search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட்"

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேசிய அளவில் இருக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், கேரள மாநிலத்தில் அந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடப் போவதாகவும், ஆகவே அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்டு கோரிககை வைத்தது.

    ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்டு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தனும் வயநாடு தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தியை காங்கிரஸ் நிறுத்தியிருப்பதற்கு தனது கண்டன கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியின் ஆதரவுடன் ராகுல்காந்தியை வேட்பாளராக முன்னிறுத்துவது வெட்கக் கேடானது.

    அவர் இந்திய கூட்டணி வேட்பாளராக ஏன் முன்னிறுத்தப்படுகிறார்? இந்தியா என்ற முத்திரையை பயன்படுத்தி கேரளாவில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. கேரளாவில் பரதிய ஜனதா கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சேதமடைந்துள்ள பஸ்களை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும்
    • கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பல பஸ்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், தங்க மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மோகன், ராஜ்குமார், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குதான் வேலை வழங்க வேண்டும்
    • அனைத்து கூலி தொழிலாளர்களையும் வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் 4 வது மாநாடு நாளை (சனிக்கிழமை) குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டப சாரு மஜும்தார் நினைவகத்தில் நடக்கிறது. காலை 10 மணிக்கு ஜஸ்டின் சுந்தர் மாநாடு கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

    கடலோர பகுதி செயலாளர் நஸ்ரேன் பெர்னார்ட் வரவேற்று பேசுகிறார். நிர்வாகிகள் சுசீலா, மேரி பிளவர், விஜயா முன்னிலை வகிக்கின்றனர். மாநில செயலாளர் என்.கே.நடராஜன் மாநாடு துவக்கவுரை ஆற்றுகிறார்.

    குமரி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அந்தோணி முத்து மாநாடு அறிக்கை வாசிக்கிறார்.மாநிலக் குழு உறுப்பினர் சிம்சன் நிறைவுரை ஆற்றுகிறார்.நிகழ்ச்சியை நிர்வாகிகள் சூசை மரியான், கார்மல், அர்ஜூனன், ஞானசெல்வம், சியாமளா, வக்கீல் ஐயப்பன், கணபதி, தங்கலட்சுமி, எஸ்டின், செல்வராஜ், ரவி, அனிற்றா பிரின்ஸி, ஜெமிலா ஜெனட், மாசிலாமணி, மார்டின் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.கிள்ளியூர் ஏரியா கமிட்டி செயலாளர் சுரேஷ் நன்றி கூறுகிறார்.

    மாநாட்டில் தமிழ்நாட் டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குதான் வேலை வழங்க வேண்டுவது, அனைத்து கூலி தொழிலாளர்களையும் வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க வேண்டுவது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    • தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திட நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்து நடந்தது.
    • மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தும் முடிவை கைவிட தமிழக அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திட நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்தும், மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தும் முடிவை கைவிட தமிழக அரசை வலியுறுத்தியும் நாகர்கோவிலில் இன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வடசேரியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநக ரக் குழு உறுப்பினர் அருள் பிரகாஷ் ஜெரால்ட் தலை மை தாங்கினார். மாவட்ட செயற்குழு அகமது உசேன், அந்தோணி, மாநகர செய லாளர் மோகன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷமிட்டனர்.

    • இந்தியாவின் 4 பகுதிகளில் இருந்து வாகன பிரச்சார பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • தென்னிந்தியா முழுவதுக்குமான வாகன பிரச்சார பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் பஜாரில் நடந்தது.

    கன்னியாகுமரி :

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் சார்பில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் தேச பாதுகாப்பு மற்றும் கல்வியை பாதுகாக்கவும் "நீட்" தேர்வு மற்றும் "கியூட்" தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரியும் இந்தியாவின் 4 பகுதிகளில் இருந்து வாகன பிரச்சார பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதில் தென்னிந்தியா முழுவதுக்குமான வாகன பிரச்சார பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் பஜாரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஷானு தலைமை தாங்கினார். மாநில தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். குமரி மாவட்ட செயலாளர் முபீஸ் அகமது வரவேற்று பேசினார். பிரச்சார பயணத்தை கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சின்னத்துரை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பிரசார பயணம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களில் செல்கிறது. இந்த வாகன பிரசார பயணம் வருகிற 18-ந் தேதி திருவனந்தபுரத்தில் முடிவடைகிறது.

    மொத்தம் 5ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த பிரச்சார பயணம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து இந்த பிரச்சார பயணம் தொடங்கும் போது போலீசார் ரத யாத்திரை என்று நினைத்து ரத யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று கூறி அதனை தடுக்க முயன்றனர். இதனால் மாணவர் சங்க நிர்வாகிகளுக்கும் போலீசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக வாகன பிரச்சார பயணம் என்று தெரிந்ததும் போலீசார் அதற்கு அனுமதி அளித்தனர் இதைத் தொடர்ந்து அங்குஇருந்து வாகன பிரச்சார பயணம் புறப்பட்டு சென்றது.

    • பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு.
    • மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு

    விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியின் விகிதத்தை கடுமையாக உயர்த்தியதோடு, பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை புதிதாக ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

    அண்மையில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் இனிமேல் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒன்றிய அரசின் இத்தகைய முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவிற்கு ரூ 3 முதல் ரூ 5 வரையிலும் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே பணவீக்கத்தாலும், கடுமையான விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

    மத்திய அரசின் இத்தகைய மோசமான முடிவை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 4000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, சத்தீஷ்கர், மேற்குவங்காளம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறுகின்றன.

    மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×