search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் திருடன்"

    • பரத்குமார் தனது மோட்டார் சைக்கிளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தேடினார்.
    • மேகராஜை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் அரியமங்கலம் அம்மாக்குளம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் பரத் குமார் (வயது 20). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 2 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புடைய ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார்.

    இந்த மோட்டார் சைக்கிளை பரத்குமார் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மர்ம நபர்கள் இரவு அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்.

    இதையடுத்து பரத்குமார் தனது மோட்டார் சைக்கிளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தேடினார்.

    பின்னர் இது குறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரித்தபோது, அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ராஜ்(22), திருச்சி பாலக்கரை கூனி பஜாரைச் சேர்ந்த மேகராஜ்(31), அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த ஹரி பிரசாத் ஆகியோர் அந்த மோட்டார் சைக்கிளின் லாக்கை உடைத்து திருடியது தெரியவந்தது.

    பின்னர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்த மேகராஜ் மனைவி எலிசபெத் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் அரியமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் மேகராஜை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு செல்போன் டெம்பர் கிளாஸ் கைகளை கிழித்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து அரியமங்கலம் போலீசார் மேகராஜ் மனைவி எலிசபெத் (28), உறவினரான லாரன்ஸ் (19), திருச்சி பெரிய மிளகு பாறை சேர்ந்த மைக்கேல் (23), ஆதாம் (23 ), அறிவழகன் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மூன்று பேரையும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விடாமல் தடுத்து போராட்டம் நடத்திய பெண் உட்பட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • 6 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம், சாரதி மாளிகை மற்றும் ஆற்காடு ரோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர்‌. கடந்த ஒரு மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடு போனது.

    இது குறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது.

    இது குறித்து புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அந்த நேரத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். அவரை மடக்கி விசாரித்தனர். இதில் அவர் கலசபாக்கம் அருகே உள்ள ஆதம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 53) என்பது தெரியவந்தது.

    போலீஸ் விசாரணையில் முன்னுக்கு பின் பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர் வேலூர் பழைய பஸ் நிலையம் சாரதி மாளிகை ஆற்காடு ரோடு மற்றும் இன்று காலை செல்லியம்மன் கோவில் ஆகிய இடங்களில் 6 பைக்குகளை திருடியது தெரிய வந்தது.

    திருடிய வாகனங்க ளை வேலூர் பாலாற்றங்க ரையோரம் மறைத்து வைத்திருந்தார். அந்த 6 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் பழனியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×