என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு அலுவலர்கள்"
- ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க ஆண்டு விழா நடந்தது.
- சட்ட ஆலோசகர் பீர்முகமது நன்றி கூறினார்.
மேலூர்
மேலூரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத் தின் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிவ கங்கை மாவட்ட சப் கலெக் டர் சரவண பெருமாள் கலந்து கொண்டு பேசினார்.
மேலூரில் ஒய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் பேரவை கூட்டம் மற்றும் ஆண்டு விழா தனியார் திருமணமண்டபத்தில் நடை பெற்றது. மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தவமணி தலைமை தாங்கினார். இணைச் செய லாளர் புலவர் பரஞ் ஜோதி நிகழ்ச்சி தொகுத்து வழங் கினார்.
செயற்கு செயற்குழு உறுப்பினர் எஸ்.செல்வ நாதன் வரவேற்று பேசினார். சங்கச் செயலாளர் சேகர் ஸ்ரீதர் ஆண்ட றிக்கை வாசித் தார். சங்க பொருளா ளர் ராமலிங்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
துணைத் தலைவர் துரைராஜ் தீர்மா னங்களை முன்மொ ழிந்தார். சங்கத் தின் கவுரவ தலைவர் நல்லா சிரியர் ராமையா மாணவர் களுக்கு பரிசு வழங்கி னார். சங்கத்தின் கவுரவ தலைவர் கள் பெரிய கருப்பன், செந் தில்குமார், இணை செயலா ளர்கள் பரந்தாமன், முகமது அலி ஆகியோர் கலந்து கொண்ட னர்.
சிறப்பு விருந்தி னர்களாக சிவகங்கை மாவட்ட துணை கலெக்டர் சரவணபெரு மாள், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஒய்வு தனசே கரன், மேலூர் உதவி கருவூல அலுவலர் ரமேஷ், ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.
மதுரை மாவட்டம் ஓய்வூ தியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, மதுரை மண்ட லம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர். சட்ட ஆலோச கர் பீர்முகமது நன்றி கூறி னார்.
- தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்,
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தக்குடி, ஒகையூர், பீளமேடு, வடதொரசலூர், பிரிதிவிமங்கலம், கொங்கராயபாளையம், திம்மலை உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், சீனிவாசன், தி.முக. தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் கலந்து கொண்டு தலா ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்து 162 மதிப்பில் மொத்தம் ரூ. 73 லட்சத்து 81 ஆயிரத்து 944 மதிப்பீட்டிலான 12 டிராக்டர்களின் சாவியை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தயாபரன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் எனவும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் இல்லாத குழந்தை நேய சமூகத்தை உருவாக்குவதோடு குழந்தைகளை மரியாதையோடும், மதிப்போடும், தோழமையோடும் நடத்துவேன் எனவும்... குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்வேன் எனவும், 1098 ஐ அழைப்பேன் எனவும் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தகவல் அளித்த பின் ஓராண்டு வரை மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் கோப்புகளை முடிக்கலாம்
- எக்காரணம் கொண்டும், சீல் வைக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்ப கூடாது.
திருப்பூர்:
சென்னை அண்ணா நிர்வாக பணி பயிற்சி கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பயிற்சி முகாம் 2 நாட்கள் திருப்பூரில் நடந்தது. அரசுத்துறை அலுவலர்கள், பொது தகவல் அலுவலராக செயல்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி கல்லூரி கூடுதல் இயக்குனர் ராஜேந்திரன் அளித்த பயிற்சியில் அறிவுறுத்தியதாவது:-
பொது தகவல் அலுவலர்கள், கைவசம் உள்ள தகவல்களை அப்படியே வழங்கலாம். வழங்க முடியாதபட்சத்தில், அந்த காரணத்தையும் கூற வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தகவல்களை அளிக்கலாம்.கேள்விகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் தகவல் அளிக்க தேவையில்லை. பொதுமக்கள் மட்டுமல்ல, அரசு அலுவலர்களும் இச்சட்டத்தில் தகவல் கேட்கலாம். விண்ணப்பத்தில் 10 ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தகவல் அளித்து மீண்டும் விண்ணப்பம் அளிக்க அறிவுறுத்தலாம்.
எக்காரணம் கொண்டும், சீல் வைக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்ப கூடாது. ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே விண்ணப்பத்தில் கேட்டால், தகவல் அளிக்க கூடாது. தகவல் அளித்த பின் ஓராண்டு வரை மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் கோப்புகளை முடிக்கலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்ப காரணம் கூற வேண்டியதில்லை. கேட்கவும் கூடாது. இருக்கும் தகவலை அப்படியே வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்