என் மலர்
நீங்கள் தேடியது "பவுர்ணமி பூஜை"
- ஐப்பசி பவுர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
- அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.
ஐப்பசி பவுர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடை சார்த்தலாம்.
அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.
மிளகு சாதம், கரும்புச்சாறு இவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
இந்த பூஜை செய்வதன் மூலம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
ஐப்பசி பவுர்ணமியில் லட்சுமி விரதமும் மேற்கொள்வார்கள்.
கார்த்திகை மாத பவுர்ணமியன்று பூப்போட்ட ஆடையும், ருத்திராட்ச மாலையும் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
வெண் பொங்கல், நெய் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும் பூஜையாக இது நம்பப்படுகிறது.
- 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- நாளை வரை நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
திருவேற்காடு:
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் நேற்று முதல் 3 நாட்கள் நிறைமணி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பந்தல் முழுவதும் தோரணமாக கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.
இந்த தோரணங்களை பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்.
இயற்கை வளங்கள் பெருக வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.
சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. நிறைமணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காட்சி அளித்தது.
பக்தர்கள் நிறைமணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு ஆவணி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
மாலை 6.30 மணியளவில் முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சை அரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப் பொருள்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.
பின்னர் 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடந்தது.
முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில பக்தர்கள் பங்கேற்பு.
- பல்வேறு துறைகளில் சாதனைப்ப டைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஒரப்பம் கிராமத்தில், பார்ஸ்வ பத்மாவதி சக்தி பீடம் (ஜெயின் கோயில்) அமைந்துள்ளது.
இந்த சக்தி பீடம் உலகில் அதிக உயரமுள்ள சிலைகளைக் கொண்ட ஜெயின் கோயிலாக உள்ளது. இக்கோயிலில் நேற்று குரு பவுர்ணமி பூஜை, கிருஷ்ணகிரி சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் நடந்தன.
இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மந்திரங்கள் ஓத மதியம் மூலிகை குளியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை கவுரவிக்கும் வகையிலும், சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், திரவுபதி முர்முவிற்கு 12 அடி உயரத்தில் காய்கறிகள், பழங்களைக் கொண்டு சிலை அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதே போல், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தேசத்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைப்ப டைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதை பா.ஜ., மாநில துணைத் தலைவர் நரேந்திரன், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
பின்னர், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சைவ உணவு பழக்கம் உள்ளவராக இருப்பதால், அவரை முன்னிறுத்தி இங்கு சைவ உணவு விழிப்புணர்வு பிரச்சாரமும், அவரை ஆதரிக்கும் விதமாக இங்கு பழங்களால் அவரின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. குரு பவுர்ணமி விழாவானது, தமிழகத்திலும், இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக வாழ்ந்து நமக்கெல்லாம் அருள் செய்த அனைத்து துறவிகள், ஞானிகள், இளங்கோ வடிகள், திருவள்ளுவர் போன்ற மகான்களை பழங்களில் உருவங்களாக செய்து கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி சைவ உணவு விழிப்புணர்வுக்காவும், பாரத நாட்டிற்கு எல்லா விதமான நலமும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பார்ஸ்வ பத்மாவதி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். இதில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.