என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிற்றுண்டி திட்டம்"
- திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
- வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வருகிற 14-ந் தேதி இந்த திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
இது சம்பந்தமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்குகிறோம். நின்றுபோன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் தற்போது தொடங்கியுள்ளோம்.
பிரதமர் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார்.
அதன்படி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவினை வழங்க உள்ளோம். மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற 14-ந் தேதி தொடங்க உள்ளோம்.
இந்த திட்டத்தை காட்டேரிக் குப்பம் அரசுப்பள்ளியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்த திட்டத்தின்படி வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.
சுமார் 20 கிராம் எடையில் இருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்லும்போது சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர். இதன்மூலம் 4 மாதத்துக்கு அரசுக்கு ரூ.90 லட்சம் கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இலவச நல உதவிகள்-காலை சிற்றுண்டி திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
- இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
மதுரை
மதுரை மங்கலபுரம் பகு–தியில் உள்ள கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 188-வது விளை–யாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பி–னரும், கிறிஸ்தவ நல் லெண்ண இயக்க தலைவ–ருமான இனிகோ இருதய–ராஜ் எம்.எம்.எல்.ஏ., தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவா உலக திருச்சபை மாமன்ற உறுப்பினர் வழக்க–றிஞர் பெர்னாண்டஸ் ரத் தினராஜா மற்றும் மதுரை ராமநாதபுரம் திருமண்டில பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த–னர்.
இதில் சிறப்பு விருந்தின–ராக கலந்து கொண்ட தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தின–ராஜா பேசுகையில், தமிழகத் தில் முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார்.
அரசு பள்ளிகளில் பயி–லும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாண–வர்களுக்கும் வழங்க வேண் டும்.
அதுபோல அரசு பள்ளி–களில் பயிலும் மாணவர்க–ளுக்கு வழங்கப்படும் இல–வச நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி ஆகியவையும் அரசு உதவி பெறும் சிறு–பான்மை பள்ளிகளான கிறிஸ்தவ பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து விரை–வில் இதனை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து தலைமை உரையாற்றிய இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டா–லின், சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, நான் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இலவச நலத்திட்டங்கள் மற்றும் காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்களை சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசி இருக்கிறேன். எனவே முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் இந்த கோரிக்கை–களை விரைவில் நிறை–வேற்றி அதற்கான அறி–விப்பை வெளியிடுவார் என்று உறுதியாக நம்புகி–றேன்.
இவ்வாறு அவர் பேசி–னார்.
இதைத்தொடர்ந்து பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார். விழாவில் பல்வேறு போட்டி–களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பார்ச் சூன் பொன்மலர் ராணி வரவேற்று பேசினார்.
முடிவில் பள்ளி தாளா–ளர் அருள் தாஸ் நன்றி கூறினார். இந்த விழாவில் மதுரை ராமநாதபுரம் திரு–மண்டல முதன்மை பணியா–ளர்கள் மற்றும் போதகர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கடந்த ஆண்டு தனியார் பங்களிப்புடன் 150கணிணிகள் வழங்கப்பட்டது.
- நடமாடும் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டு தினசரி ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்பப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி யின் 2023 -2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்று மாநக ராட்சி மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதா வது:- திருப்பூர் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முதன்மை பெற்ற மாவட்ட மாக திகழும் இந்நேரத்தில் கல்வி வளர்ச்சியில் அதிகஅக்கறை கொண்ட தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை கல்விக்கா கவும், மாணவர் நலனுக்கா கவும் செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி க்கு உட்பட்ட 11 மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 49 கூடுதல் வகுப்ப றைகள் மற்றும்25 கழிப்பறைகள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 75 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 25 கழிப்பறைகள் பொது மக்களின்பங்களிப்புடன் கட்டுவதற்கு 2023-24 ம் நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகராட்சிப் பள்ளி களில் புதிதாக 50 ஸ்மார்ட் வகுப்ப றைகள் உரு வாக்க ப்படும். மேலும் கடந்த ஆண்டு தனியார் பங்களி ப்புடன் 150கணிணிகள் வழங்கப்பட்டது. 2023-24ம் ஆண்டில் 200 கணி ணிகள்வழங்கப்பட்டு மாணவர்களின் தொழில்நுட்பத்திறன் மேம்படுத்தப்படும்.
