் போனதை உணர்ந்த அவர், செயினை எருமை மாடு உட்கொண்டதை அறிந்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த மருத்துவ குழுவினர், எருமை மாட்டின் வயிற்றை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதித்த போது, உள்ளே தங்க நகை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் தங்க நகையை எருமை மாட்டின் வயிற்றிலிருந்து மருத்துவ குழுவினர் மீட்டனர். தொடர்ந்து எருமை மாட்டுக்கு 63 தையல்கள் போடப்பட்டது.
எருமை மாடு, தங்கச் சங்கிலியை விழுங்கி அது மீண்டும் மீட்கப்பட்ட தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எருமை மாட்டை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.
- வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்
- இதுகுறித்து மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒர்க்ஷாப் காலனியை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 39). இவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ரவி (42).
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மோகனபிரியா, அவரது கணவர் ரவி ஆகியோர் வீட்டில தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பின்புற கதவு திறந்து இருந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து மோகனபிரியா அணிந்திருந்த 2 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.
உடனே விழித்து ெகாண்ட அவர் திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். உடனே கணவர் ரவியும் எழுந்து வந்தபோது மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதுகுறித்து ரவி மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். வீட்டின் வெளியே தாலி கிடந்தது. அதை மீட்டு போலீசார் மோகனபிரியாவிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று அமரத்தானூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பூஜை அறையில் இருந்த ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர். அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள ராஜா என்பவரின் வீட்டிலும் கொள்ளைடிக்க முயன்றபோது சத்தம் கேட்டு ராஜா வெளியே வந்தபோது மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்