search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவரது பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன் சரியாகப் படிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டனர்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தை தரும் சம்பவங்கள் தொடர்பாக இன்றைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகிறது. அதனால் சில நிறுவனங்கள் மன்னிப்பு கோரும் சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் இதில் சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாராட்டுகளையும் பெறுகின்றன.

    ஆனால் இப்போது நடைபெற்றுள்ள சம்பவம் வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை பெற்றுள்ளது. இதுதொடர்பாக அமிர்தா முருகேசன் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் ஐஸ்கிரீம் காம்போ தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து சரியாக செய்துள்ளீர்கள் (சரியான காம்போ) என்று பிக்பாஸ்கெட் நிறுவனத்தை டாக் செய்து பாராட்டும் விதமாக பதிவிட்டு இருந்தார்.

    இந்த பதிவை சரியாக கவனிக்காத பிக்பாஸ்கெட் நிறுவனம், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். DM மூலம் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண்ணுடன் எங்களுக்கு உதவ முடியுமா? இந்த சிக்கலை தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என கூறியுள்ளது.

    இந்த பதிவுகளை இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பார்த்துள்ளனர். பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் நகைச்சுவையாக பதிவிட்டாலும், ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன் சரியாகப் படிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அந்த வயதான ஜோடியும் பங்கேற்று இருந்தது.
    • இளையவர்கள் சுற்றி நின்று கைதட்ட மூத்த ஜோடி துள்ளித் துள்ளி தாண்டியா ஆடுகிறார்கள்.

    பண்டிகை என்றாலே எல்லோருக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கும். நவராத்திரி பண்டிகையில் ஒரு வயதான ஜோடி மகிழ்ச்சியாக தாண்டியா நடனம் ஆடி இளசுகளையே மிரள வைத்திருக்கிறார்கள். அவர்களின் நடனம் சமூக வலைத்தளத்தில் 2 நாளில் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.

    குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அந்த வயதான ஜோடியும் பங்கேற்று இருந்தது. விழாவில் உற்சாகமான இசையைக் கேட்டதும் அவர்களுக்குள் இளமை பெருக்கடுத்துவிட ஆனந்தத்தில் தாண்டியா ஆட ஆரம்பித்துவிட்டனர்.

    உடனே அக்கம்பக்கத்தில் இருந்த இளம் ஜோடிகள்கூட, தாங்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு மூத்த ஜோடியின் ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். இளையவர்கள் சுற்றி நின்று கைதட்ட மூத்த ஜோடி துள்ளித் துள்ளி தாண்டியா ஆடுகிறார்கள். இணையவாசிகளின் இதயங்களையும் கவர்ந்து வைரலானார்கள்.

    • கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.
    • தள்ளுவண்டி மூலம் சாலையோரத்தில் டீக்கடை அமைத்து தனது சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளார்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சிம்ரன் குப்தா. மாநில அளவிலான அழகி போட்டிகளில் பட்டம் வென்ற அவர் டெல்லியில் தங்கியிருந்து மாடலிங் துறையில் கொஞ்சம் காலம் ஈடுபட்டு வந்தார்.

    கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் அழகை மட்டும் நம்பினால் சம்பாதிக்க முடியாது என முடிவு செய்தார். இதனால் தள்ளுவண்டி மூலம் சாலையோரத்தில் டீக்கடை அமைத்து தனது சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளார்.

    தற்போது இவரின் இந்த டீக்கடை யூடியூபர்களால் பிரபலமாகி வர ஏராளமானோர் அவருடைய கடைகளில் குவிந்து வருகிறார்கள். டீக்கடையில் நின்றபடி சிம்ரன் குப்தா டீ தயாரிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோவை ஒரு மாணவர் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
    • வீடியோவை பார்த்த பலரும் மருத்துவ படிப்புக்கு இவ்வளவுதான் செலவா என வியந்து உள்ளனர்.

    டாக்டர் ஆக வேண்டும் என்பது மாணவர்கள் பலரது கனவாக உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் நீட் தேர்வு எழுதுகின்றனர். எனினும் டாக்டர் படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

    இவ்வாறு போட்டி போட்டு சேரும் மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோவை ஒரு மாணவர் வெளியிட அது சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

    அந்த வீடியோவில் இந்தியாவின் முதன்மை மருத்துவ கல்லூரியான எய்ம்ஸ் மாணவர் விடுதியை சுற்றிக் காண்பித்தார். அப்போது அவர் கூறுகையில், விசாலமான படுக்கை, மேஜை, அலமாரி மற்றும் சுழலும் நாற்காலி போன்ற வசதிகளுக்கு மாதம் ரூ.15 வாடகை, 24 மணி நேர மின்சாரத்துக்கு மாதம் ரூ.5 மட்டுமே செலவாகிறது என பேசினார்.

    இதனை பார்த்த பலரும் மருத்துவ படிப்புக்கு இவ்வளவுதான் செலவா என வியந்து உள்ளனர்.