2023-24ம் நிதி யாண்டில் மூன்று மாநக ராட்சி பள்ளி களி ல்மா ணவர்களின் கல்வித்திறன் மேம்பட தனியார் பங்களி ப்புடன் கூடியநூலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆண்டுதோறும் படிப்படியாக விரிவு படு த்தப்படும். நடமாடும் நூலகம் ஒன்றுஉருவா க்கப்பட்டு தினச ரி ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கு அனுப்பப்படும். தமிழக முதலமைச்சர் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறி வித்துள்ளார். அதனடிப்ப டையில்2023-24 ம் நிதி யாண்டில் 102 மாநக ராட்சிப் பள்ளிகளில் பயிலும்19824 மாணவர்க ளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கிட 1.10 கோடிரூபாய் மதிப்பீட்டில் நான்கு இடங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் கட்டிடம் கட்டுவதற்குஎதிர்வரும் கல்வியா ண்டில்மாந கராட்சி பள்ளிகளில் துவங்கப்படும். திருப்பூர்மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றல் கல்வியினை தவிர்க்க ஏழைபள்ளிக் குழந்தை களின் பசியினை போக்க வும், கல்விச்சாலைக்கு வந்துகல்வியறிவு பெற்றிடவும், சமூகத்தில் முன்னேறி டவும்சிற்று ண்டி" வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமை ச்சருக்கு நன்றித்தெரி விப்பதில் பெருமை யடைகிறேன். மாநகராட்சி பள்ளி களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்விபயிலும் மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களில்அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறும் மாணவ ர்களுக்குஅவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் மற்றும் வெள்ளிக்கா சுகள் பரிசாக வழங்கப்படும்.
திருப்பூர் மாநகராட்சியில் நாம் பொறுப்பேற்ற பிறகு நமக்கு நாமேதிட்டத்தில் தமிழ கத்தில் 7-ம் இடத்திலிருந்து தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறோம். மக்களின் சுய உதவி சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பரவலாக்கவும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தில்" திருப்பூர் மாநகராட்சி தமிழகத்தில் முதலாவது இடம் பெற்றுள்ளது. வளர்ச்சிபணிகளுக்கான திட்டமிடுதலில் தொடங்கி,வள ஆதாரங்க ளைதிரட்டுதல் பணிகளை மேற்கொள்ளுதல்மற்றும் மேற்பார்வைசெய்தல் போன்ற அனைத்து பணிகளிலும் மக்கள் பங்களி ப்பினை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2022-23 ம் ஆண்டில் 41 பணிகள் நடைபெற்றுள்ளது.திருப்பூரில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 10.73 கோடி ரூபாய் பொது மக்களின் பங்களிப்புடனும்,மாநில அரசின் 21.47 கோடி ரூபாய் பங்களிப்புடனும், புதியதாக மருத்துவமனை கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் நிர்வாக அனுமதி பெற நகராட்சி நிர்வாகஇயக்குநர் அவ ர்களுக்கு கருத்துரு அனுப்ப ப்பட்டுள்ளது. 2023-24 ம் நிதியாண்டில் புற்றுநோய் மருத்துவமனைக்கு பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கு வதற்கு பொதுமக்கள் பங்களிப்பு மூலம் 20.00 கோடி ரூபாயும், அரசின் பங்களிப்பு மூலம் 40.00 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 60.00 கோடி ரூபாய்மதிப்பீட்டில் நிறுவவும்,பொது மேம்பாட்டு பணிகளுக்காக 20.00கோடி ரூபாய் திட்ட மதிப்பீடும் ஆக மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் செயல்படுத்தப்பட்டு தொடர்ந்து 2023-24 ம் ஆண்டிலும் நம் மாநகராட்சி முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று மகிழ்ச்சியோடுதெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மாநகரில் தெருவிளக்கு 17.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8681புதிய தெரு மின்விளக்குகளும், 4755சோடியம் ஆவி விளக்குகளை மின்சிக்கன விளக்குகளாக 2023-24ஆம் ஆண்டில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் உயர்கோபுர மின்விளக்குகள் 28இடங்களில் அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். ஏற்கனவேசெயல்பாட்டில் உள்ள சோடியம் ஆவி விளக்குகளை பராமரித்திடசிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக மூலம் பிரித்து வழங்கி திருப்பூர்மாநகரத்தை ஒளிர வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாநகராட்சியில் ஏ.எம்.ஆர்.யூ.