search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித சந்தியாகப்பர்"

    • பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
    • இன்று கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது

    ஸ்ரீவைகுண்டம் புனிதசந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், காலை 7 மணிக்கும் 2-வது திருப்பலியும், மதியம் 12மணிக்கு முன்றாவது திருப்பலியும் ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் மக்கள் மற்றும் மீனவ மக்களுக்கான சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு புனித சந்தியாகப்பர் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசுகோயில் முன்பிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சந்தியாகப்பர் கொடிகளை ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆலயத்தில் தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் கொடிகளை அர்ச்சித்தார். பங்குதந்தை ஜான்பென்சன் தலைமையில் மாலை 7.15 மணிக்கு ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் வாணவேடிக்கை முழங்க பக்தர்களின் கரகோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ஸ்டார்வின் தலைமையில் மறையுரையும், நற்கருனை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30மணிக்கும், 6.30 மணிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன.

    9-வது திருவிழாவான நேற்று முன்தினம் ஆலயத்தில் காலை, மாலையில் சிறப்புத்திருப்பலியும், இரவு நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில், பங்கு இறைமக்கள் மற்றும் கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர். நேற்று அதிகாலை 4.45 மணி, காலை 5.45 மணி மற்றும் காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஸ்டீபன்அந்தோணி ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் இருந்து மிக்கேல் தூதர் முன்செல்ல சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும், ஆலயத் திருத்தேரில் மாதாவும் காட்சியளித்தனர்.

    திருத்தேரை மீனவ மக்கள், இறைமக்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து ஆலயம் சென்றடைந்தது. இதில் குழந்தை ஏசுவை மாதா சுமந்தவாறு புனித சந்தியாகப்பர் தேர்பவனியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, பெரியதாழை, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம் உள்ளிட்ட கடலோர மீனவ மக்கள் குடும்பத்தினருடன் திரண்டிருந்து உப்பு, மிளகு, மலர் தூவி வழிபாடு நடத்தினர். ஏராளமான கிறிஸ்தவர்கள் குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினர்.

    இந்த வழிபாட்டில் மதத்திற்கு பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்று வழிபாடுநடத்தினர். மாலை 6 மணிக்கு சிறப்புஆராதனை நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) காலையில் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குருசுகோவில் ஆலய பங்குதந்தை ஜான் பென்சன் மற்றும் அருட்சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், பங்குஇறைமக்கள் செய்திருந்தனர். திருவிழாவில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தேரை பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தபடி சென்றனர்.
    • 3-ந்தேதி கொடிமரம் இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலய 481-ம் ஆண்டு பெருவிழாவானது கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர்பவனி நடந்தது. முன்னதாக மறை மாவட்ட அதிபர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது.

    இந்த சிறப்பு திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின், விழா குழு தலைவர் வின்சென்ட் அமல்ராஜ், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகர சபை சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜூனன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ரவிசந்திர ராமவன்னி மற்றும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் மும்மதத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பலி முடிந்து மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தியாகப்பர் மற்றும் மரியாள் தூதர் தனித்தனி தேரில் வைக்கப்பட்டு அந்த தேரை பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தபடி ஆலய வாசலில் இருந்து புறப்பட்டனர். ஆலயத்தைச் சுற்றி தேர்வலம் வந்தது. இதையொட்டி ஏராளமானோர் கோவில் முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், தென்னங்கன்றுகளுடனும் நின்று பிரார்த்தனை செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை தண்ணீர் ஊற்று, அரியான்குண்டு, தென்குடா, அக்காள்மடம், செம்மமடம், ஓலைகுடா, வேர்க்கோடு ஆகிய 7 கிராம மக்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசாரும் மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை மாலை 6 மணிக்கு கொடி இறக்கமும், வருகின்ற 3-ந் தேதி கொடிமரம் இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

    • 25-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
    • மீனவமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 2-வது திருப்பலி, 7 மணிக்கும் மதியம் 12 மணிக்கு 3-வது திருப்பலியும் ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் மக்கள் மற்றும் மீனவ மக்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு புனித சந்தியாகப்பர் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசு கோவில் முன்பிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு வேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது..

    தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் கொடிகளை அர்ச்சித்தார். பங்குதந்தை ஜான்பென்சன் தலைமையில் இரவு 7.15 மணிக்கு ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ஸ்டார்வின் தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடந்தது.

    கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறும். வருகிற 23-ந் தேதி மதியம் 1 மணிக்கு குருசு கோவில் பங்குதந்தை கிஷோக் தலைமையில் அன்னதானம் நடைபெறுகிறது.

    முக்கிய திருவிழாவான 10-ம் நாள் வருகிற 25-ந் தேதி தேர்பவனி நடக்கிறது. அன்று அதிகாலை 4.45 மணி, 5.45 மணி, 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆலயத்திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதியுலா வருகின்றனர்.

    கொடியேற்று விழாவில் பங்கு தந்தைகள் ஜோக்கின் ஜேக்கப், ஜெயக்குமார், சந்தியாகு, கிராசியுஸ் மைக்கிள், பபிஸ்டன், பாலன் பிரசாந்த், ஜாய்னஸ், ராஜன், செல்வின் மற்றும் பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூடுதாழை, தூத்துக்குடி, அமலிபுரம், கடலோர மீனவமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜாராபர்ட், சேவியர் பிராங்களின், ரேணுகாதேவி உள்ளிட்ட போலீசாரும் ஊர்காவல் படையினரும் ஈடுபட்டு இருந்தனர்.

    ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை கிஷோக் மற்றும் அருட்சகோதரிகள், ஊர்நல கமிட்டியினர், பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

    • 24-ந்தேதி அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.
    • தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி பூஜைகள் நடைபெறும்.

    ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர் பவனி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டின் 481-வது பெருவிழாவானது நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணி அளவில் சந்தியாகப்பரின் திருஉருவம் பதித்த கொடியை பரமக்குடி வட்டார அதிபர் திரவியம் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்கு தந்தை செபாஸ்டின், விழா குழு தலைவர் வின்சென்ட் அமல்ராஜ், ராமேசுவரம் நகரசபை துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன், தங்கச்சிமடம் முஸ்லிம் ஜமாத் தலைவர் சியாமுதீன், மைதீன் ராஜா, இந்து சமுதாய நிர்வாகிகள் நாகேந்திரன், முருகேசன், வல்லவ கணேசன் மற்றும் அருட் சகோதரிகள் உள்ளிட்ட மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா தொடங்கியுள்ளதை தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7 மணிக்கு திருவிழாவின் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறும். பின்னர் இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    தங்கச்சிமடம் வேர்க்காடு சந்தியாகப்பர் ஆலய கொடியேற்றம் மற்றும் தேர் பவனி நிகழ்ச்சியில் மும்மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பலியை தொடர்ந்து பாராட்டு விழா நடக்கிறது.
    • அர்ச்சிப்பு விழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.

    நாகர்கோவில் கார்மல் நகர் பங்கில் ராமன்புதூர் செயின்ட் மேரீஸ் தெருவில் புனித சந்தியாகப்பர் குருசடி 40 ஆண்டுகளுக்கு முன் இறைமக்கள் மற்றும் இளைஞர்களின் அர்ப்பணிப்பால் அமைக்கப்பட்டது.

    பழமை வாய்ந்த இந்த குருசடி விரிவாக்கம் செய்யப்பட்டு, அர்ச்சிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. அருட்பணியாளரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான ராஜன் குருசடியை அர்ச்சித்து புனிதப்படுத்துகிறார்.

    வெள்ளமடம் அகத்திய முனி குழந்தைகள் மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பேட்ரிக் சேவியர், மேலராமன்புதூர் பங்குத்தந்தை மரிய சூசை வின்சென்ட், இணையம் புத்தன்துறை பங்குத்தந்தை சகாய செல்வம், திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் ஆகியோர் ஜெபித்து, ஆசீர்வதித்து வைக்கிறார்கள். அதைத்தொடர்ந்து நடக்கும் அன்பின் விருந்து நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர் தொடங்கி வைக்கிறார்.

    மாலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், 6 மணிக்கு அர்ச்சிப்பு விழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. திருப்பலிக்கு கோட்டார் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த் தலைமை தாங்குகிறார். வடசேரி பங்குத்தந்தை ஆன்றனி பெர்டிக் புரூனோ மறையுரையாற்றுகிறார்.

    திருப்பலியை தொடர்ந்து பாராட்டு விழா நடக்கிறது. அர்ச்சிப்பு விழா ஏற்பாடுகளை கார்மல்நகர் பங்குத்தந்தை சகாயபிரபு வழிகாட்டுதலில், கார்மல்நகர் நிர்வாகக்குழுவினர், நண்பர்கள் சங்கத்தினர் மற்றும் செயின்ட் மேரிஸ் தெரு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • வழிநெடுகிலும் கிறிஸ்தவர்கள் உப்பு, மிளகு, மலர் தூவி வணங்கினர்.
    • இன்று(செவ்வாய்க்கிழமை) கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சந்தியாகப்பரின் சொரூபம் குருசுகோவிலில்இருந்து கிறிஸ்துவகீதங்கள், இசை வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க பக்தர்கள் கொடியேந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் கொடியேற்றத்துடன் கோலாகலமாக திருவிழா தொடங்கியது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் ஆலயத்தில் காலை, மாலையில் சிறப்புத்திருப்பலிகள் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில், பங்குஇறைமக்கள்மற்றும் கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.

    நேற்று 10-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி, காலை 5.15 மணி, காலை 6 மணி, காலை 7 மணிக்கு கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.

    காலை 10 மணிக்கு சிறப்பு திருப்பலிகளை தொடர்ந்து காலை 10.45மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட தேர்பவனியின் போது மிக்கேல் தூதர் முன் செல்ல சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும், ஆலயத் திருத்தேரில் மாதாவும் நான்கு வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் கிறிஸ்தவர்கள் உப்பு, மிளகு, மலர் தூவி வணங்கினர். பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனைநடைபெற்றது.

    இந்த தேரோட்ட விழாவில் உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, பெரியதாழை, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம் உள்ளிட்ட கடலோர மீனவமக்கள் தங்களது குடும்பத்துடன் அங்கேயே குடில் அமைத்து தங்கியிருந்தும், வாகனங்களில் திரளாக வந்தும் கலந்து கொண்டனர். இன்று(செவ்வாய்க்கிழமை) காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    • இந்த திருவிழா வருகிற 25-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
    • 25-ந்தேதி காலை 10 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று காலை 5.30 மணிக்கு முதலாவது திருப்பலியும், 7 மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுகாகவும் பங்குதந்தை கிஷோக் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சதியாகப்பரின் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசு கோவிலில் இருந்து கிறிஸ்துவ கீதங்கள், இசை வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க கொடியேந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மாலை 6 மணிக்கு ஊர்வலம் கோவிலை வந்து அடைந்தது.

    7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு ஜான்பென்ஷன், தலைமையில் வாணவேடிக்கை முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட டி.எம்.எஸ்.எஸ்.எஸ் பங்குதந்தை ஜான் சுரேஷ் தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5.30, 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. 25-ந் தேதி அதிகாலை 4 மணி, 5.15 மணி, 6 மணி, காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கூட்டு திருப்பலியாக நடைபெறுகிறது.

    காலை 10 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதி உலா வருகின்றனர். திருவிழா ஏற்பாடுகளை குருசு கோவில் பங்குதந்தை கிஷோக் மற்றும் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்து வருகின்றனர். விழாவில் உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, பெரியதாழை, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம், கடலோர மீனவமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் செய்திருந்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் ஜேம்ஸ் விக்டர், ரவீந்திரன், ஜாக்சன் அருள், ரஞ்சித் குமார் கருடோசா, பபிஸ்டன், சந்தீஷ்டன், சதீஷ்குமார், பெஞ்சமின் டிசூசா, பிளேவியன், ரபீஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×