search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அச்சகம்"

    • வெவ்வேறு சம்பவங்களில் அச்சக உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி சித்துராஜபுரம் கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது56). இவர் அதே பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத் தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்தநிலையில் செல்வராஜின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வராஜ் அச்சகத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    சந்தேக மடைந்த அவரது மனைவி செல்வி மற்றும் மகள் அச்சகத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது குடோனில் செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகா ரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் வடக்குபட்டியை சேர்ந்தவர் சங்கிலி.

    இவரது மகன் அய்யப்பன் (19). டிராக்டர் டிரைவரான இவர் வேலைக்கு செல்லாமல் பெற்றோரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனை அவர்கள் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த அய்யப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டகுளத்தை சேர்ந்தவர் சின்ன கருப்பசாமி. டிரைவரான இவருக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதில் விரக்தியடைந்த சின்னகருப்பசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பாண்டி யம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.
    • தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்து தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார்.

    தரங்கம்பாடி:

    தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினம் சனியன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் டென்மார்க் அரசரால் அனுப்பப்பட்ட ஜெர்மனி நாட்டு கிறிஸ்தவ மத போதகரான (புராட்டஸ்டாண்டு) சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினத்தையொட்டி தரங்கம்பாடியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.

    மாவட்ட கண்காணிப்பு ஆயர் நவராஜ் ஆபிரகாம், பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், சீகன்பால்கு ஆன்மீக மன்ற இயக்குநர் ஜஸ்டின் விஜயகுமார், சபை சங்க பொறுப்பாளர்கள், ஆயர்கள், பள்ளி ஆசிரி யர்கள், அலுவலர்கள், ஊழி யர்கள் கலந்துக்கொண்டு மாலை அணிவித்தனர். பின்னர் புதிய எருசலேம் ஆலயத்தினுள் உள்ள சீகன்பால்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி, பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக சீகன்பால்கு கப்பலிலிருந்து இறங்கி நின்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் சிறப்பு வழிபாடும், மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைப்பெற்று பின்னர் பேரணியாக வந்தனர்.222 நாட்கள் கப்பலில் பயணம் செய்து 1706 ஜூலை 09 ல் தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு 1715 ல் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழில் பைபிளை, காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டார், இந்தியாவிலேயே முதன் முதலாக தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்தார். தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார்

    தமிழ் நாள்காட்டியை (காலண்டர்) முதன்முதலில் வெளியிட்டார், ஜெர்மன் மொழியிலான ஞானப்பாடல்களை தமிழில் மொழிப்பெயர்த்தார், தமிழ்நூல்களைஜெர்மன் மொழியில் மொழிப்பெ யர்த்தார், முதன்முதலில் தமிழில் அருளுரையாற்றினார், ஜெர்மனியில் தமிழ் மொழியை வளர்க்க வழிவகுத்தார் என இன்னும் பல்வேறு சாதனைகளை தமிழ்மொழிக்காக செய்த தமிழறிஞர் சீகன்பால்கு வின் தொண்டினை நினைவுகூறும் விதமாக தரங்கம்பாடியில் அவருக்கு மணிமண்டபத்தை கட்டுவதோடு, அவர் வந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் சமீபத்தில் லண்டனில் கண்டுப்பிடிக்கப்பட்ட சீகன்பால்குவால் அச்சடிக்கப்பட்ட பைபிளை தரங்கம்பாடி க்கு கொண்டு வர வேண்டுமென மத்திய, மாநில அரசுக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீகன்பால்கு உருவாக்கிய பள்ளியில் சீகன்பால்குவால் உருவாக்கப்பட்ட பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமை வகித்தார். ஆயர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    ×