டி. திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணி 1120.57 கோடி ரூபாய் மதிப்பீ ட்டில்மேற்கொ ள்ளப்பட்டு 94 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில் நான்காவது குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டு சோதனைஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டம்கடந்த மாதத்தில்திருப்பூர் வடக்குப் பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு சோதனை ஓட்டமாககொண்டு வரப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்திற்குள்தெற்குப் பகுதிக்கு விரிவுப்படு த்தப்பட்டு விரைவில் செயல்பாட்டி ற்குகொண்டு வரப்படும். SCADA (Supervisory Control and DataAcquisition) மேற்பார்வை கட்டுப்பாட்டு தரவு கையகப்படுத்துதல்திட்டம், முதலில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனைஅடிப்படையில் செயல்பட்டு வருகிறது.இத்திட்டம் மேலும்விரிவாக்கப்பட்டு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக ளுக்கும் inflow and outflow 100 சதவீதம்மேற்பார்வை செய்யப்பட்டு குடிநீர் சீராக விநியோகம் செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்களுக்கு நீர்த்தட்டுப்பாடு இல்லாமல் மாநகராட்சிப் பகுதிகளில்நீராதாரத்தை ஆய்வு செய்து புதிய ஆழ்குழாய்கிணறுகள் அமைத்துசெய்யப்ப ட்டுள்ளது.மேலும் தேவைப்படும்தண்ணீர் வசதிபகுதிகளுக்கு புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்.தமிழகத்திலேயே முதன் முறையாகதிருப்பூர் மாநகராட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில்குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை"குறுஞ்செய்தி" (SMS) மூலமாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தெரியப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மாநகரில் சுகாதார பிரிவில் ஏற்கனவே 17 ஆரம்ப சுகாதாரமையங்கள் உள்ளது. மேலும் ஒரு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் குளத்துப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.14 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் மகப்பேறுசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 34 நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்படும். நமக்கு நாமே திட்டத்தில் மருத்துவ சேமிப்புகிடங்கு 27.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டி.எஸ்.கே.மருத்துவமனை வளா கத்தில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்டுள்ளது.மாநகராட்சியில் புதிதாக மருந்து கிடங்கு மங்கலம் சாலையில்அமைக்க ப்படவுள்ளது.எஸ்.ஆர்.நகர் பகுதியில்தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 51 துணை சுகாதார நிலையம் 60 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் மூன்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு வரும்கர்ப்பிணித் தாய்மா ர்களுக்கு முன் பேறுகால பரிசோதனை கள்செய்வதற்கு தேவைப்படும் அல்ட்ரா சவுண்ட் இஸ்கேனர் (UltraSound Scanner) கருவி புதியதாக அமைக்கப்படும்.
இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொன்னம்மாள்ராமசாமி மகப்பேறு மருத்துவ மையம் (PRMH) மற்றும் வீரபாண்டிஆரம்ப சுகாதார நிலையங்களில் 60.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டும். மேலும் மூன்று ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கூடுதல் கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி வேண்டிகருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். "நடமாடும் இரத்த பரிசோதனை கூடம்" அறிமுகப்படுத்தப்படும்.
திருப்பூர் மாநகரில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் வீடு இல்லாத ஏழைகள் தங்குவதற்கு வசதியாக இரவு நேர தங்கும் விடுதி மற்றும் புதிய கழிப்பிடங்கள் 1.41 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.மாநகராட்சிக்கு சொந்தமான மனைப்பிரிவுகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு நீச்சல் குளமும்அண்ணா காலனியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்
ஆண்டிபாளையத்தில் உள்ள குளத்தை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து படகு சவாரி மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .இந்த நிதி ஆண்டில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தொழில் நகரமான திருப்பூரில் குற்ற நடவடிக்கைகள் குறைக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் 64.20 லட்சம் மதிப்பில் பொருத்தப்படும்.
