என் மலர்
நீங்கள் தேடியது "பிளஸ்-1 மாணவி"
- ஜெயஸ்ரீ பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார்.
- டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. மழவராயனூர் கிராமத்தைச் ேசர்ந்தவர் யேசுடையான் மகள் ஜெயஸ்ரீ (வயது 16). திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து முடித்துவிட்டு பிளஸ்-2 செல்ல உள்ளார்.
இந்நிலையில் வீட்டில் ஜெயஸ்ரீயின் அண்ணன் சமையல் செய்யவில்லை என ஜெயஸ்ரீயை திட்டினார். இதனால் மனம் உளைச்சலில் இருந்த இவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி கீேழ விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவாக்ள் ஜெயஸ்ரீயை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் ஜெயஸ்ரீ முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி ஆற்றில் குளித்துள்ளார்.
- அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் தாமஸ். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு கனிமொழி (15) என்ற மகள் உள்ளார். லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் காங்கேயம் பாளையம் காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்ற கனிமொழி துணி துவைத்து விட்டு ஆற்றில் குளித்துள்ளார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி உள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே கனிமொழி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
- வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 42). விவசாயி. இவருக்கு பிரியதர்ஷினி (வயது 15), சுரபிகா (8), ராஜேஸ்குமார் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில் பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கருப்பசாமி தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று நடந்த பிளஸ்-1 தேர்வுக்காக மாணவி பிரியதர்ஷினி படித்துக் கொண்டு இருந்தார். தனது தந்தையின் மரணச் செய்தி கேட்டதும் கதறி அழுதார். அவரது வகுப்பு ஆசிரியர் கண்ணபிரான் மாணவிக்கு ஆறுதல் கூறி தைரியமாக தேர்வு எழுத செல்லுமாறு கூறினார்.
வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி பிரியதர்ஷினி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார்.
- செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் கடுவனுாரைச சேர்ந்தவர் செல்வம். அவரது 16 வயது மகள் பிளஸ்1 படித்து வருகிறார். இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை அதிர்ச்சி அடைந்த செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை . இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.