என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுவன் மாயம்"
- மதியரசு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
- தந்தை ஆதிமூலம் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் மதியரசு (வயது6).
இந்த சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து விட்டு சிறுவன் வீட்டிற்கு வந்தான். பின்னர் அந்த மதியரசு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டின் வெளியே வந்து பார்த்த போது அந்த சிறுவனை காணவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மதியரசு கிடைக்காததால், சிறுவன் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து தந்தை ஆதிமூலம் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வழி தவறி வேறு எங்கேயாவது சென்று விட்டனா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார்.
- ரிதனின் புகைப்படத்தை போலீசார் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் தேடி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஏ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 30) ,லாரி டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3½ வயதில் ரிதன் என்ற மகன் உள்ளார்.
சிறுவன் மாயம்
இந்நிலையில் மஞ்சுளா தனது மகன் ரிதனுடன் அதே பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் மாலை அவர்களது வீட்டிற்கு செல்ல ஆயத்த மானபோது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரிதன் திடீரென மாய மானான். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமான சம்பவம் குறித்து காங்கேயம் போலீ சில் புகார் செய்தனர்.
தேடுதல் வேட்டை
இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் டி.எஸ்.பி., முத்து குமரன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் அங்குள்ள அனைத்து வீடுகள், வீட்டு மொட்டைமாடி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல இடங்களில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருடன் இணைந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் 3 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
போலீசார் விசாரணை
நேற்று முன்தினம் முதல் இன்று வரை தேடியும் ரிதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கு சென்றான் , யாராவது அவனை கடத்தி சென்றா ர்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கயம் ஏ.சி.நகர் பகுதியில் உள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ரிதன் கிடைக்காததால் அவனை மர்மநபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகி க்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
பி.ஏ.பி. வாய்க்கால்
இதனிடையே ரிதன் விளையாடிய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. இதனால் ரிதன் அங்கு சென்றதன் காரணமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரிதனின் புகைப்படத்தை போலீசார் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் தேடி வருகின்றனர்.
வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் விஜயகுமார் வீட்டில் விட்டுச் சென்றார்.
- போலீசார் சிறுவனை விசாரித்த போது சிறுவன் மணலூர்பேட்டை என்பது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையை சேர்ந்த லட்சுமணன்- மற்றும் பார்வதி தம்பதி மகன் ஹரி பிரசாந்த் (வயது 5). கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் தனது மகன் ஹரி பிரசாத்தை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் விஜயகுமார் வீட்டில் விட்டுச் சென்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் சிறுவனைப் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சிறுவன் தனியாக செல்வதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஹரி பிரசாந்த்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை விசாரித்த போது சிறுவன் மணலூர்பேட்டை என்பதும் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு வந்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனை அவரது பெற்றோர்களிடம் ஒப்ப டைக்க மணலூர்பேட்டை அழைத்துச் சென்றனர். அப்போது தகவல் அறிந்த பெற்றோர்கள் மாணவனை அழைத்துச் செல்ல தியாகதுருகம் வந்திருந்தனர். இதனை தொடர்ந்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் போலீசார் ஹரிபிரசாந்தை பெற்றோ ரிடம் ஒப்படைத்தனர். சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போச்சம்பள்ளி பகுதியில் தங்கி பிளாஸ்டிக் சேர்கள் விற்று வருகிறார்.
- பல்வேறு இடங்களில் தேடியும் ஆதம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
மத்தூர்,
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சச்சலா பாலகிருஷ்ணன்.
இவர் தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தங்கி பிளாஸ்டிக் சேர்கள் விற்று வருகிறார்.
இவரது மகன் ஆதம் (வயது 10). கடந்த 8-ந்தேதி முதல் ஆதமை காணவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் ஆதம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து போச்சம்பள்ளி போலீசில் சச்சலா பாலகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஆதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னிமலை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயமானார்.
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த நமச்சிவாயம் (52) செயலாளராக உள்ளார்.
இந்த இல்லத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பரத் (13), ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று காலை குழந்தைகள் ஆஜர் பட்டியல் எடுத்தபோது சிறுவன் பரத் இல்லை.
உடனிருந்த குழந்தைகளை விசாரித்தபோது அவன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நலக்குழுவுக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் உதவியுடன் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பரத் கிடைக்கவில்லை. இதையடுத்து இல்லத்தின் செயலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி அருகே சிறுவனை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
- அதிர்ச்சி அடைந்த லோக–நாதன் தனது மகனை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் போலீஸ் சரகம் அக்கரா பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், அவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி இவர்கள் அைனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். மறுநாள் அதிகாலை சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது இளைய மகன் தருண் ஆதித்யாவைக காணவில்லை. அதிர்ச்சி அடைந்த லோகநாதன் தனது மகனை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.பதறி போன லோகநாதன் இதுகுறித்து கச்சிராயப் பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தலைமையில் 3 தனிப் படைகள் அமைத்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று மர்ம நபர் ஒருவர் தருண் ஆதித்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.1 கோடி கொடுத்தால் சிறுவன் தருண் ஆதித்யாவை ஒப்படைப்ப–தாக கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித் தார்.இதன் பேரில், பெண்கள், குழந்தைகள் குற்றங்கள் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. திருமேனி, சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ஆனந்தராசு ஆகியோர் தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிளில் சாதாரண உடையில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அருகே பங்காராம் கிராமத்தில் சாலையோரம் மறைவாக நின்ற கார் மீது சந்தேகப்பட்டு, காரின் அருகே சென்று பார்த்தபோது சிறுவன் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, சிறுவனை மீட்ட போலீசார் காரில் இருந்த அக்கரைகாடு ஊத்தோடை பகுதியை சேர்ந்த சுந்தரேசன், கச்சிராயப் பாளையம் பகுதி யைச் சேர்ந்த ஈஸ்டர்ஜாய், கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இந்த கும்பல்தான் சிறுவனை கடத்தி ரூ.1 கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அதனை தொடந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரகுபதி என்பவரைத் தேடி வருகின்றனர். பின்னர், சிறுவன் தருண் ஆதித்யாவை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்