search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிகால் வாய்க்கால்"

    • வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    • உயிர் பலி ஏற்படும் என்ற அபா யத்துடன் தினந்தோறும் வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை ரூ. 30 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒருபுறம் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெ ற்று வருவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலை ஓரத்தில் தோண்ட ப்பட்ட பள்ளங்கள் அருகா மையில் பாதுகாப்பு உபகர ணங்கள் இல்லாத தால் எப்பொழுது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் என்ற அபா யத்துடன் தினந்தோறும் கார், வேன், பஸ், இருசக்கர வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர்.

    மேலும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக் கொண்டு வரும் மாட்டு வண்டிகள், டிராக்டர் போன்றவற்றால் ஒருபுறம் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காண ப்பட்டதோடு நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு இருந்து வருகின்ற து. இதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவற்றை போக்குவர த்து நெரிசலில் சிக்கி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.மேலும் நெடுஞ்சாலை த்துறையினர் எந்தவித முன் ஏற்பாடுகள் செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதால் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வரக்கூடிய கனரக வாக னங்கள் களிஞ்சிக்குப்பம் சாலை , கஸ்டம்ஸ் சாலை வழியாக கடலூருக்கு செல்வதற்கு போலீசார் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த போக்குவரத்து பாதிப்பு மற்றும் உயிர்பலி ஏற்படக்கூடிய நிலையில் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரு கோடியே 17 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட பகுதியில் சாலை வசதி , குடிநீர் வசதி மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    இன்று காலைகடலூர் மாநகராட்சி 8-வது வார்டில் ஒரு கோடியே 17 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகராட்சி கவுன்சிலர் சுமதி ரங்கநாதன், மண்டல குழு தலைவர் சங்கீதா, பகுதி துணை செயலாளர் கார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, வடிகால் வாய்க்கால் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் வண்டிப்பாளையம் சரவணா நகர் இணைப்பு சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று காலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார். ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் வரவேற்றார்.

    இதில் பகுதி செயலாளர் சலீம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில் முருகன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
    • நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் தெரு வில் தனியார் மருத்துவ மனைகள், கல்வி நிறுவ னங்கள், மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகின்ற னர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் மழைக்காலங்களில் அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் சுமார் 44 கோடி ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகே வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி யை பாதியில் நிறுத்திவிட்டு சென்றதால் தற்போது கழிவுநீர் முழுவதும் சாலை யில் பெருக்கெடுத்து ஓடி குட்டை போல் தேங்கி உள்ளது. பள்ளி வளாகம் எதிரில் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் வருகிற 14-ந்தேதி பள்ளி கள் திறக்க உள்ள நிலை யில் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இது மட்டும் இன்றி சாலை வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதி அடைந்து வருவதோடு சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவுநீர் மீது செல்வதால் பொதுமக்கள் மீது கழிவுநீர் தெளித்து துர்நாற்றம் வீசுவதோடு உடல் அரிப்பு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.

    ஆகையால் கடலூர் மாந கராட்சி நிர்வாகம் பாதி யில் நிறுத்தப்பட்ட வடி கால் வாய்க்கால் பணி களை உடனடியாக கட்டி நடவடிக்கை எடுக்கா விட்டால் இப்பகுதி முழு வதும் தண்ணீர்சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத் தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகை யால் இதனை உடனடியாக கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி 230 கோடி செலவில் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலையின் இரு புற மும் நெடுஞ்சாலை த்துறையினர் சரியான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமலும், ஒரு சிலருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வரை வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    மேலும் கடந்த 2 மாதமாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தியும், சரியான முறையில் அளவீடு பணிகளில் சர்வேயர் ஈடுபடவில்லை என கூறி தொடர்ந்து அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் நேற்று திடீரென்று கீழ்ப்பட்டாம்பாக்கம் ஸ்டேட் வங்கி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை பார்த்த ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்கதைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணி நடைபெற்று முடியவில்லை. ஆனால் இந்த பணியை தொடங்குவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று பணியில் ஈடுபட்ட வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் சட்டவிரோதமாக பணிகள் நடைபெற்று வருகிறது என புகார் தெரிவிப்போம் என தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் முரண்பாடான பல்வேறு தகவல்கள் தெரிவித்ததால் கடும் எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகளை நிறுத்தி அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் சேமதடைந்தன.
    • கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராம மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒரு கோரிக்கை அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது..

    கொள்ளிடம் கரையோரமுள்ள வாழ்க்கை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்களாவும், கீரை, வாழை உள்ளிட்ட தானியப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் சேமதடைந்தன.

    இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் கசிந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாழ்க்கை கிராமத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர் வாரி, கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

    கடலூரில்வடிகால் வாய்க்காலில் லாரி கவிழ்ந்தலால் பரபரப்பு நிலலியது.

    கடலூர்:

    திண்டிவனத்தில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூருக்கு வந்தது. பின்னர் கடலூர் - சிதம்பரம் சாலையில் நடைபெறும் கட்டிட பணிக்காக சாலை ஓரத்தில் டிரைவர் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி, வடிகால் வாய்க்கால் உடைந்து கவிழ்ந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிறிது நேரம் நின்றனர். பின்னர் லாரி சாலை ஓரமாக நின்றிருந்ததால் பெருமளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் வடிகால் வாய்க்கால் உடைந்து லாரி ஒரு பகுதி முழுவதும் கவிழ்ந்ததால் லாரிலிருந்து ஜல்லிக்கற்களை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் லாரி அருகே வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    ×