என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.டி.ராஜேந்திரபாலாஜி"

    • தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மரியாதை செலுத்தினார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி.

    சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன் திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், மணிகண்டன் உள்ளிட்ட அ.தி.மு.க. மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • 2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.

    ராஜபாளையம்.

    ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் தேரடி திடலில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செய லாளரும், முகவூர் கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.எம்.குருசாமி தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகவும், தில்லுமுல்லு ஆட்சியாகவும் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

    உதயநிதி ஸ்டாலின் எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பேசினார். அதேபோல் கனிமொழி ஒரேயொரு கையெழுத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்றார். ஆனால் மதுக்கடைகள் மூடப்படவில்லை. அதற்கு பதிலாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது.

    மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் மீதும், கடவுள் மீதும் அச்சம் கிடையாது. ஆகையால் தான் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி யாரை முதலமைச்சராக்கி அழகு பார்க்க தயாராகி விட்டனர்.தி.மு.க. ஆட்சி எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

    குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ெரயில்வே மேம்பால பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் ராஜபாளையம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலை ராஜ பாளையம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் எம்.ஜி.ஆர். இளை ஞரணி துணை செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ், மகளிரணி துணை செயலாளர் சந்திரபிரபா, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியம்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ்,மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணைசெயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் வனராஜ், ராஜபாளையம் நகர செயலாளர்கள் துரைமுருகேசன்(வடக்கு), பரமசிவம்(தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள் ளையின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவ காசியில் திருத்தங்கல் வ.உ.சி. சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அமைப்பு செயலா ளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜவர் மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபு ராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வேண் டுராயபுரம் சுப்பிர மணியன், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டி யன், ஷாம் என்ற ராஜ அபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ்.

    கருப்பசாமி, லட்சுமிநாராயணன், ஆரோக்கியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரி முத்து, கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மாநகர கவுன்சிலர் கரை முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் பாண்டிய ராஜன், தலைவர் செல்வம், மாநகர இளைஞரணி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. கூட்டணி சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது.
    • தி.மு.க. அரசு வந்த பிறகு தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்க புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தற்போது சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது. இதற்கிடையே விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன் என்றும், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் ஏதும் செய்து விட்டீர்களா? என்றும் பேசியிருக்கிறார்.

    அரசின் ஒரு தவறைக்கூட சுட்டிக் காட்ட முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை 48 மணி நேர சோதனையை நடத்தியது.

    தற்போது பட்டாசு தொழிலாளர்கள் பதறிப் பயந்து போய் வேலை செய்வதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. தி.மு.க. அரசு வந்த பிறகு தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.

    தி.மு.க. அரசால் தான் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது. அதேபோல் நெசவு தொழிலாளர்களுக்கு போதிய அளவில் நூல் கிடைக்கவில்லை, விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவில்லை. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்கள் வருகிற தேர்தலில் சரியான பாடம் புகட்டு வார்கள்.

    தமிழகத்தில் 234 தொகுதி களில் 200 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றும் என்று பேசி வருவது சரியல்ல. 200 தொகுதிகளை வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.

    மேலும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, மாறாக தி.மு.க. ஓட்டுகள் தான் சிதறும். அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் வராது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார்.
    • விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிமன்றம் உத்தரவு.

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாததால் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு தமிழக போலீசாருக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை என அதிப்தி தெரிவித்தது.

    முன்னதாக,

    முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி நல்லதம்பி எனபவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    ×