search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்பாடு"

    • திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    திருப்பூர், 

    திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி ெரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாற்றாக இந்த ெரயிலை கோவை வரை நீட்டிப்பதாக அப்போது ெரயில்வே அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு மாறாக அந்த ெரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ெரயிலை, இப்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    தற்போது பாம்பன் பாலமும், ராமேஸ்வரம் ெரயில்வே நிலையமும் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ெரயில்கள் அனைத்தும், மண்டபம் மற்றும் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படுகின்றன.

    கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த பின்பு அந்த ெரயில் கோவை- ராமேஸ்வரம் இரவு நேர ெரயிலாக இயக்கப்பட்டு வந்தது.

    மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் 90 ஆண்டுகளாக இயங்கி வந்தது.

    கோவையில் வாழும் பல லட்சம் தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயனளித்து வந்தது. அகல ெரயில் பாதைப்பணிக்காக நிறுத்தப்பட்ட அந்த ெரயிலை மீண்டும் இயக்கினால் கொங்கு மண்டலத்திலுள்ள பக்தர்கள், தென் மாவட்ட மக்கள் அனைவருக்கும் பேருதவியாக இருக்குமென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி, மனுப்போர் நடத்தி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் கடிதம் மேல் கடிதம் அனுப்பி வருகின்றனர். இன்று வரையிலும் இதற்கான பரிந்துரை கூட அனுப்பப்படவில்லை.

    இந்நிலையில் மங்களூருவிலிருந்து ராமேஸ்வரத்துக்கு போத்தனூர் வழியாக வாரம் இரு முறை ெரயிலை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அனுப்பியுள்ளது.அதையும் கோவை சந்திப்புக்கு வராமல், போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.
    • மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.

    உடுமலை:

    வளர்இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு சூழ்நிலைகளால் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால் மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாவட்டம் வாரியாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக அரசு பள்ளிகளில் தனித்தனியாகவும், குழுவாகவும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஆனால் இத்திட்டம் கொரோனாவுக்கு பின் பள்ளிகளில் நிறுத்தப்பட்டு விட்டது. மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் உளவியல் ஆலோசகர்களிடம் கூறி தெளிவு பெற்றனர்.இதனால் பல பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. தவிர தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் இத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. மாவட்டம்தோறும் ஒரு ஆலோசகர் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.இதனால் பள்ளிகளில் தொடர்ச்சியான ஆலோசனை வகுப்புகளுக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்துஉளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்தது. இப்போது தேர்வு பயம் நீக்குவதற்கும் புகார் அளிப்பதற்கும், ஆலோசனை பெறுவதற்கும் பொதுவான சில தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அவற்றை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். மேலும் அவ்வாறு தேடிச்சென்று ஆலோசனை பெற வேண்டும் என்ற மனநிலை வருவதற்கும் ஒரு தெளிவு வேண்டும்.90 சதவீத மாணவர்களிடம் அது கிடையாது. அவர்களிடம் கலந்துரையாடினால் மட்டுமே என்ன பிரச்சினை என்பதை கண்டறிய முடியும். இதற்கு பள்ளிகளுக்கான உளவியல் ஆலோசனை திட்டம் கட்டாயம் தேவையாகதான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    கல்வித்துறை சார்பில் கற்றல் குறைபாடு என்ற அடிப்படையில் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதாவது உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் இயல்பான நிலையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கற்கும் திறன் மட்டும் சற்று குறைவாக இருக்கும்.அத்தகைய நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் பலரும் கற்றல் குறைபாடு என்ற அடிப்படையில் அரசின் சலுகை பெற்று பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.

