search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டும் பணி"

    • இத்திட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்கும் பயனாளிக்கு பணிகள் நிறைவு செய்த பின் 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
    • தியாண்டு கடந்து நடப்பு நிதியாண்டின் 6 மாதங்கள் முடிந்த பிறகும், கழிப்பிடம் அமைக்கும் இலக்கை எட்ட முடியாத நிலை தொடர்கிறது.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளில், தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவிநாசி - 314, தாராபுரம் - 288, குடிமங்கலம் -1 74, காங்கயம் - 298, குண்டடம் - 484, மடத்துக்குளம் - 84, மூலனூர் - 50, பல்லடம் - 215, பொங்கலூர் - 261, திருப்பூர் - 231, உடுமலை - 303, ஊத்துக்குளி - 249, வெள்ளகோவில் - 194 என 3,145 வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்க அனுமதிக்கப்பட்டது.

    தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்க, கூடுதல் செலவு ஏற்பட்டதாலும், திறந்தவெளி மலம் கழிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், தனிநபர் இல்லக்கழிப்பிடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்கும் பயனாளிக்கு பணிகள் நிறைவு செய்த பின் 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

    கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கு 3,145 கழிப்பறைகள் கட்ட மானியம் ஒதுக்கப்பட்டது. அதாவது தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம், 3 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டது.

    நிதியாண்டு கடந்து நடப்பு நிதியாண்டின் 6 மாதங்கள் முடிந்த பிறகும், கழிப்பிடம் அமைக்கும் இலக்கை எட்ட முடியாத நிலை தொடர்கிறது. கடந்த மாத நிலவரப்படி, 1,701 கழிப்பறைகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதற்காக 2.04 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், பணி முழுமையாக நிறைவு பெற்றால் மட்டுமே மானிய தொகை விடுவிக்கப்படும்.அதன்படி 40 சதவீதம் அளவுக்கு நிலுவை இருக்கிறது. இருப்பினும், டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை 100 சதவீதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர். 

    • புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் 13 ஏக்கரில் ரூ 20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.

    தொடர்ந்து அவர் கூறியதா வது: நாமக்கல் புதிய பஸ் நிலையம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பஸ் நிலைய பணிகள் முடிய காலம் உள்ள நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.

    • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
    • நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணியினை கலெக்டர் வினீத் தலைமையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 62 நபர்களுக்கு 24.80 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் ஆணையாளர் ராமர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
    • 2 ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

    உடுமலை :

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலையில் பழநி, சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், 2 ெரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது உடுமலை-செஞ்சேரிமலை ரோடு மற்றும் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில், குறுக்கிடும் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.இதில் செஞ்சேரிமலை ரோட்டில் பாலம் கட்டுமான பணிகளின் போது, போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ஒரு பகுதியில், பாலம் கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளது. மறு பகுதியில் பணிகள் இன்னும் துவங்கவில்லை.முக்கிய ரோடுகளின் குறுக்கிடும் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பிறகு ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.

    • உலகேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது.
    • உண்ணாமலை அம்மன் சன்னதியை பழைய முறைப்படி மாற்றி அமைக்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது.கும்பாபிஷேகத்துக்கு முன் உண்ணாமலை அம்மன் சன்னதியை பழைய முறைப்படி மாற்றி அமைக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    தொல்லியல் துறை கோவில் ஸ்தபதி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.பழைய இடத்தில் ஆய்வு நடத்தியதில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு புதிய சன்னதி கட்ட அனுமதி கோரப்பட்டது. ஓரிரு நாட்களிலேயே இதற்கான ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து அம்மன் சன்னதி கட்டுவதற்கான கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன.கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கேரள பிரசன்னம் பார்த்ததில் அம்மனை சிவனுக்கு வலப்புறமாக, பழைய முறைப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.எனவே கும்பாபிஷேகத்துக்கு முன் அம்மன் சன்னதி கட்டுமான பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்ததும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடக்கும் என்றனர்.

    • ரூ. 14.35 கோடியில் மருதையாற்றில் பாலம் கட்டும் பணிக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
    • பிரதான சாலையி–லிருந்து 8 கி.மீ தொலைவு உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம்,ஆதனூர்-–மழவரா–யநல்லூர் சாலை–யில் நெடுஞ்சாலை–த்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மருதையாற்றின் மேல் பாலம் கட்டும் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ–சங்கர் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அரியலூர்சட்ட–மன்ற உறுப்பினர் கு.சின்ன–ப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றி––யம், ஆதனூர்மற்றும் மழவ–ரா–யநல்லூர் இடையே மருதையாற்றில் வெள்ளப்பெருக்கின் போது பொதுமக்கள் பயன்பாட்டி–ற்கு பெரிதும் இடையூராக சாலை போக்குவரத்து உள்ளதாலும் ஓரியூர்சாலை வழியாக ஆதனூர்செல்ல–வதற்கு பிரதான சாலையி–லிருந்து 8 கி.மீ தொலைவு உள்ளது.

    பாலம் கட்டும் பணி முடிவடைந்தால் 3கிமீ பிர–தான சாலையை அடைய முடியும்என பொது–மக்களின் கோரி–க்கை–யினை ஏற்று தமி–ழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஆத–னூர்-மழவராயநல்லூர் சாலையில் நபார்டுமற்றும் கிராம சாலைகள் திட்ட–த்தின் கீழ் 0.6 கி.மீ-ல் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுமானப் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

    பணிகள் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு பொதுமக்கள் தற்போது சாலையினை பயன்படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்து பாலத்தின் நீளம் மற்றும் அகலம் குறித்து அலுவல–ர்களிடம் கேட்டறிந்தார். இப்பாலத்தில் 18 மீ நீளமுள்ள 10 கண்கள் அமைக்கப்பட உள்ளது என துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், பாலப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்கு–வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

    ×