வளர்ந்து வரும் நம் திறன் மிகு திருப்பூர் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நொய்யல் நதிக்கரையின்இருபுறமும் 6.70 கி.மீ. நீளத்திற்கு தார்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இருபுறமும் 5 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் பாலம் மற்றும் நடராஜ் தியேட்டர் பாலம் மற்றும் தந்தைபெரியார் நகர் பாலம், சங்கிலிப் பள்ளம் ஓடையின் குறுக்கே புதியபாலங்கள் அமைக்க 36.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் புதிதாக ஒரு இரயில்வே மேம்பாலம் அமைக்கநடவடிக்கைமேற்கொள்ளப்படும்.பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் சேதமடைந்த சாலைகளைபோர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுமார் 150 கோடிக்கும் குறையாமல் அரசு நிதி பெறப்பட்டு இந்த நிதியாண்டில் சாலைகள் புனரமைக்கப்படும்.
"சீர்மிகு நகரம் சிறப்பான நகரம் - நம் திருப்பூர் மாநகரம் "எல்லா நாடுகளிலும் நகரங்களின் வளர்ச்சியே பொருளாதாரவளர்ச்சிக்கு வினையூக்கியாக உள்ளது. ஒரு செயல்முறை அல்லது தொடர் நடவடிக்கைகள் மூலமாக நகரங்களைத் தொடர்ந்து வாழ தகுந்த மாநகரமாக மாற்றி, புதியசவால்களுக்கும் உடனடித் தீர்வு காணும் திறன் பெற்றதாக 986.05 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் இச்சீர்மிகு நகரத்திட்டத்தில்மதிப்பீட்டில் உத்தேசிக்கப்பட்ட 28 பணிகளில் 21 பணிகள்முடிவடைந்துள்ளது.
மீதமுள்ளஅனைத்துபணிகளும் விரைவில்முடிக்கப்படும். முடிவடைந்துள்ள பணிகளில் 7.19 கோடி ரூபாய்அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நம் திருப்பூர் சீர்மிகு வாழிடமாக மாறியுள்ளது என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 2 மூன்றாம் நிலை நகராட்சிகள் 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர்பகுதிகள் மற்றும் 8 ஊராட்சி பகுதிகளில் உள்கட்டமை ப்புகளையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட சிறப்பு நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- கர்ம வீரர். காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினார்.
- கல்வி கற்கும் மாணவர்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் நலம், மனநலம் முற்றிலும் பாதிக்கும்.
சென்னை:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்ம வீரர். காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினார். பின்னர் இத்திட்டம் சத்துணவு திட்டமாகவும் அதை தொடர்ந்து வாரத்தில் ஐந்து நாளும் முட்டை வழங்கும் திட்டமாக 10ம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவுப்படுத்தப்பட்டது.
கல்வி கற்கும் மாணவர்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் நலம், மனநலம் முற்றிலும் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க உன்னத திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார்.
நாட்டிலே அனைத்து மாநிலங்களுக்கு முன்னோடியாக மாணவர்களுக்கென தனி அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே வேளையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சத்துணவு திட்டத்தை 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மீதமுள்ள 37 மாவட்டங்களில் இன்று தொடங்கியது.
- மாணவர்களுக்கு இன்று கிச்சடி வகை உணவுகள் பரிமாறப்பட்டன.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டும் மகிழ்ந்தார்.
இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மீதமுள்ள 37 மாவட்டங்களில் இன்று தொடங்கியது.
இந்த 37 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டரால் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது.
சென்னையை பொருத்தவரை வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னையில் 37 மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
திருச்சி துறையூர் நடுவலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். கோவையில் உள்ள பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
இதேபோல் 37 மாவட்டங்களிலும் இன்று காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு இன்று கிச்சடி வகை உணவுகள் பரிமாறப்பட்டன. கூடுதலாக கேசரியும் வழங்கப்பட்டது.
- 2020-ல் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில் காலை உணவுத் திட்டம் இருக்கிறது என்று சொன்னால், அப்போதே ஏன் தமிழ்நாட்டில் திட்டத்தை தொடங்கவில்லை?.
- சர்.பிட்டி.தியாகராஜர், காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
கொளத்தூர்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை கீழ அண்ணா தோப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்ட மாக வடசென்னை பகுதியில் உள்ள 37 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டது.
மாதவரம் ராஜாஜி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் மாணவர்களிடம் பேசி மகிழ்ந்தனர்.