    அதன்படி தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் ஏதாவது ஒரு பாடத்தை தேர்வு எழுதாமல் தவிர்ப்பது, தேர்வெழுத வழக்கமாக ஒதுக்கப்படும் நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது, கணித பாடத்திற்கு கால்குலேட்டர் பயன்படுத்துவது உள்ளிட்ட சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இந்த சலுகையை பயன்படுத்தி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் பலர் தமிழ் பாடத்தை எழுதாமலும், அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் ஆங்கில பாடத்தை எழுதாமலும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

    இது குறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    பல பள்ளிகள் கற்றல் குறைபாடு என்ற அரசின் சலுகையை பயன்படுத்தி மொழிப்பாடத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.அத்தகைய விலக்கு பெற்ற மாணவ, மாணவிகள் உண்மையில் அந்த பாடங்களை பயில்வதில் மந்த நிலையில் தான் உள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அத்தகைய சலுகையை பயன்படுத்திக் கொண்டனவா என்பது குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் வாங்கப்பட்ட 2 லாரிகள் மற்றும் 3 சிறிய சரக்குந்து வாகனங்களை பார்வையிட்டார்.
    • மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் வாங்கப்பட்ட 2 லாரிகள் மற்றும் 3 சிறிய சரக்குந்து வாகனங்களை பார்வையிட்டார். கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் தானியங்கி பண பரிவர்த்தனை எந்திரத்தை பார்வையிட்டார். பின்னர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினார்.

    கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண் டார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதி வாளர் நந்தகுமார், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் திலீப்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தால் கேஸ் விலையும் உயர்ந்து வருகிறது.
    • திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாண எரிவாயு திட்டத்தை பரவலாக்கவேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த 1987ம் ஆண்டில் சாண எரிவாயு திட்டம் (பயோ கேஸ்) திட்டம் துவங்கியது. மத்திய அரசின் மரபு சாரா எரிவாயு திட்ட துறை மானியத்துடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வந்தது.

    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தால் கேஸ் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் சாண எரிவாயு திட்டத்தை தீவிரமாக உத்தரவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாண எரிவாயு திட்டத்தை பரவலாக்கவேண்டும்.

    விவசாயம், கால்நடை வளர்ப்போர் வீடுகளில் இந்த திட்டத்தை மானியத்துடன் நிறைவேற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சி முகமை மூலமாக இந்த திட்டம் ஆரம்ப காலத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கே.வி.ஐ.சி, தீனபந்து, பிரகதி என்ற பெயரில் சாண எரிவாயு திட்டங்கள் நடந்தது.

    மத்திய அரசு 9 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கியது. சுமார் 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அதில் இரும்பு டிரம் கவிழ்த்து சாணத்தை கரைத்து ஊற்றினால் அதில் இருந்து மீத்தேன் வாயுவை நேரடியாகவும், சிலிண்டரிலும் சேகரித்து சமையலுக்கு பயன்படுத்தி வந்தார்கள். பெட்ரோலியம் பொருட்களின் மூலமாக கிடைக்கும் சமையல் கியாஸ் ஆபத்தானதாக கருதப்பட்டது.

    மேலும், பாத்திரங்களில் பிசுபிசுப்பு ஏற்பட்டு வந்தது. சாண எரிவாயுவில் அதுபோன்ற குறைபாடு எதுவுமில்லை. விவசாயம் சாராத இடங்களில் கூட குறிப்பாக கேண்டீன், மாணவர் விடுதிகளில் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு அறிவுறுத்தியது.

    ஆனால் கடந்த 7 ஆண்டாக இந்த திட்டத்தை தீவிரமாக்க மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை. இந்த திட்டத்திற்கு போதுமான நிதி வழங்க வேண்டும். கிராமங்களில் குறிப்பாக விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கும் இடங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு இந்த திட்டத்தை விரிவாக்க முயற்சி செய்யவில்லை.

    கோவையில் 15 இடத்திலும், சேலத்தில் 13 இடத்திலும், ஈரோட்டில் 12, திருப்பூரில் 9, திருச்சியில் 10 என மாநில அளவில் 150க்கும் குறைவான இடத்தில் சாண எரிவாயு திட்டம் செயலாக்க அனுமதி கிடைத்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சாண எரிவாயு திட்டத்திற்கு மத்திய அரசு அரசு அனுமதி வழங்க வேண்டும்.

