search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் கம்பெனி"

    • பெரியக்குப்பம் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
    • கும்பலை மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியக்குப்பம் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக கோடிக்கணக்கான ரூபாயில் இருந்த இரும்பு பொருட்களை நூற்றுக்கணக்கான நபர்கள் தொடர்ந்து திருடி சென்று வந்தனர். இன்று காலை ஒரு கும்பல் தனியார் கம்பெனி வளாகத்தில் இரும்பு பொருட்கள் திருடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி மனோகரன் தலைமையில் ஊழியர்கள் சோதனை செய்து கொண்டு இருந்தபோது, ஒரு கும்பல் இரும்பு பொருட்கள் திருடி இருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து ஆறு பேர் கொண்ட கும்பலை அவர்கள் மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 150 கிலோ இரும்பு பொருட்களும் ஒப்படைத்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளக்கரையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 38), குண்டியமல்லூரை சேர்ந்த சுபாஷ் (வயது 42), தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சுகன்ராஜ் (வயது 26), தியாகவல்லியை சேர்ந்த சத்தியசீலன் (வயது 45), ஆலப்பாக்கத்தை செல்லப்பன் (வயது 40), தியாகவல்லியை சேர்ந்த இளையபெருமாள் (வயது 49) என தெரியவந்தது‌. இதனை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 6 பேர் கைது செய்தனர். 

    • 5 ஊழியர்கள் கைது
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சி பகுதியில் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு புலிவலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வன்னியவேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45), வாங்கூரை சேர்ந்த வெங்கடேசன் (63), வாலாஜா கே.கே. நகரை சேர்ந்த தனசேகரன் (53), ஆர்.கே. பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (52) ஆகியோர் கூலிவேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் நேற்று கம்பெனியில் உள்ள ரூ.4 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி வேனில் ஏற்றி செல்ல முயன்றனர்.

    அதனை பாதுகாப்பு பணியில் இருந்த ரமேஷ் என்பவர் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து வாகனத்தை சோதனை செய்த போது ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் பிடித்து கொண்டபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் கொண்டபாளையம் போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் இருக்கும் போது விபத்து
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ஜார்கண்ட் மாநிலம் பஞ்ச்கதியபஜார் ரக்சி பகுதியை சேர்ந்தவர் ரபிக்முபின் (வயது 34). இவரது சகோதரர் மபிஜீதின் முமின் (31). இருவரும் குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழியில் உள்ள வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று ரபிக்முபின் கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் இருக்கும் போது எதிர்பாராதவிதமாக கொதிகலனில் இருந்த சூடான தண்ணீர் ரபிக்முபின் உடல் முழுவதும் பட்டு பலத்த காயமடைந்தார்.

    பணியில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மபிஜீதின்முமின் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே தனியார் கம்பெனியில் 1/2 டன் இரும்பு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கம்பெனி இயங்காததால் டன் கணக்கில் ஏற்கனவே இரும்பு பொருட்கள் ஏராளமானோர் திருடி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரியகுப்பத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு தானே புயல் தாக்கிய பிறகு கம்பெனி இயங்காததால் டன் கணக்கில் ஏற்கனவே இரும்பு பொருட்கள் ஏராளமானோர் திருடி சென்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசார் கடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியில் உள்ள இரும்பு கடையில் இரும்பு பொருட்கள் திருடி வந்து வைத்திருப்பதாக தனியார் கம்பெனி ஊழியர் கண்ணன் மற்றும் அவருடன் பணிபுரியும் சாமிநாதன் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது தனியார் கம்பெனிக்கு சொந்தமான இரும்பு பொருட்கள் 1/2 டன் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கஜா, பெரிய காரைக்காடு சேர்ந்தவர் முருகானந்தம், அணுகம்பட்டு ஈச்சங்காடு சேர்ந்தவர்கள் நடராஜன், எழிலரசன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கஜா என்பவரை தவிர்த்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×