மாணவர்களுக்கு காலை உணவாக கிச்சடி மற்றும் கேசரி வழங்கப்பட்டது. இதனை மாணவர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
முன்னதாக மாதவரம் டெர்மினல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து காலை உணவு சமைக்கப்பட்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு கொடி அசைத்து அனுப்பினர்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, நிலைகுழு உறுப்பினர் விஸ்வநாதன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சுதர்சனம், மாதவரம் மண்டல குழு தலைவர் நந்த கோபால் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியிலேயே மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம். ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஓரிரு நாட்கள் மட்டுமே அந்த உணவு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது தான் முழுமையான பயனுள்ள காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்பட உள்ளது. உணவு தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2020-ல் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில் காலை உணவுத் திட்டம் இருக்கிறது என்று சொன்னால், அப்போதே ஏன் தமிழ்நாட்டில் திட்டத்தை தொடங்கவில்லை?.
அப்போது அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. இது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சர்.பிட்டி.தியாகராஜர், காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
சாதாரண காய்ச்சல் என்பது இரண்டு நாட்களில் சரியாகிவிடும், இந்த இன்பு ளுயன்சா என்ற காய்ச்சல் வந்த குழந்தைகளை மூன்று முதல் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் தும்மினாலோ இரும்பினாலோ இது பரவ வாய்ப்பு உள்ளது. இப்போது வரை 13 குழந்தைகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாதம் மட்டும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறி தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, அம்மா உணவகங்களுக்கும், காலைச்சிற்றுண்டி திட்டத்துக்கும் தொடர்பு இல்லை. இந்தத் திட்டத்திற்கு தனியாக உணவகங்கள் அமைக்கப்பட்டு குறித்த நேரத்தில் குறித்த பள்ளிக்கு உணவு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட உள்ளது என்றார்.
கொருக்குப்பேட்டை மாநகராட்சி பள்ளி மற்றும் அண்ணா நகர் ஜே.ஜே. நகர் உள்ளிட்ட 8 இடங்களில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜே.ஜே.எபினேசர் மற்றும் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சூரிய நாராயணன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி, ஆட்டு தொட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட 8 இடங்களில் ராயபுரம் எம்.எல்.ஏ.ஐடிரீம் மூர்த்தி மற்றும் மாநகராட்சி 5-வது மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- கல்வி மட்டும்தான் நம்மிடம் இருந்து யாரும் களவாட முடியாத சொத்தாகும்.
- கல்வியை எந்த நாளும் கைவிட்டு விடக்கூடாது. அப்போது தான் தமிழ் சமுதாயம் முன்னேறும்.
மதுரை:
தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக மதுரை நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நெல்பேட்டையில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்திற்கு சென்று பார்வையிட்டார். பள்ளிகளுக்கு உணவை கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் காலை உணவு தொடக்க நிகழ்ச்சிக்காக மதுரை கீழஅண்ணா தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளிக்கு சென்றார்.
பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டார். அப்போது காலை உணவாக கேசரி, ரவா கிச்சடி வழங்கப்பட்டது. இதனை ருசித்து சாப்பிட்ட மு.க.ஸ்டாலின் அருகே அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பள்ளி குழந்தைகளுக்கும் உணவை ஊட்டி மகிழ்ந்தார்.
அப்போது குழந்தைகளிடம் உணவு ருசியாக இருக்கிறதா? என்று கேட்டார். குழந்தைகளும் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். சிறப்பாக படித்து சமுதாயத்தில் பெரியவர்களாக உருவாக வேண்டும் என்று குழந்தைகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ் சமூகத்திற்கு நல்லதொரு மாற்றத்தை தரும் சிறப்பான தொடக்கமாக பள்ளி குழந்தைகளின் காலை உணவு திட்டம் அமைந்துள்ளது. இதனை செயல்படுத்தக்கூடிய இன்றைய நாள் எனது வாழ்விலே பொன்னாள் என்று சொல்லத்தக்க வகையில் அமைந்துள்ளது.
பசித்த வயிறுக்கு உணவும், தவித்த வாய்க்கு தண்ணீரும், திக்கற்றவருக்கு திசை காட்டியாகவும் இருக்க வேண்டும். இன்று செயல்படுத்தப்பட்டுள்ள பள்ளி குழந்தைகளின் காலை உணவு திட்டம் கருணை வடிவிலான திட்டமாகும்.