    படிப்படியாக இந்த திட்டத்தை அதிகரித்தால் மக்களுக்கு பயன் கிடைக்கும். ஆனால், மத்திய அரசு நிதி வந்தால் தான் இதை சாத்தியமாக்க முடியும் என ஊரக வளர்ச்சி முகமையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், பயோ கேஸ் திட்டம் பாரம்பரியமானது. விவசாயம், கால்நடை வளர்ப்பு குறைந்து விட்டதால் இந்த திட்டத்தை பரவலாக்க முடியவில்லை. பல கிராமங்களில் கால்நடை வளர்ப்பு நடக்கிறது. இந்த பகுதியில் சாண எரிவாயு அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    சிலிண்டருக்கு அதிக பணம் செலவு செய்வதை காட்டிலும் மத்திய அரசு இதுபோன்ற இயற்கை திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்தால் நன்றாக இருக்கும். சாண எரிவாயு திட்டத்தின் மூலமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 4 ஆயிரம் ரூபாய் மீதமாகும் என்றனர்.

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை செயல்படுத்துவது இல்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
    • திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடமாடும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. அ.தி.மு.க இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர்.

    வட்டச் செயலாளர் பொன் முருகன் வரவேற்றார். இதில்

    அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி கோடை காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. திருப்ப ரங்குன்றம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகிறது.

    பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் மது கடைகளும் அமைந்துள்ளன. இவற்றை அகற்றக்கோரி சட்டப்பேரவையில் நான் குரல் கொடுத்த போது அதற்காக ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் மழுப்பலான பதிலை தெரிவித்தார். மதுக்கடைகளை அகற்றுவது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டம் டைட்டல் பார்க் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அவர்கள் அறிவிப்போடு நிறுத்தி விடுவார்கள். அதனை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை செய்ததில்லை. மதுரை தொழில் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர்கள் அறிவிக்கவில்லை.

    அதே சமயத்தில் அ.தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை உடனடியாக செயல்படுத்தி காண்பிக்கும். தி.மு.க. அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வட்ட செயலாளர் நாகரத்தினம், என்.எஸ். பாலமுருகன், பாலா, தவிடன், முத்துக்குமார், அக்பர் அலி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    கொரோனாவால் 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எனவே 1 முதல் 3-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகளுக்காக எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செயல் மற்றும் விளையாட்டு வழியில் கற்றாலும், அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாக பிரித்து பாடங்களை கற்று தருவதே இதன் அடிப்படை. பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடைபெறும்போது ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் பெற்றோரிடம் எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்தும் மாணவர்களின் கற்றல் நிலை சார்ந்தும் பகிரப்பட வேண்டும்.வரும் 2025க்குள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு.

    இதன் மாதிரி வகுப்பறை செயல்பாடுகள் கல்வி தொலைக்காட்சியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று அந்த வாரத்தில் மாணவர்கள் அடைந்த கற்றல் விளைவு குறித்து அறிய வளரறி மதிப்பீடு மற்றும் இறுதியில் தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.மேலும்எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்று கற்பதை பெற்றோர் அறியும் வகையில் வகுப்பறையை பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும். இதுகுறித்து பெற்றோர் கூட்டத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் செயல்பாடின்றி உள்ளது.உள்கட்டமைப்பு வசதி உட்பட எல்லா வகையிலும் அரசு பள்ளிகளை தன்னிறைவு பெறச்செய்ய தமிழகம் முழுவதும்அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்டமேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 89 அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளிகள், 76 உயர் நிலைப்பள்ளிகள் எனமொத்தம் 165 பள்ளிகளில் மேலாண்மை குழு பிரதிநிதிகள் பதவியேற்றனர்.இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,333 அரசு, நகராட்சி பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாரம் ஒருமுறையாவது பள்ளியை பார்வையிட வேண்டும். மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கவேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு, தன்னார்வலர்கள், தங்களது சுய பங்களிப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    ×