என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை"

    • தோப்பூர் பக்கமே போகாமல் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றதை நாடு பார்த்தது.
    • பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்துகின்ற ஒரு நாடகம் என்பதை நாடு அறியும்.

    மதுரை:

    எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கியது தொடர்பாக மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    எய்ம்ஸ் கட்டுமான பணியை ரகசிய திட்டத்தை போல மத்திய அரசு தொடங்கி உள்ளது. கடந்த வாரம் பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். அப்போது அவரே இதனை தொடங்கி வைத்திருக்கலாம். ஆனால் உண்மை சுடும். எனவே தோப்பூர் பக்கமே போகாமல் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்றதை நாடு பார்த்தது. ஒரு திட்டத்தினுடைய அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் தொடங்குவதற்கு இடையில் 5 ஆண்டுகள் உருண்டோடிய புதிய வரலாற்றை பா.ஜ.க. ஆட்சியில் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இந்த செயல் வெளிப்படையாக பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்துகின்ற ஒரு நாடகம் என்பதை நாடு அறியும். பொறியியல் துறையை மட்டும் வைத்து தற்போது பணியை தொடங்கி உள்ளார்கள். 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அந்த ஆண்டு ஜனவரி மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. இதற்காக மார்ச் மாதத்தில் திட்டப் பணியை தொடங்கி உள்ளார்கள். இவை அனைத்தும் தேர்தலுக்காக மக்களை திசை திருப்புகிற நாடகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைக்கவும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும்.
    • மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

    கட்டுமானப்பணியில் 'எய்ம்ஸ்' நிர்வாகத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ள மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகள்:

    * கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைக்கவும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும்.

    * மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், தரமான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும்.

    * மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

    * எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்ய வசதிகள் ஏற்படுத்துதல், கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் கட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது.
    • மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன்.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பினார். விவாதத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது என்று கூறிய அவர் தொடர்ந்து பேசியதாவது,

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடத்தப்படவில்லை ஏன்? என கேள்வி எழுப்பினார்.

     

    இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது,

    மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன்

    தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

    • மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.
    • ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை.

    பாராளுமன்ற மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா,

    மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் என்றும் தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில்,

    இன்று மக்களவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றிய எந்த விபரமும் இல்லை.

    அவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது "ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதில் தொழிற்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுவிட்டது விரைவில் சரிசெய்து பணிகளை துவக்கிவிடுவோம்" என்றார்.

    மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடைபெறும் பணிகளில் மட்டும் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படக்காரணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும்.
    • கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.

    இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை தொடங்கப்படவில்லை.

    எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும். இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    ஆனால் நீதிபதிகள், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய முடிவு.
    • அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்துவோம்

    கடந்த 2019- ஆண்டு பிரதமர் மோடியால் மதுரை அருகே தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பது, குறித்த உத்தரவு தற்போதுதான் கிடைத்திருக்கிறது. முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தில் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன்.

    இதுவரை நடந்தது குறித்த முழு விவரங்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். அதன்படி அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். எல்லா தரப்பினரையும் ஒருங்கிணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பாக செயல்படுத்த பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.
    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியபடி 95 சதவீத பணி நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நாங்கள் பார்க்கச் சென்றோம்.

    ஆண்டிபட்டி:

    தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் 750 படுக்கைகள், 250 ஐ.சி.யு படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

    இதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பதில் அளித்து வருகின்றனர்.

    இதனிடையே தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியபடி 95 சதவீத பணி நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நாங்கள் பார்க்கச் சென்றோம். அப்போது அங்கு கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களை காணவில்லை. எனவே மாயமான கட்டிடங்களை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
    • டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக 31-வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் இதுவரை 12 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 87.7 சதவீதம் பேர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 55.9 சதவீதம் பேர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    15 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 89.4 சதவீதம் நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 74.4 சதவீதம் நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    மேலும் 65 ஆயிரத்து 253 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள், தமிழ்நாடு மாநில அளவில் 76 லட்சத்து 89 ஆயிரத்து 40 தடுப்பூசிகள் என போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

    முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். அதேபோன்று புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் கட்டுவதற்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் விரைவில் வெளியிடப்பட்டு 5 மாதங்களுக்குள் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 2,500 முதல் 2,700 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த மாதங்களாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

    மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் மாத இறுதிக்குள் 1,021 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 4,308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மதுரை பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×