என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூர்யகுமார் யாதவ்"
- இரு அணிகள் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
- இந்திய அணி இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலை பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று விட்டது. இதில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் நான்காவது டி20 போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் பிளேயிங் XI:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
- இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, ஆனால் அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாங்கள் நடத்தபோவதில்லை என பாகிஸ்தான் கூறி வருகிறது.
இதற்கிடையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் வெளியில் வீடியோ கேம் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் சென்றனர். இவர்களை பார்த்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், அவர்களிடம், தயவுசெய்து ஒரு விஷயம் சொல்லுங்கள், நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யகுமார் யாதவ் அது நம் கையில் இல்லை என கூறினார். இதனை வீடியோ எடுத்த பாகிஸ்தான் ரசிகரை ரிங்கு சிங், வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார்.
- அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
செஞ்சுரியன்:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. செஞ்சுரியனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது.
திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 107 ரன்னும் (8 பவுண்டரி, 7 சிக்சர்), அபிஷேக் சர்மா 25 பந்தில் 50 ரன்னும் ( 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகாராஜ், ஷிமிலேன் தலா 2 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மார்கோ ஜான்சன் 17 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) கிளாசன் 22 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கவர்த்தி 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா , அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
இந்த போட்டியின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. பயம் இல்லாமல் ஆடுங்கள் என்பதை தான் நாங்கள் அணியின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். நாங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாட நினைத்தோமோ அதை செயல்படுத்தினோம். பயிற்சியின் போது அதிரடியாக ஆடுவதற்கு முயற்சி செய்கிறோம்.
வீரர்கள் சில போட்டிகளில் எளிதில் ஆட்டம் இழந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். ஆக்ரோஷமும், உத்வேகமும் இருந்தால் மட்டுமே 20 ஓவரில் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும்.
முதல் 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார். இதனால் இந்த ஆட்டத்தில் 3-வரிசையில் அனுப்பி வைத்தேன். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்ஸ்பர்கில் நாளை நடக்கிறது.
- இரு அணிகள் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
- இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்த போட்டியில் ரமன்தீப் சிங் இந்திய அணியில் அறிமுகமாகிறார்.
இந்திய அணியின் பிளேயிங் XI:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி
- இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:
முதல் பேட்டிங் ஆடும்போது பேட்ஸ்மேன்களால் எந்த ரன்கள் சேர்க்க முடிகிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் 125 ரன்களோ அல்லது 140 ரன்கள் எடுப்பதையோ விரும்பமாட்டோம்.
இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம்.
டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்ல வேண்டும்.
மிகச்சிறந்த பவுலிங்கை வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளது என தெரிவித்தார்.
- ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாட உள்ளார்.
- அந்த போட்டியில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் கோயம்புத்தூர் வந்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 2 கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அந்த கிரிக்கெட் மைதான ஊழியர்களை இன்ஸ்டாகிராமில் பாராட்டி உள்ளார். அதில் நம்பமுடியாத காட்சிகள்... கிரிக்கெட் விளையாட்டிற்குப் பிறகு இது போன்ற விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகிறது. கிரவுண்ட்ஸ்டாஃப்... ஜஸ்ட் வாவ், என பதிவிட்டிருந்தார்.
அக்டோபர் 13-ந் தேதி மாலை 5 மணிக்கும், அக்டோபர் 14-ம் தேதி காலை 7 மணிக்கும் மைதானத்தைக் காண்பிக்கும் முன்-பின் படங்களைப் பகிர்ந்துள்ளது.
அவர் கூறுவது போல கிரிக்கெட் போட்டியை மட்டும் பார்த்து ரசிக்கின்றோம். ஆனால் அதற்கு உதவியாக இருக்கும் ஊழியர்களை நினைத்து பார்ப்பது எத்தனை பேர் என்பது சந்தேகம் உள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 297 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 164 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஐதராபாத்:
இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தொடக்கம் முதலே ரன் மழை பொழிந்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன், சூர்யகுமார் ஜோடி வங்கதேச பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து அசத்தியது.
சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்தில் சதம் அடித்து, 111 ரன்னில் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்தில் 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரியான் பராக் 13 பந்தில் 34 ரன்னும், பாண்ட்யா 18 பந்தில் 47 ரன்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.
இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அந்த அணியில் ஹிருடோய் தனி ஆளாக போராடி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லிட்டன் தாஸ் 42 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி2 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.
- அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடி காட்டியது.
அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் 111 ரன்கள் எடுத்து சாம்சன் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களத்தில் இருந்த ரியான் பராக் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து சிக்சர் மழை பொழிந்தனர். 13 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ரியான் பராக் ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் 47 ரன்கள் குவித்து பாண்ட்யா ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது இந்திய அணி. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2 ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.
- இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது.
- சாம்சன் - சூர்யகுமார் ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அதிரடியாக விளையாடி வருகிறது.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர்.
அதிரடியாக விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.
இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடி வருகிறது.
- ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
- இந்த தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், இந்தூர் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 2 கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் இஷான் கிஷன் (ஜார்கண்ட்), ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானே, பிரித்வி ஷா (மும்பை), அபிமன்யு ஈஸ்வரன், விருத்திமான் சஹா (பெங்கால்), ருதுராஜ் கெய்க்வாட் (மராட்டியம்), சாய் சுதர்சன் (தமிழ்நாடு), புஜாரா (சவுராஷ்டிரா), ஹனுமா விஹாரி (ஆந்திரா), மயங்க் அகர்வால் (கர்நாடகா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காணுகிறார்கள். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழக ஆல்-ரவுண்டர் பாபா அபராஜித் இந்த சீசனில் கேரளா அணிக்காக ஆடுகிறார்.
இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளார். அவர் 2-வது போட்டியில் மகாராஷ்டிராவுக்கு எதிரான விளையாட வாய்ப்புள்ளது.
- 41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன்.
- 170 - 175 ரன்களை கட்டுப்படுத்தும் போது பவுலர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினேன்.
வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய வங்கதேசம் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகமதுல்லா 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2 - 0 (3) என்ற கணக்கில் வென்றுள்ளது.
41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது போன்ற சூழ்நிலையை நான் பார்க்க விரும்பினேன். 41-3 என தடுமாறும் போது மிடில் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன். ஐபிஎல் அணிக்காகவும் வலைப்பயிற்சியிலும் என்ன செய்கிறீர்களோ அதை இந்திய அணிக்காக செய்யுங்கள் என்று வீரர்களிடம் கூறியுள்ளேன். ஜெர்ஸி மட்டுமே மாறும். மற்ற அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறியுள்ளேன்.
சில நேரங்களில் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தரால் பந்து வீச முடியாது. அதனால் 170 - 175 ரன்களை கட்டுப்படுத்தும் போது பவுலர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினேன். எனவே ஹர்திக் பாண்டியா இல்லாமல் அதிகமான பவுலர்களை பயன்படுத்தினேன். இது நித்திஷ் ரெட்டியின் நாள். எனவே அவருக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பினேன்.
என்று சூர்யகுமார் கூறினார்.
- இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
- இதற்காக சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டெல்லி சென்றது.
புதுடெல்லி:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்தில், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் குவாலியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது. இதற்காக இந்திய அணி டெல்லி சென்றது. அங்கு அவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு நடைப்பெற்றது. இதை பார்த்த சூர்யகுமார் குத்தாட்டம் போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Gwalior ✈️ Delhi#TeamIndia have arrived for the 2nd #INDvBAN T20I ??@IDFCFIRSTBank pic.twitter.com/jBWuxzD0Qe
— BCCI (@BCCI) October 8, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்