என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.பாரதி"
- நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்ம நாபன் நாடார் தலைமையில் கூட்டம் நடந்தது
- ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.
ஆலந்தூர்:
நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் அனைத்து நாடார் சங்க ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்மநாபன் நாடார் தலைமையில் இன்று நடந்தது.
கொட்டிவாக்கம் முருகன், ஆலந்தூர் கணேசன், சந்திரசேகர பாண்டியன், ராஜ்குமார், சுந்தரேஸ்வரன் ,மின்னல் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து அனைத்து நாடார் சங்கங்களும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-
காமராஜர் குறித்து அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து சென்னையில் நவம்பர் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது. அவர் வருத்தம் தெரிவிக்கும் வரையில் காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்துவது, அனைத்து போராட்டங்களையும் தலைவர் த.பத்மநாபன் நாடார் தலைமையில் நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன் ஜெயபால் நாடார், தங்கமுத்து நாடார், கொட்டிவாக்கம் முருகன், சநதிரசேகர பாண்டியன் நாடார், சுந்தரேஸ்வரன் நாடார், மாரி தங்கம் நாடார், ஆலந்தூர் கணேசன் நாடார், பூவை ஜெயக்குமார் நாடார், மின்னல் ஸ்டீபன் நாடார், முத்து ரமேஷ் நாடார், உத்திர குமார் நாடார், ஆனந்தராஜ் நாடார், மனோகரன் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம் தெரிவித்தார்.
- எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா இன்று நடந்தது. இைதயொட்டி அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
இதில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், நிர்வாகிகள் சுப்பிரமணியன், சரவணபகவான்,சத்யன், ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்ப ரசு உட்பட பலர் கலந்து கொண்டனர் .
பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
அண்மையில் மதுரை வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மதுரை மக்களிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சம்பந்தமாக தவறான தகவலை ெதரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ததாகவும் அதற்கு தமிழக அரசு தாமதமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தவறான தகவல்.
ஆரம்பத்தில் மதுரை விமான நிலையத்தில் அண்டர் பாஸ் முறையில் திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் குறைந்த அளவு இடம் போதும் என மத்திய அரசு தெரிவித்தது. தற்போது அதிக இடம் வேண்டும் என்று கூறி அண்டர் பாஸ்ட் திட்டம் கைவிடப்பட்டது என திட்டத்தை மாற்றி அறிவித்துள்ளது.
இதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார். இதுவும் தவறான தகவல். இது தொடர்பாக மக்கள் மன்றத்தில் நாங்கள் கூறினால் தவறாக திரித்து கூறுவதாக சொல்கின்றனர்.
அண்மையில் தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, பெருந்தலைவர் காமராஜர் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, காமராஜர் தி.மு.க.வினரின் கட்டை விரலை வெட்டு வேன் என்று கூறியதாகவும், அவருக்கு கல்லறை அமைத்தது தி.மு.க. தான் என்றும் கூறி உள்ளார்.
காமராஜர் இதுபோன்ற கடினமான வார்த்தைகளை எப்போதும் பேசியது கிடையாது. இன்றளவும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவர். அவரைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி கூறியது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வார்த்தைகளை அளந்து பேச வேணடும் என ஆர்.எஸ்.பாரதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
- மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது
சென்னை:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:-
வார்த்தைகளை அளந்து பேச வேணடும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால், நாங்கள் 100 வார்த்தை பேசுவோம். வார்த்தைகளை எப்படி பிரயோகிக்கவேண்டும், எந்த நேரத்தில் பிரயோகிக்க வேண்டும், யார் மீது பிரயோகிக்க வேண்டும் என அனைத்து வித்தைகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் அரசியல் பண்பாடு கருதி அப்படி பேசவில்லை.
அரசியல் ரீதியாக வந்து விமர்சனம் செய்யுங்கள், நாங்கள் பதில் கொடுக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்குவதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா? ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுகவுக்கும், அண்ணன் எடப்பாடியாருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விஷயத்தில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி அவ்வப்போது கொடுப்போம்.
கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது. சும்மா கொடநாடு வழக்கை பயன்படுத்தி பூச்சாண்டி காட்டவேண்டாம். இதுபோல் எத்தனையோ பூச்சாண்டி வேலைகளையெல்லாம் திமுக காலத்தில் அப்போதே பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இதற்கு பயப்படும் கட்சி அதிமுக அல்ல.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
- அ.தி.மு.க. மோதலுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
- நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.
சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. மோதலுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யாருடைய அழிவிலும் தி.மு.க. இன்பம் காணாது. அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் வீணாக தி.மு.க.வை வம்புக்கு இழுக்க வேண்டாம்.
அ.தி.மு.க. செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள்.
ஓ.பன்னீர்செல்வம் பின்புலத்தில் தி.மு.க. இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை.
எதற்கெடுத்தாலும் முதலமைச்சரையும், தி.மு.க.வையும் தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது. யார் மீதோ உள்ள கோபத்தை தி.மு.க.வின் பக்கம் எடப்பாடி பழனிசாமி காட்டுகிறார். வருமான வரி சோதனையை கண்டிக்க தெம்பில்லாமல் தி.மு.க.வை குறை கூறுகிறார்.
சட்டம், ஒழுங்கு காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.