search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்த்தி கடன்"

    • தயிர், சந்தனம் , பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
    • கோவிலை வலம் இடமாகசுற்றி வந்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    கடலூர்:

    திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 4மணிக்கு மூலவர் வீரட்டானே ஸ்வரர்க்கு பால், தேன், தயிர், சந்தனம் , பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை நடைபெற்றது. கூடவே சிவனின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. நந்தியின் 2 கொம்புகளுக்கிடையே தரிசின காட்சி காணும் வைபவம் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுகாகவும் பிரதோஷ கால சுற்று முறையில் கோவிலை வலம் இடமாகசுற்றி வந்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதில் செயல் அலுவ லர் தின்ஷா மற்றும் உற்சவ தாரர்கள், சிவனடி யார்கள், சிவதொண்டர்கள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆவணி ஞாயிறு தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
    • நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்க ப்பட்டது தனி சிறப்பாகும்.

    இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைல க்காப்பு சாற்றப்ப டுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

    மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இதனால் அன்றைய தினம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

    இன்று ஆவணி மாத கடைசி ஞாயிற்றுகிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கினர்.

    பல பக்தர்கள் நேற்று இரவே கோவிலுக்கு வந்து தங்கினர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலர் நடைபயணமாக வந்தனர்.

    நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஆவணி ஞாயிறு தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்ப ட்டன. பக்தர்கள்

    நீண்ட வரிசையில்நின்று அம்மனை மனம்உருகி தரிசித்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாவிலக்கு போட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

    இன்று மதியம் வரை மாரியம்மனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    இன்று முழுவதும் கணக்கி ட்டால் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்டுகடங்காத கூட்டம் காணப்படுவதால் ஒழுங்குப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
    • மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

    கடலூர்:

    திருச்சி மாவட்டம், தொட்டி யம்வட்டம் நாகைய நல்லூர் கிராமம் மேய்க்கல் நாயக்கன் பட்டி பதி னெட்டாம் படி கருப்பசாமி கோவிலில் உலக நன்மை வேண்டிவந்தாரை வாழ வைக்கும் வரம்தரும் பதினெட்டாம்படி கருப்ப சாமிகோவிலில் தெய்வஅருளை பெற்ற இளஞ் சித்தர், ஆன்மீகசேவர் ரத்னா விருது பெற்ற கே.லட்சுமண குமார்தலை மையில் 1008 விளக்கு பூஜைநடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும்நேர்த்தி கடனுக்காக வும் விளக்கேற்றி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைபதி னெட்டாம்படி கருப்பசாமி வழிபாட்டு மன்றத்தினர், விழாகுழுவினர், கிராம மக்கள் ஆகியோருடன் பண்ருட்டி, ஆரணி பி.கே.மிளகாய்மண்டி அதிபர்கள் குபேரன், பாரத், சந்தானம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூரில் ஆதிகாலத்தில் தொடங்கப்பட்ட பழக்கமல்ல.
    • இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    தலைமுடி காணிக்கை

    மேல்மலையனூர் அங்காளம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் மலையனூர் மாகாளி முன்பு செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இத்தலத்தில் வைத்தே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை மேல்மலையனூருக்கு அழைத்து வந்து முதல் மொட்டை போட்டு தலை முடியை காணிக்கையாக கொடுக்கவும் பக்தர்கள் தவறுவது இல்லை.

    அதிலும் குறிப்பாக இந்த ஆடி மாதம் முழுவதும் இத்தலத்துக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்வோர்கள் ஏராளம். அங்காளம்மனை தீவிரமாக நேசிப்பவர்கள் குடும்பத்தோடு மொட்டை போட்டுக் கொள்வதுண்டு.

    அது போல சிறுமியருக்கு காது குத்துவதையும் பெரும்பாலான பக்தர்கள் இந்த தலத்திலேயே வைத்து நடத்துகிறார்கள்.

    பொங்கல் வழிபாடு

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் அம்மன் கேட்ட வரங்கள் மட்டுமின்றி கேட்காத வரங்களையும் அள்ளி தருவாள் என்று பெண்கள் நம்புகிறார்கள். இதனால்தான் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மன் ஆலயங்களில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்வதுண்டு.