    • குட்டி பென்குயின் தற்போது பூங்காவின் முக்கிய அங்கமாக மாறி உள்ளது.
    • ‘பெஸ்டோ’ விளையாடி மகிழுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் அன்பை பெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் பிரபல உயிரியல் பூங்கா உள்ளது. வனவிலங்குகள் மட்டுமின்றி டால்பின்கள், கடல் சிங்கம், நீர்நாய் போன்ற அரியவகை நீர்வாழ் மிருகங்களும் இங்கு உள்ளன.

    குறிப்பாக அந்த பூங்காவில் வடதுருவங்களில் உள்ளது போல பனிக்கட்டிகளால் ஆன நிலப்பரப்பை உண்டாக்கி பென்குயின்களை பரமாரித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அங்கு பென்குயின் ஒன்று புதிதாக பிறந்தது. 'பெஸ்டோ' என பெயரிட்டு பூங்கா ஊழியர்களை அதை கருத்துடன் பராமரித்து வந்தனர். அந்த குட்டி பென்குயின் தற்போது பூங்காவின் முக்கிய அங்கமாக மாறி உள்ளது.

    இயல்பை மீறி அதிக எடையுடன் கூடிய இந்த குட்டி பென்குயின் செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. வயது வித்தியாசம் எதுமின்றி சக பென்குயின்களுடன் 'பெஸ்டோ' விளையாடி மகிழுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் அன்பை பெற்று வருகிறது.

    • வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வலைத்தளவாசிகளின் பாராட்டை அள்ளி உள்ளார்.
    • வீடியோவில் தாய், 10 வயதுடைய மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுத் தருகிறார்.

    கடிதம் எழுதுவது கடந்த காலம். ஆனால் இது இ-மெயில், வாட்ஸ்-அப் காலம். இன்ஸ்டாவிலும், ஸ்னாப்சாட்டிலும் அரட்டை அடிக்கிறது இன்றைய குழந்தைகள். அவர்கள் கடிதம் எழுதிப்படிப்பது பள்ளிப் பாடத்தில் மட்டுமே. அது அவர்களுக்கு விடுமுறை கடிதம் எழுதுவதற்குத்தான் பெரிதும் பயன்படுகிறது.

    ஆனால் உறவுமுறையை வளர்க்க ஒரு காலத்தில் கடிதம் மட்டுமே இருந்தது, அது அளவில்லா மகிழ்ச்சிப் பெட்டகமாக பாதுகாக்கப்பட்டது என்பதை இன்றைய குழந்தைகள் அறிய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கும், கடிதத்திற்கும் தொடர்பே இல்லை. அவர்கள் பயன்படுத்துவதும் இல்லை.

    இந்த நிலையில் ஒரு இந்திய பெண், தனது மகளுக்கு கடிதம் எப்படி எழுதுவது, அதை எப்படி அனுப்புவது என்பதை நேரடியாக விளக்கி மகளின் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வலைத்தளவாசிகளின் பாராட்டை அள்ளி உள்ளார்.

    வீடியோவில் தாய், 10 வயதுடைய மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுத் தருகிறார். பின்னர் இருவரும் தபால் நிலைய வாசலுக்கு வந்து இறங்குகிறார்கள். உள்ளே சென்று அஞ்சல் வில்லைகளை வாங்கி கடிதத்தில் ஒட்டுகிறார்கள். பின்னர் தபால் பெட்டிக்குள் கடிதத்தை சிறுமி போட்டுவிட்டு மகிழ்ச்சி புன்னகை பூக்கிறாள். அது மறுநாள் தாத்தாவுக்கு கிடைத்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்கிறாள். தாத்தா கடிதத்தை பிரித்து புன்னகையுடன் படிப்பதாக வீடியோ முடிகிறது. வீடியோவின் பின்னணியில் தாய் பேசும் காட்சி இணைக்கப்பட்டு உள்ளது. வீடியோ வைரலானது.


    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • திடீரென பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புனேயில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் ஒன்று விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    55 வினாடிகள் ஓடும் வீடியோவில் சாலையில் நின்று கொண்டிருக்கும் மாநகராட்சியின் தண்ணீர் டேங்கர் ஒன்று மெல்ல நகர்ந்த போது ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பின்பக்க சக்கரங்கள் முதலில் விழுந்தது. அதன்பின் வாகனம் முழுவதும் பள்ளத்தில் விழுந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்தில் மூழ்கிய டேங்கரை மீட்டனர். திடீரென பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

    பாண்டாக்களின் பூமியாக கருதப்படுகிறது சீனா. ஆனால் அங்கு நிஜ பாண்டாக்களுக்குப் பதிலாக நாய்களுக்கு வர்ணம் பூசி கரடியாக்கி காட்சிக்கு வைத்த வினோதம் நிகழ்ந்துள்ளது.

    ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்வைக்கு விடப்பட்டிருந்த பாண்டாக்களில் ஒன்று நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு மூச்சிரைக்கும் காட்சியும், திடீரென நாய்போல குரைக்கத் தொடங்கியதும் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

    அப்போதுதான் அது வர்ணம் பூசப்பட்ட நாய் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த கூண்டில் இருந்த நாய்க் கரடிகளை வீடியோவாக எடுத்து பகிர்ந்து வைரலாக்கினார்கள். அது உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது. அதன்பிறகு பூங்கா நிர்வாகம் நாய்களுக்கு பெயிண்ட் பூசிய உண்மையை ஒப்புக்கொண்டது. சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

    • உண்மையென்று நம்பிய ஆசிரியை பதறியடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடி வருவதுபோல வீடியோ தொடங்குகிறது.
    • மாணவர்கள் குழு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட இதுவரை 5.4 கோடி பேர் ரசித்து உள்ளனர்.

    மாணவப் பருவம் இனிமையானது. மாணவ குறும்புகள் ரசிக்க வைக்கக்கூடியதாக இருக்கும். பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஆசிரியையை கவுரவிக்க, வித்தியாசமாக இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் தனியார் பள்ளியில், ஆசிரியர் அறையில் இருக்கும் ஆசிரியையிடம் ஒரு மாணவர் வந்து, வகுப்பில் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகவும், விரைந்து வந்து விலக்கும்படியும் கூறுகிறார். இதை உண்மையென்று நம்பிய ஆசிரியை பதறியடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடி வருவதுபோல வீடியோ தொடங்குகிறது.

    அவர் வகுப்பறைக்குள் நுழைந்து சண்டையிடுவதுபோல நடித்த ஒரு மாணவரை கையைப் பிடித்து இழுத்து விலக்கிவிட்டதும், திடீரென பட்டாசு வெடித்து கரவொலி எழுப்பப்படுகிறது. அவர்கள் ஆசிரியையக்கு வாழ்த்துச் சொல்லி பரிசு தருகிறார்கள். அப்போதுதான் அது சண்டையல்ல, தன்னை மகிழ்விக்க மாணவர்கள் நடத்திய நாடகம் என்பதை அறிந்த ஆசிரியை நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சுவிட்டு புன்னகை பூக்கிறார். மாணவர்கள் பரிசுப் பொருட்களை நீட்டுகிறார்கள்.

    மாணவர்கள் குழு இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட இதுவரை 5.4 கோடி பேர் ரசித்து உள்ளனர். பல லட்சம் பேர் 'லைக்' தெரிவித்து உள்ளனர்.

    • வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி ஒரே நாளில் சுமார் 8 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றதுடன், பரபரப்பையும் பற்ற வைத்தது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது அந்த சுங்கச்சாவடி. அந்த வழியாக சென்ற கர்நாடகாவை சேர்ந்த ஒரு டிரைவரின் வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தி கட்டணம் வசூலித்தனர்.

    அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் இந்தியில் பேசி உள்ளனர். இதற்கு கர்நாடக டிரைவர் எதிர்ப்பு தெரிவித்தார். 'நீங்கள் ஏன் கன்னடத்தில் பேசவில்லை?' என்று கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர், தனது செல்போனை எடுத்து வீடியோவாக பதிவு செய்து கொண்டே டிரைவருடன் வாக்குவாதம் செய்தார். 'இந்தியா முழுவதும் இந்தி பேசப்படுகிறது' என்று வாதம் செய்கிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் மேலும் வளர்ந்தது.

    இதுபற்றிய வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி ஒரே நாளில் சுமார் 8 லட்சம் பேரின் பார்வைகளைப் பெற்றதுடன், பரபரப்பையும் பற்ற வைத்தது. விவாத முடிவில் டிரைவர், சுங்கச்சாவடி ஊழியரின் கன்னத்தில் அறைந்ததாகவும் சர்ச்சை கிளம்பி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது.
    • வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள்.

    நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து டிராக்டரை காப்பாற்ற போலியாக சாமியாடும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர், கடனாக டிராக்டர் வாங்கியதாக தெரிகிறது. கடன் தொகையை சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் டிராக்டரை எடுத்துச் செல்ல வந்துள்ளனர். இதை அறிந்த விவசாயி குடும்பத்து இளம்பெண் திடீரென சாமி வந்ததுபோல ஆடத் தொடங்கினார். அவர் கைகளில் குங்குமத்தை பூசிக் கொண்டு, நிதி நிறுவன ஊழியர்களை நோக்கி, வண்டியை எடுக்காதே, எடுத்தால் மோசமான விளைவுகளை சந்திப்பாய் என்று சாபமிட்டாள்.

    வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது. வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள். இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை ரசித்துள்ளனர்.

    • பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாத் இந்திரபுரி பகுதியில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலந்து வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை அன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் சுவை வேறுவிதமாக இருந்ததால் வாடிக்கையாளர் விசாரித்துள்ளார். அப்போதுதான், ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரையும் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.

    ×