என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மங்களூரு"

    • நாகர்கோவிலில் பிடிபட்ட அஜிம் ரகுமானிடம், மாவட்ட போலீசார் தீவிர விசாரணை
    • தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் ‘ரா’ உள்ளிட்ட உளவுத்துறையினரும் கேரளாவில் முகாமிட்டு விசாரணை

    நாகர்கோவில்:

    கோவை கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மங்களூரூவில் உள்ள நாகுரி பகுதியில் ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மங்களூரூவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட நாச வேைல என்பதும் கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தேசிய விசாரணை முகமை மற்றும் உளவுத்துறையினரும் விசாரணையில் இறங்கினர். இதில் வெடி விபத்துக்கு உள்ளான ஆட்டோவில் படுகாயத்துடன் மீட்கப்பட்டவன் ஷாரிக் என்ற முகமது ஷாரிக் (வயது 24) என்பதும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புயைவன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து ஷாரிக் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவனது செல்போனை ஆய்வு செய்ததில், நாகர்கோ வில், கேரளா உள்ளிட்ட பல இடங்களுக்கு பேசியிருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக விசா ரணை நடத்த மங்களூரூ போலீசார் நாகர்கோவில், கேரளா பகுதிகளுக்கு விரைந்தனர். அப்போது ஷாரிக், கேரளா செல்லும் போது நாகர்கோவில் வழியாக ரெயிலில் சென்றது தெரியவந்தது. இதனால் நாகர்கோவிலில் அவனுக்கு யாருடனாவது தொடர்பு இருக்கலாமா? என போலீ சார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு செல்போனுக்கு ஷாரிக் பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த செல்போன் எண் யாருடையது என்பது தொடர்பாக குமரி மாவட்ட போலீசார் துணையுடன் மங்களூரூ போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் (22) என்பவர் தான் அந்த செல்போன் எண் வைத்திருப்பவர் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு போலீசார், அவரை பிடித்தனர்.தொடர்ந்து அவரை ரகசிய இடம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் பிடிபட்ட அஜிம் ரகுமானிடம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 30 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்த ப்பட்டது.

    அப்போது அஜிம் ரகு மான், தான் வேலை பார்த்த கடை முதலாளி மனைவியின் செல்போ னுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அவருக்கு மொழி புரியாத தால், செல்போனை தன்னிடம் கொடுத்த தாகவும் கூறினார்.

    மேலும் அந்த போனை வாங்கி தான் பேசுவதற்குள் 'லைன்' துண்டிக்கப்பட்ட தால், தனது செல்போனில் இருந்து அந்த எண்ணை திரும்ப அழைத்ததாகவும் அப்போது யாரும் பேசவில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். அவரது தகவலின் படி குறிப்பிட்ட கடை உரிமையாளரின் மனைவியையும் போலீசார் அழைத்து விசாரித்தனர்.

    அவரும், அஜிம் ரகுமான் கூறிய தகவலையே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 30 மணி நேரத்துக்கு பிறகு அஜிம் ரகுமானை விடுவித்த போலீசார், விசாரணைக்கு தேவைப்பட்டால் மீண்டும் அழைப்போம், வேறு எங்கும் செல்லக் கூடாது என கூறி உள்ளனர்.

    இதற்கிடையில் கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு ஷாரிக் பெயருக்கு பார்சல் அனுப்பப்பட்டு இருந்ததாகவும் அதனை வாங்கத் தான் ஷாரிக், நாகர்கோவில் வழியாக கேரளா சென்றதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக மங்களூரூ போலீசார் கேரளா விரைந்தனர். இதற்கிடையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் 'ரா' உள்ளிட்ட உளவுத்துறை யினரும் கேரளாவில் முகா மிட்டு விசாரணையை தொடங்கினர்.

    இதில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், ஆலுவா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷாரிக் சென்றிருப்பது தெரிய வந்தது. அவன் எதற்காக கேரளா வந்தான்? யாருடன் பேசி னான்? அவனுக்கு முகவரி கொடுத்து உதவியது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஜுமர் என்ற இளைஞர், சிறுமி ஒருவரை 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக பின்தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.
    • சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    கர்நாடகாவில் பள்ளி செல்லும் சிறுமியை தொடர்ந்து பின்தொடர்ந்து துன்புறுத்திய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    மங்களூரு மாவட்டத்தில் ஜுமர் என்ற 24 வயது இளைஞர், சிறுமி ஒருவரை 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக பின்தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.

    இதனால் அச்சமடைந்த சிறுமி வகுப்புகளுக்கு செல்வதையே புறக்கணித்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜுமருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • காந்தார படத்தின் மூலமாக பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
    • ஜரந்தய தெய்வா கோவிலில் விஷால் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது

    கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காந்தார படத்தின் மூலமாக கர்நாடகா & கேரளா மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.

    இந்நிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
    • பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது. குழந்தை பிறப்புக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அப்பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக பெண் தெரிவித்த நிலையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அப்பெண்ணுக்கு CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவுக்குப் பயந்த தம்பதி கட்டி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால் பெண்ணுக்கு அதன் பிறகும் நிற்க, நடக்க குழந்தையை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.

    பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி (Surgical mop) இருப்பது CT ஸ்கேனில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர், பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

    எனவே மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம்  வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவர் பிப்ரவரி 15 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இருப்பினும் அந்த பெண் அசௌகரியங்களுக்கும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சங்கடம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் தங்கள் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

    • ஓணம் பண்டிகை கொண்டாட பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்.
    • இதுவரை 6 சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    திருப்பூர் :

    செப்டம்பரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 6 சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.

    அவ்வகையில், செப்டம்பர் 11-ந்தேதி மங்களூருவில் இருந்து இரவு 7மணிக்கு புறப்படும் சிறப்பு ெரயில் காசர்கோடு, பையனூர், கண்Èர், தலச்சேரி, சொரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று மறுநாள் மதியம் 1:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    • மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி - மங்களூரு சென்டர் வாராந்திர ரெயில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.38 மணிக்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணிக்கு வந்து செல்லும்.

    திருப்பூர் :

    மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி - மங்களூரு சென்டர் வாராந்திர ரெயில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இயக்கப்படுகிறது.

    சந்திரகாச்சியில் இருந்து மங்களூரு செல்லும் விவேக் வாராந்திர ரெயில் (எண்.22851) வியாழக்கிழமை தோறும் மதியம் 2.55 மணிக்கு சந்திரகாச்சியில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு மங்களூரு சென்றடையும். இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ரெயில் திருப்பூருக்கு நாளை வெள்ளிக்கிழமை இரவு 11.38 மணிக்கு வந்து செல்லும். இதுபோல் மங்களூரு - சந்திரகாச்சி செல்லும் விவேக் வாராந்திர ரெயில் (எண்.22852) சனிக்கிழமை தோறும் மங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை தோறும் மாலை 5.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

    வருகிற 16-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.13 மணிக்கு திருப்பூருக்கு வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×