பசியோடு படிக்க வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்ல வசதியை ஏற்படுத்தி தந்துள்ளோம். தமிழகம் தற்போது நெல் தானிய உற்பத்தியில் உச்சத்தை கண்டுள்ளது.
எனவே தான் நெல்பேட்டையில் காலை உணவுக்கான சமையல் கூடத்தை அமைத்து தயாரிக்கின்ற இந்த உணவு பள்ளி குழந்தைகளை தேடி செல்கிறது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வுகாண வேண்டும் என்பதன் தொடக்கமாகத்தான் ஆதிமூலம் பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளி அமைந்துள்ள இடம் கீழ அண்ணா தோப்பு. எவ்வளவு பொருத்தம் பாருங்கள். நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைத்திட வழிவகை செய்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது பிறந்த நன்னாளில் காலை உணவுக்கான தயாரிப்பு கூடத்துக்கு உள்ளே சென்று பார்த்ததுடன் உணவு கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன்.
102 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இயக்கத்தின் தாய் கழகமான நீதி கட்சியின் தலைவர் பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது ஆயிரம் விளக்கு பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக தூங்கா நகரான மதுரையில் அந்த திட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது.
குழந்தைகள் பசியை போக்கினால் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளின் வருகையும் அதிகரிக்கும். கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு காலை உணவின் தேவை அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகள் காலை உணவை ருசித்து சாப்பிடுவதை பார்க்கும்போது என் மனம் நிறைந்தது. இதயம் மகிழ்ச்சியால் திளைத்தது. ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட குழந்தைகள் எந்த காரணத்திற்காகவும் பள்ளிக்கு செல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது.
குழந்தைகள் படிக்க வறுமை, சாதி தடையாக இருக்கக்கூடாது என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் நினைத்தார்கள். அவர்கள் வழியில் நான் செயல்படுத்தி வருகிறேன். நம் கையில் உள்ள இந்த ஆட்சியில் காப்பியத்தில் வருகின்ற மணிமேகலை கையில் உள்ள அமுதசுரபியாக நினைத்து கடும் நிதி சுமையிலும் இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம்.
1922-ம் ஆண்டு நீதி கட்சி தலைவர் பி.டி. தியாகராயர் அவர்களால் மதிய உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த திட்டம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு ஆங்கில அரசால் சில காரணங்களை சொல்லி நிறுத்தப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.
1971-ம் ஆண்டு டாக்டர் கலைஞர் பள்ளி குழந்தைகளுக்கு பேபி ரொட்டி திட்டத்தை தந்ததுடன் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவாக மாற்றித்தந்தார். 1975-ம் ஆண்டு முழுமையான மாநில அரசு நிதியுடன் ஊட்டச்சத்து சத்துள்ள உணவாக வழங்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டமாக கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தினார்.
1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை கலைஞர் நிறுத்தி விடுவார் என்று சிலர் பொய் பிரசாரம் செய்தார்கள். ஆனால் கலைஞர் நாங்கள் சத்துணவு திட்டத்தை நிறுத்த மாட்டோம், அந்த உணவை உண்மையான சத்துணவாக வழங்குவோம் என்றார்.
அப்படியே வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு வாரந்தோறும் சத்துணவு 3 முட்டைகள் மற்றும் கொண்டைக்கடலை, பச்சை பயறு வழங்கப்பட்டன.
2010-ம் ஆண்டு வாரத்தில் 5 நாட்கள் சனி, ஞாயிறு தவிர 5 முட்டைகள் வழங்கப்பட்டன. முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அம்மையார் ஜெயலலிதா கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார்.
சென்னையில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளுக்கு நான் ஆய்வுக்கு சென்ற நேரத்தில் படிக்கிற குழந்தைகளை நேரில் அழைத்து பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் சோர்வாக இருப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது காலையில் எப்போதும் சாப்பிடுவதில்லை என்று கூறினார்கள்.
அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்தேன். அதிக குழந்தைகள் இப்படித்தான் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று அதிகாரிகளும் சொன்னார்கள். பட்டினியாக வரும் குழந்தைகளுக்கு எப்படி பாடம் படிக்க முடியும்? என்று உணர்ந்து தான் இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்த சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயனடைகிறார்கள். 1545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மாணவனுக்கு ரூ.12.75 செலவு செய்யப்படுகிறது. இதனை செலவு என்று சொல்வதைவிட தனது கடமை என்று சொல்வது தான் சாலப்பொருத்தமாகும்.
