search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பாக்கெட்டுகள்"

    • ரூ.2 லட்சம் சிக்கியது; 2 பேர் கைது
    • வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்ப னையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவி ஷனலுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகர்கோவில் தனிப்படை போலீசார் நேற்று வடசேரி, ஒழுகினசேரி பகுதியில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது தெரிய வந்தது.

    அதில் இருந்து 360 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்க ளிடமிருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தி வந்ததாக காட்டாதுறை பூவின்விளை பகுதியை சேர்ந்த ரத்தின குமார் (55), சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த முருகே சன் (28), சேலம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கண்ணன் (28) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ரத்தினகுமார், முருகேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப் பட்ட இரு வரிடமும் தடை செய்யப் பட்ட புகையிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மதுரையில் போலீஸ் நிலையம் அருகில் என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். போலீஸ் நிலையம் அருகில் உள்ள என்.எம்.ஆர். பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள பிள்ளையார்பாளையம் ரோட்டில் சென்றபோது அந்தப்பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ புகையிலை பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை விற்ற பணம் ரூ.17 ஆயிரமும் கைப்பற்றப் பட்டது.

    இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்ததாக சிம்மக்கல்லை சேர்ந்த அசோக்குமார் ஜெயின் (வயது52) என்பவரை கைது செய்தனர்.

    இவரிடம் நடத்திய விசாரணையில், மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. எங்கிருந்து புகை யிலை பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது? இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் 17 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாநகரில் சமூக விரோதிகள் கஞ்சா, புகை யிலை பாக்கெட்டுகளை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து விற்பனை நடக்கிறது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • 384 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ் பெக்டர் சாந்தி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட 384 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பேக்கரி உரிமையாளரை கைது செய்து 384 புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் சிறப்பு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் ஷாப் இன்ஸ்பெக்டர் பிரபு தலை மையிலான போலீசார் நேற்று இரவு திருக்கோவிலூரில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் வழியில் உள்ள சித்தலிங்க மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வேகமாக வந்த இரண்டு நபரை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்க ளிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஹோன்ஸ் 1140 பாக்கெட்டுகள் விமல் பாக்கெட் 1200 என மொ த்தம் 2340 பாக்கட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் திருக்கோ விலூரைச் சேர்ந்த சதீஷ் (வயது 55) சித்தலிங்கமடம் பகுதியில் சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பது தெரிய வரவே திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து 2 பேரையும் செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    ×