search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிலோ"

    • மிளகாய் விலை 2 மடங்கு உயர்ந்தது.
    • இல்லத்தரசிகள் அதிர்ச்சி

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    பெங்களூர், ஓசூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்திலிருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் காய்கறிகளும் குறைவான அளவில் மார்க்கெட்டுக்கு வருவதால் விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது.

    பெங்களூரில் இருந்தும், குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது. தற்பொழுது குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த தக்காளிகளின் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் இருந்து மட்டுமே குறைவான அளவு தக்காளி வந்து கொண்டிருக்கிறது. இதனால் தக்காளி விலை கடந்த 2 நாட்களில் கிலோ ரூ.60 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி கடந்த வாரம் ரூ.1000 முதல் ரூ.1,400 வரை விற்பனையானது. இன்று ரூ.2,900 முதல் ரூ.3,300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மிளகாய் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரத்தில் இருந்து மிளகாய் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட மிளகாய் இன்று ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பீன்ஸ், கத்தரிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய்களின் விலையும் அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    நாட்டு கத்தரிக்காய் ரூ.100, வரி கத்தரிக்காய் ரூ.70, பச்சை மிளகாய் ரூ.170, குடமிளகாய் ரூ.100, பீட்ரூட் ரூ.50, கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.120, உருளைக்கிழங்கு ரூ.32, பல்லாரி ரூ.25, வெள்ளரிக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.50, சேனை ரூ.70, வெண்டைக்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, காலிபிளவர் ரூ.45, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, சிறிய வெங்காயம் ரூ.100, பூண்டு ரூ.150.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், காய்கறிகளின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. வெளியூர்களில் இருந்து மிக குறைவான அளவில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தக்காளி, மிளகாய்கள் வரத்து 75 சதவீதம் குறைந்துள்ளது. காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் மேலும் அதிகரிக்கும் என்றனர்.

    இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், வழக்கமாக காய்கறிகள் வாங்குவதற்கு சென்றால் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 செலவாகும். ஆனால் தற்பொழுது தக்காளி விலை மட்டுமே கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிளகாய் விலையும் உயர்ந்துள்ளதால் அதை வாங்க முடியவில்லை. இதேபோல் மற்ற காய்கறிகளும் விலை உயர்ந்து காணப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றனர்.

    • பூ வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
    • குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும். பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனைநடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    • வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
    • ரேஷன் அரிசி உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.

    கன்னியாகுமரி :

    தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் முட்டம் கடற்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தே கத்திற்கிடமாக கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் வேகமாக வந்தது. அதனை வட்ட வழங்கல் அதிகாரி தடுத்து நிறுத்திய போது, வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதனை தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் நூதன முறையில் மறைத்து சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரிய வந்தது.

    அதனை காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், வட்டவழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    • கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு
    • தோவாளை சந்தையில் விற்பனை அமோகம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய் மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்ேகாவில், ராஜ பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப் பூவும் வருகின்றன.

    இதேபோல், சேலத்தில் இருந்து அரளிப்பூ, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ் போன்றவையும், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட மற்ற பூக்களும் தினமும் விற்பனைக்கு வரு கின்றன. அவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படு கின்றன.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தோவளை சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நாகர்கோவில் சவேரியார் ஆலய திருவிழா மற்றும் சுபமுகூர்த்த தினம் போன்றவை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைவாக இருப்பது பூக்களின் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. பிச்சிப்பூ ரூ.ஆயிரத்து 750-க்கும், சம்பங்கி ரூ.250க்கும், சேலம் அரளி ரூ.220-க்கும், உள்ளூர் அரளி ரூ.200-க்கும், பட்டர் ரோஸ் ரூ. 200-க்கும், முல்லைப்பூ ரூ. ஆயிரத்து 700-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், கோழிப்பூ ரூ.80-க்கும்,மஞ்சக் சேந்தி ரூ.60-க்கும், சிகப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்பனையானது.

    இதேபோல், மரிக்கொழுந்து, தாமரை, அருகம்புல் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    • வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது
    • குமரி மாவட்டத்திற்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது .

    நாகர்கோவில்:

    சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லதாகும்.இதனால் பெண்கள் சமையலுக்கு அதிக அளவில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சமீபகாலமாக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தை உட்பட கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து உள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது .அங்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைய தொடங்கியுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 30 முதல்ரூ. 40க்கு விற்கப்பட்டது. தற்பொழுது வரத்து குறைய தொடங்கியதையடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ 80 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெங்காயத்தின் விலைரூ. 120 ஆக உயர்ந்துள்ளது. தக்காளியின் விலையும் கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டு வருகிறது .

    இதே போல் பீன்ஸ் கேரட் வெள்ளரிக்காய் புடலங்காய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக 100 மூட்டை வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 10 மூட்டை வெங்காயம் மட்டுமே வருகிறது. வரத்து 90 சதவீதம் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என்றார்.

    • ஓசூர் பெங்களூர் பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது.
    • வரத்து அதிகரித்து உள்ளதையடுத்து விலை சரிந்துள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் அப்டா மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    ஓசூர் பெங்களூர் பகுதி களில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளிகளின் வரத்து குறைவாக இருந்தது.இதை யடுத்து தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு மேல் விற்கப்பட்டது. தட்டுப்பாடும் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் தக்காளி வரத்து படிப்படி யாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் தக்காளியின் விலை குறைய தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே தக்காளி ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையானது. இந்த நிலையில் கடந்த வாரம் தக்காளியின் விலை ரூ.30 ஆக சரிந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக விலை குறைய தொடங்கியது.

    நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ.10க்கு விற்பனையானது. அப்டா மார்க்கெட்டில் தக்காளி 30 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை சரிந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதை போல் கேரட் பீன்ஸ் பீட்ரூட் விலையும் உயர்வாகவே உள்ளது. ஒரு கிலோ கேரட் ரூ.70-க் கும் பீட்ரூட் ரூ.95-க்கும் விற்கப்பட்டு வருகிறது.மிளகாய் உருளைக்கிழங்கு பல்லாரி சின்ன வெங்கா யத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. இதே போல் வெள்ளரிக்காய் தடியங்காய் சேனைக்கிழங்கு விலையும் கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது சற்று குறைந்து

    உள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் சித்திரை வைகாசி மாதங்களில் தக்காளி விலை கடுமையான அளவு உயர்ந்து இருந்தது.30 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ. 1700 வரை விற்கப்பட்டு வந் தது. தற்போது இன்று ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.300க்கு விற்க ப்படுகிறது. வரத்து அதிகரித்து உள்ளதை யடுத்து விலை சரிந்துள்ளது.

    இதே போல் மற்ற காய்கறிகளும் வெளியூர் களில் இருந்தும் குமரி மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் இருந் தும் அதிகளவு வர தொடங்கி உள்ளதால் விலை குறைந்து வருகிறது என்றார்

    • ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது
    • சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர்

    கன்னியாகுமரி :

    வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ் குமார் கொண்ட குழு சிராயன்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோ ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த ஆட்டோவை நிறுத்து மாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது.

    தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பின்னர் ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் ஆட்டோவை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×