இந்த திட்டம் இன்னும் முழுமையாக விரிவுப்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன். காலை உணவை இலவசம் என்றோ, சலுகை என்றோ, தர்மம் என்றோ நினைக்கக்கூடாது. இது நமது கடமை என்று நினைத்து கடமை உணர்வோடு குழந்தைகளின் அறிவாற்றலை உயர்த்த சிறப்பான கல்வியை கற்க நாம் அனைவரும் உறுதுணை செய்ய வேண்டும்.
இதன் மூலம் இந்த சமூகம் அடையக்கூடிய பயன் என்பது அளவிடபட முடியாதது. கல்வி, மருத்துவம், பசி தீர்க்கும் திட்டங்கள் எவ்வித விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகும். இதனை ஒரு ஆட்சியின் முகமாக பார்க்கவேண்டும். கலைஞரின் மகன் நான். கருணையின் வடிவமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோளை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.
இந்த திட்டத்தை தாய் உள்ளத்தோடு செயல்படுத்த வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளைகளை எவ்வளவு கனிவோடும், கவனத்தோடும் பார்த்து கொள்வீர்களோ அதைவிட கூடுதலான கவனத்தோடும், கனிவோடும் காலை உணவினை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். கல்வி கற்கும் குழந்தைகளுக்கு காலை, மதியம் உணவை தருகிறோம். நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள்... படியுங்கள்... படியுங்கள்... இதுதான் எனது வேண்டுகோள் ஆகும்.
கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை ஆகும். கல்வி மட்டும்தான் நம்மிடம் இருந்து யாரும் களவாட முடியாத சொத்தாகும். இந்த சொத்தினை அடைய நீங்கள் கவனத்துடன் கல்வி கற்க வேண்டும். நீங்கள் படித்தால்தான் அறிவார்ந்த தமிழ் சமூகம் நீடித்து நிலைக்கும். படித்துதான் ஆக வேண்டுமா? இதை தான் படிக்க வேண்டுமா? என்று யாராவது கூறினால் அவர்களை முட்டாளாக பாருங்கள்.
கல்வியை மட்டும் கற்காமல் விலகி சென்று விடாதீர்கள். கலை, ஆராய்ச்சி, பட்டப்படிப்புகளை படியுங்கள். நான் இருக்கிறேன். உங்களை கல்வியை விட்டு விலகி செல்ல அனுமதிக்க மாட்டேன். இதற்காகத்தான் தி.மு.க. அரசியல் களத்தில் இருக்கிறது.
எனவே கல்வியை எந்த நாளும் கைவிட்டு விடக்கூடாது. அப்போது தான் தமிழ் சமுதாயம் முன்னேறும். அத்தகைய வளர்ச்சியை நோக்கி தமிழகம் எந்நாளும் வெற்றி நடைபோடவேண்டும். தமிழ் சமூகம் வறுமையில் இருந்து அகன்றிட குழந்தைகளின் பசியை போக்கிட எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் படிக்கும் 5,941 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.
- உணவை வழங்கும் முன்பு அதன் தரத்தை ஒவ்வொரு நாளும் பள்ளி மேலாண்மைக்குழு உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் முதல்கட்டமாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிற்றுண்டி வகைகளில் ஏதாவது ஒன்றை அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது இயன்ற அளவு அந்தந்த பகுதியில் விளையும் அல்லது கிடைக்கும் சிறுதானியங்களின் அடிபடையிலான சிற்றுண்டியை தயார் செய்து வழங்க வேண்டும்.
மாநகராட்சி பள்ளிகள்
சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் படிக்கும் 5,941 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.
திருச்சி மாநகராட்சி (40 பள்ளிகள்), காஞ்சீபுரம் (20), கடலூர் (15), தஞ்சை மற்றும் கும்பகோணம் (21), வேலூர் (48), திருவள்ளூர் (6), தூத்துக்குடி (8), மதுரை (26), சேலம் (54), திண்டுக்கல் (14), நெல்லை (22), ஈரோடு (26), கன்னியாகுமரி (19) கோவை மாநகராட்சி (62 பள்ளிகள் என மொத்தம் 381 பள்ளிகளில் படிக்கும் 37 ஆயிரத்து 750 மாணவ, மாணவிகள் பயனடைவர்.
