search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் கோவில்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை அம்மன் கோவில்களுக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்படுகிறார்கள். 

    பாரிமுனை-காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன் மற்றும் பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்திற்கான கட்டணம் ரூ.1000.

    மற்றொரு அம்மன் சுற்றுலா திட்டமானது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், முண்டககண்ணி அம்மன், கோல விழியம்மன், தி.நகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ.800.

     

    திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும்.

    ஆடி அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
    • திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2024-2025-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

    இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

    தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில், வராகியம்மன் கோவில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவில் , திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

    கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சூலக்கல் சூலக்கல் மாரியம்மன் கோவில், கோயமுத்தூர், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

    திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

    மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோவில், சோழவந்தான், ஜனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்ளுக்கு ஒரு பயணத்திட்டம்,

    திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, பகவதியம்மன் கோவில், முப்பந்தல், இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம் ஒன்னு விட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவில், குழித்துறை சாமுண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    ஆடி மாத அம்மன் கோவில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது ஜூலை 19, 26 ஆகஸ்டு 2, 9 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஆன்மீக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

    இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணைய தளமான www.hrce.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 17.7.2024-க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.

    மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111, சென்னை மண்டலத்திற்கு 99417020754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114, கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422-2244335, திருச்சி மண்ட லத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதிகளிலும் இன்று வழிபாடுகள் நடைபெற்றன.

    ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டார்கள்.

    சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் முண்டக கண்ணி அம்மன் கோவில், கோலவிழி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன், திருமுல்லைவாயல் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடை அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்களில் இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் ராயபுரம் உச்சிகாளி அம்மன், எருக்கஞ்சேரி முத்துமாரியம்மன், கன்னிகாபுரம் முத்து மாரியம்மன், செங்குன்றம் கங்கையம்மன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டனர். மதியம் அம்மன் கோவில்களில் கூழ்வார்த்து வழிபாடு நடத்தப்பட்டது. சில பகுதிகளில் பக்தர்கள் அலகு குத்திவந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சென்னை சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பதற்கு ஆடி கடைசி வெள்ளியில் நோன்பிருந்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது வழக்கம்.

    அதன்படி பெருமாள் கோவில்களில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதிகளிலும் இன்று வழிபாடுகள் நடைபெற்றன. சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கலிட்டனர்.

    • ஆடி கடைசி வெள்ளியான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டா டப்படுவது வழக்கம்.

    குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப் படும். பக்தர்களுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும். அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இதில் பிரசித்தி பெற்ற ஆடி கடைசி வெள்ளிக் கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும், பிற முக்கிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷே கங்கள் நடந்தன. ஏராள மான பெண்கள் பொங்கலிட்டும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.

    மதுரை சுந்தரராஜபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா மற்றும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் போலீசார் ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலிலும் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி திரளான பக்தர் கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்ட னர்.

    ரிசர்வ் லைன் மாரியம் மன் கோவில், திருப்பரங் குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில், மறவர்சாவடி தசகாளி யம்மன் கோவில், சொக்க லிங்கநகர் சந்தனமாரி யம்மன் கோவில், பி.பி.சாவடி பஸ் நிறுத்தம் காளியம்மன்-மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேருநகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள பல்வேறு கோவில் களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பட்டு பூஜைகள், தீபாரா தனை நடந்தது.

    அழகர்கோவில், நூபுர கங்கை, ராக்காயி அம்மன் கோவிலில் ஏராளமானோர் வழிபட்டு நீராடினர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

    • செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
    • அரக்கர்களை அழித்து, நல்வர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும்.

    கருவாழக்கரை காமாட்சியம்மன்

    மயிலாடுதுறையில் இருந்து பூம்புகாருக்குச் செல்லும் வழியில், 9வது கிலோ மீட்டரில், காவிரியின் வடபகுதியில் கருவாழக்கரையில் காமாட்சி அம்மனின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எட்டுத் திசைகளிலும் நவக்கிரக சேத்திரங்களான சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவை அமைந்திருக்கின்றன. எனவே இவர்களுக்கு நடுவே நவக்கிரக தேவியாக ஸ்ரீகாமாட்சி அம்மன் அமைந்து அருளாட்சி புரிந்து வருகிறாள். இங்கு ஆடி மாத வழிபாடு மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    சிறுவயல் பொன்னழகியம்மன்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது சிறு வயல், இங்கே கோயில் கொண்டுள்ள பொன்னழகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். திருமண அனுக்ரஹ ஸ்தலம். பவுர்ணமியன்று அம்மனைத் தரிசித்து வந்தால்.கண்டிப்பாக குழந்தைப் பேறு கிட்டும். தண்ணீரில் விளக்கு எரிய தனிக் கருணை புரிவாள் எங்கள் அம்பாள் என இங்கு வந்த அரசு உயர் அதிகாரியிடம் ஆலயத் தக்கார் கூறி இருக்கிறார். அதை நிரூபித்துக் காட்டுமாறு அந்த அதிகாரி சொல்ல, புது அகல்களில் நீரை ஊற்றி திரிபோட்டு விளக்கை ஏற்றினார்களாம். தீபம் எரிந்து அம்மன் கருணை வெளிப்பட்டது. ஆடி மாதம் இங்கு சிறப்பு பூஜைகள் உண்டு.

    கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்

    கோவில்பட்டி செண்பகவல்லிக்கு வளைகாப்பு உத்ஸவம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் போலவே நடை பெறுகிறது. முதலில் செண்பகவல்லியை வணங்கிவிட்டு பிறகு பூவன நாதரை வணங்குவது கோவில்பட்டியில் வழக்கம். 7 அடி உயரத்தில் கர்ப்பக்கிரஹத்தில் காட்சி தரும் இவளைத் தரிசித்தால், மெய்சிலிக்கும். தீராப்பிணி தீர்த்து சகல செல்வங்களுக்கும் தரும் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணகான பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல்கள், மஞ்சள், குங்குமப்பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

    பெரம்பூர் காமாட்சியம்மன்

    சென்னை, மாதவரம், நெடுஞ்சாலை பெரம்பூர் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில், சிந்தாமணி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காட்சி அளிக்கும் காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு உத்ஸவம் நடக்கிறது. அன்றைய தினம், மகப்பேறு வேண்டும் பெண்களின் மடியில் முளைப்பயிறு கட்டிவிடும் பிரார்த்தனையும் நடக்கிறது.

    கல்லுமடை மீனாட்சியம்மன்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

    காஞ்சி ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள்

    காசியிலிருந்து காஞ்சிக்கு, சக்தி வந்து இறங்கி அன்னபூரணியாக அன்னதானம், செய்த ஆதிபீடம் இதுவாகும். அரக்கர்களை அழித்து, நல்வர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும். இந்த கோவில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் 100 அடி தொலைவிலேயே அமைந்துள்ளது. இந்தப் பழமையான கோயிலில், இறைவனை அடைய வேண்டி தவம் இயற்றிய சக்தி, இறைவனோடு கலந்ததைத் தெரிவிக்கும் பொருட்டு லிங்க மேனியில் சக்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்திலும் மாலை நேரத்திலும் வழிபடுவர்களுக்கு வேண்டியது கிடைக்கு மாம்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வருமாம். இழந்த பொருள் கிடைக்குமாம். ஆதியில் காமாட்சி அமர்ந்த இடம் ஆதிபீடம் என்ற வழக்கில், ஆதிபீடா பரமேஸ்வரி என் செண்பகவல்லிக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.ற பெயர் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் நடைபெற்றது

    கரூர்

    புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது

    • ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது
    • தா.பேட்டை பகுதியில் இருந்து ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

    திருச்சி :

    தா.பேட்டை பகுதிகளில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    ஆடி வெள்ளியை முன்னிட்டு தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோன்று செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ஸ்ரீ ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் தா.பேட்டை பகுதியில் இருந்து ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

    • ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
    • கோவில்களில் கூழ் வார்ப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு தானியங்கள் தேவை உள்ளது.

    திருப்பூர், ஜூலை.16-

    தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் பயனடைந்து வருகின்றன. இந்தநிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களுக்கு கம்பு, கேழ்வரகு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:-

    ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இம்மாதத்தில் பெண் பக்தர்கள் விரதமிருந்து அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆடி மாதம் துவங்கவுள்ள நிலையில், அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சி மிக முக்கியமானது.கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோவில்களில் விழாக்கள், நிகழ்ச்சிகள் கொண்டாடப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் வரவுள்ள ஆடி மாத விழாவை சிறப்பாக கொண்டாடி நோய் நொடிகளின்றி வாழ அம்மனை வழிபட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதற்கிடையே கோவில்களில் கூழ் வார்ப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு தானியங்கள் தேவை உள்ளது. இதற்காக ஆடி வெள்ளி வழிபாட்டுக்காக, ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள அம்மன் கோவில்களுக்கு கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை வழங்கி தமிழக அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×