என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மழை காலம்"
- சரும வறட்சி, தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
- பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும்.
கோடைக்காலத்தில் வெயில் வாட்டி வதைத்து பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும். வெயில் காலத்தில் குறிப்பாக, சருமம் வறட்சி அடைவது வழக்கம்.
ஆனால், மழைக்காலங்களில் வேறுவிதமான சரும பிரச்சினைகளும் ஏற்படும். குறிப்பாக, சரும வறட்சி உள்பட தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
இதனை சமாளிக்க சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்..
தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் முகம், உடல் முழுக்க தடவி, வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கும், மழை காலத்திற்கும் ஏற்ற டிப்ஸ். இது, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
சரும பாதுகாப்புக்கு அவ்வபோது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்குவது அவசியம். அவ்வாறு ஃபேஷியல் செய்வதன் மூலம், இறந்த செல்களை நீக்கலாம். கெமிக்கல் பேஷியலை செய்வதற்கு பதிலாக பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும்.
அந்த வகையில், சரும பொலிவுக்கு பப்பாளி பழம் எப்போதும் சிறந்தது. பப்பாளி பழத்தை மைய அரைத்து முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தடவி காய்ந்ததும் சிறுது நேரம் கழித்து கழவி விடவும். இது தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.
உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. பாத வெடிப்புக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். மழைக்காலத்தில் சேற்று புண் அதிகம் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர விரைவில் குணமாகும்.
- மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.
சென்னை:
மழை காலங்களின்போது, பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எடுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அந்தவகையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், எந்தெந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது? என்ற முன்னெச்சரிக்கையின்படி, முந்தைய நாளோ அல்லது மழை பெய்யக்கூடிய நாளில் காலையிலோ விடுமுறை அளிக்கப்படுகிறது.
அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. சமீபத்தில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.
நேற்று கூட கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையையொட்டிய சில பகுதிகளும் வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் விரைவில் தீர்வு காணும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது.
- தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது
கடலூர்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளை மறுநாள் அமாவாசை மற்றும் சஷ்டி விரதம் தொடங்கு வதால் கடலூர் திருப்பா திரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க் கெட்டிற்கு வழக்கத்தை விட கூடுதலாக பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விழாக்கா லங்கள் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந் துள்ளது. அதன்படி அரும்பு மற்றும் மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. தற்போது மழை காலம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக தெரிகிறது.
- கனமழை பெய்யும் போதெல்லாம் அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதாக பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.
- சென்னையில் வெள்ள மேலாண்மைக்கான கூடுதல் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றன.
சென்னை:
சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்தை இறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைக்குழு அடுத்தவாரம் கூடுகிறது.
எண்ணூர், கூவம், அடையாறு மற்றும் முட்டுக்காடு சிறிய ஓடைகளுடன் பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலில் கூடுதல் நீரை வெளியேற்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மணிமங்கலத்தில் இருந்து அடையாறுக்கு தண்ணீர் கொண்டு செல்ல உபரி வாய்க்கால் இல்லாததால் கனமழை பெய்யும் போதெல்லாம் அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதாக பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரின் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமைக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு ஆலோசகர் சென்னைக்கு 34 வெள்ளத்தடுப்பு தீர்வு களை வழங்கி உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு, சென்னையின் வெள்ளப் பாதிப்பு மண்டலங்களுக்கு நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்திற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
இந்த முன்மொழிவை பரிசீலிக்க மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் தேசிய செயற்குழுவின் துணைக் குழு அடுத்த வாரம் டெல்லியில் கூடுகிறது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி தேசிய பேரிடர் தடுப்பு நிதியில் இருந்து ஒதுக்கீடு பெற பரிந்துரைத்துள்ளது. நகரில் வெள்ளத்தை தடுக்க பல்வேறு நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்தி உள்ளன. இந்த முன்மொழிவு மத்திய உள்துறை அமைச்ச கத்தால் பரிசீலிக்கப்பட்டவுடன் சென்னையில் வெள்ள மேலாண்மைக்கான கூடுதல் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றன.
வெள்ள முன்அறிவிப்பு போன்ற கட்டமைப்பு சாராத அம்சங்களுக்கு கூடுதலாக, வல்லுனர்கள் நகரத்தில் உள்ள கால்வாய்களில் இருந்து நன்கு வடிவமைக்கப்பட்ட உபரி சேனல்களை உருவாக்குவது போன்ற அம்சங்களை பரிந்துரைத்து உள்ளனர். அனைத்து உபரி வாய்க்கால்களும் ஆக்கிரமிப்பை தடுக்க சுவர் எல்லையை பெற வேண்டும்.
- பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளர் வாணி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மதுமிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்சீனிவாசன், ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பேசியதாவது:-
மழை காலம் தொடங்க இருப்பதால் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழு கொள்ளளவு தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கொடிவேரி மற்றும் அவினாசி -அத்திக்கடவு திட்டத்தில் கூடிய விரைவில் நேரடியாக ஆய்வு செய்து விடுபட்ட பணிகள் சரி செய்யப்படவுள்ளது. திட்டங்கள் முழுமையாக பயனடையும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிறுவணிகக்கடன்களும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் முத்ரா கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடன்களும் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஆய்வுக்கூட்டத்தில் ஊத்துக்குளி தாசில்தார் சைலஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி மற்றும் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராசுகுட்டி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
- மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாபட்டினம் 1-வது வார்டில் கூட்டுறவு வங்கிக்கு அருகில் வடக்கு நோக்கி செல்லும் சாலை மண்சாலையாக இருந்தது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்த மண் சாலையை தான் போக்குவரத்துக்கு அப்பகுதி மக்கள்பயன்ப டுத்தி வந்தனர். மழைக்கால ங்களில் சுமார் நான்கடி தண்ணீர் இந்த சாலையில் தேங்கி இருக்கும். இதனால் மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் எப்போது மக்கள் வாழ்ந்து வந்தனர்.இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் பொதுமக்களின் நலன் கருதி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஒருங்கிணைந்த ஒப்படைக்க ப்பட்ட வருவாய் நீரில் இருந்து ரூ. 14 லட்சத்து 27 ஆயிரம் நிதி பெற்று மண் சாலையை தார்சாலையாக போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காாமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது. 75 ஆண்டு காலத்திற்கு பிறகு தார் சாலையை காண போகும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்