நகராட்சிகள்
விழுப்புரம், திண்டிவனம், புதுக்கோட்டை, பெரம்பலூர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, நாமக்கல், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருவத்திபுரம் (செய்யாறு), ஜெயங்கொண்டம், ஆற்காடு, ஆம்பூர், வாணியம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, நாகை, பரமக்குடி, காரைக்குடி, கோவில்பட்டி, மன்னார்குடி, மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் படிக்கும் 17 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.
வட்டார பள்ளிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கரூர் கிருஷ்ணராயபுரம், தூத்துக்குடி விளாத்திகுளம், திருப்பூர் குண்டடம், சிவகங்கை எஸ்.புதூர், தேனி மயிலாடும்பாறை, விருதுநகர் காரியாபட்டி, திருச்சி துறையூர், தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய வட்டாரத்தில் (கிராம ஊராட்சி) உள்ள 728 பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆயிரத்து 826 மாணவ, மாணவிகள் பயனடைவர்.
மலைப்பகுதி பள்ளிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, நாமக்கல் கொல்லிமலை, திருவண்ணாமலை ஜவ்வாதுமலை, திண்டுக்கல் கொடைக்கானல், ஈரோடு தாளவாடி, நீலகிரி கூடலூர் ஆகிய மலைப்பகுதி வட்டாரங்களில் உள்ள 237 பள்ளிகளில் படிக்கும் 10 ஆயிரத்து 161 மாணவ, மாணவிகள் பயனடைவர்.
இந்த திட்டத்தின் குறிக்கோள்கள் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது; ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது; ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவது; பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகையை உயர்த்தி தக்க வைப்பது; வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை ஆகும்.
ஒரு குழந்தைக்கு ஒரு நாளுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது அதே அளவு ரவை அல்லது கோதுமை ரவை அல்லது சேமியா; அந்தந்த ஊர்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம்; உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் (சமைத்தபின் 150-200 கிராம் உணவு மற்றும் 60 மில்லிகிராம் காய்கறியுடன் சாம்பார்).
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகளின் தரத்தை உறுதி செய்து கழுவி பயன்படுத்த வேண்டும்.
உணவை வழங்கும் முன்பு அதன் தரத்தை ஒவ்வொரு நாளும் பள்ளி மேலாண்மைக்குழு உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிக்க மாநிலம், மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
காலை உணவு திட்டத்தின் செயல்பாடு பற்றிய ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் இனி வரும் ஆண்டுகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- திண்டுக்கல் தோட்டனூத்து என்ற இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
- விருதுநகர் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களுக்கு செல்கிறார்.
இதற்காக, இன்று (புதன்கிழமை) காலை 11.35 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.
மதுரையை சென்றடைந்த பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், பின்னர் அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் செல்கிறார். அங்கு ஓட்டல் அமிகாவில் தங்குகிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல் தோட்டனூத்து என்ற இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். அங்கிருந்து, மாலை 5.45 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார்.
மதுரையில் அரசு விருந்தினர் இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அங்குள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார்.
காலை 7.25 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 7.30 மணிக்கு நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். அங்கு காலை உணவு எடுத்துச்செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
பின்னர், காலை 8 மணிக்கு ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அங்கு மாணவர்களுக்கு அவர் காலை உணவை பரிமாறுகிறார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிடுகிறார்.
அங்கிருந்து காரில் விருதுநகர் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று மாலை விருதுநகரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்துகொள்கிறார்.
16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு மதுரை மாரியட் ஓட்டலில் நடைபெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர், மதியம் அங்கிருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.
- 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.
- இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
நகரப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டு வருவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது.
இதற்கு பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமின்றி சிலருடைய குடும்ப சூழலும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதனை செயல்படுத்த அரசு தற்போது ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளிலும் தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 15 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பிறகு படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 10 குழந்தைகள் முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினசரி தயாரிக்கப்பட வேண்டும்.
இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்புடன் கூடிய சமையல் கூடங்கள், கியாஸ் சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு போன்றவை வழங்கப்படும்.
சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக்குழுவுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.
காலை 5.30 மணிக்கு சமையல் பணியை தொடங்கி காலை 7.45 மணிக்குள் முடிக்க வேண்டும். சமைத்த உணவை காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்