    மேல்மலையனூர் தலத்திலும் அம்மனுக்கு பொங்கல் வழிபாடு வைப்பது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சமீப ஆண்டுகளாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் மலையனூர் மாகாளிக்கு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    இதையடுத்து மேல்மலையனூர் தலத்தில் பொங்கல் வைப்பதற்காகவே தனிப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர் செல்பவர்கள் அங்கு பொங்கல் வைத்து அங்காளம்மனை மனதார வழிபட்டு வரலாம். அதிகாலை முதல் மாலை வரை பொங்கல் வைத்து வழிபடலாம்

    என்றாலும், ராகு காலத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபட வேண்டாம் என்று சொல்கிறார்கள். பொங்கல் பிரசாதம் படைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை வீடுகளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்.

    ஆனால் பொங்கல் நைவேத்தியத்தை அங்காளம்மனுக்கு படைத்து வழிபட்ட பிறகு அதை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது நல்லது. பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை வினியோகிப்பது மூலம் பொங்கல் வழிபாடு செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    ஆடு&கோழி பலி

    மேல்மலையனூர் தலத்தில் ஆடி மாதம் ஆடு, கோழி பலியிடுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் கோவிலுக்குள் எத்தகைய பலி வழிபாடுகளும் நடப்பதில்லை. கோவிலுக்கு வெளியே தூரத்தில்தான் அவற்றை செய்கிறார்கள்.

    மேல்மலையனூர் தலத்தில் காவல் தெய்வமாக இருக்கும் பாவாடைராயனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் சமர்ப்பிப்பார்கள். அங்காளம்மன் ஒருதடவை, "எனக்கு படைக்கப்படும் உணவுகள் உன்னைச் சாரும்" என்று, பாவாடைராயனிடம் கூறி இருந்தாளாம். எனவே இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கே சென்று சேருகிறது.

    ஆடி மாதம் அங்காளம்மனை வழிபடுபவர்கள் மறக்காமல் பாவாடைராயனையும் வழிபட்டு வர வேண்டும். அவர் நம் வழிப்பயணத்துக்கு துணை இருப்பார் என்பது ஐதீகம்.

    ஆடு& கோழி சுற்றி விடுதல்

    சமீப காலமாக பக்தர்கள் ஆடு, கோழி பலியிடுவதை குறைத்து வருகிறார்கள். அதற்குபதிலாக கோவில் அருகில் சென்று ஆடு, கோழிகளை சுற்றி விட்டுவிட்டு வந்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் தங்கள் பிரார்த்தனை நிறைவுபெறுவதாக நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சுற்றிவிடும் வழிபாடு மிக எளிய பரிகாரமாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக மேல்மலையனூர் தலத்தில் ஆடு, கோழி மட்டுமின்றி மாடுகளையும் கூட சுற்றி விட்டு நேர்த்தி கடன் செய்கிறார்கள்.

    வேப்பஞ்சேலை வழிபாடு

    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றகோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு. பொதுவாக வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூர் கோவிலில் ஆதிகாலத்தில் இருந்து தொடங்கப்பட்ட பழக்கமல்ல. சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கோவிலில்தான் இந்த வழிபாடு அதிகஅளவில் நடக்கிறது.

    சமீப காலமாக மேல்மலையனூர் கோவிலுக்கு வரும் பெண்களும் இந்த வழிபாட்டை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த வழிபாடு செய்தால் அம்மன் மனம் இறங்கி வேண்டும் வரம் தருவாள் என்பது நம்பிக்கை.

    தீச்சட்டி ஏந்துதல்

    மலையனூரில் பிரார்த்தனைக்கு வருபவர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து வழிபடுவதுண்டு. ஆடி மாதம் தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நேர்த்திகடன் செய்பவர்கள் முதலில் அக்னி குளத்தில் நீராடி அங்கிருந்து தீச்சட்டி ஏந்தி வருவார்கள். சிலர் அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தி வருவதுண்டு.

    பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் அம்மன்

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆடி அமாவாசை தினமாகும். இந்த நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள்.

    நாளை காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும்.

    அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்து பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

    மஞ்சள் ஆடை

    ஆடி மாதம் மலையனூர் தலத்துக்கு செல்பவர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு மிகவும் உகந்தது மஞ்சள் நிற உடையாகும். அது கிடைக்காத பட்சத்தில் சிவப்பு கலரில் புடவைகள் வாங்கி சாத்தலாம்.

    புற்றை சுற்றினால் பித்து நீங்கும்

    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

    மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பலமொழியாக சொல்லப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள் ஆவர்.

    • பொங்கல் விழா இன்று காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் உடம்பில் சேறு பூசி கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவி லில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடை பெறு வது வழக்கம்.

    இந்தாண்டு மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுகளுடன் விழா தொடங்கியது. இத னைத் தொடர்ந்து 21-ந் தேதி மாரியம்மன் கோவி லில் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து 22-ந் தேதி செல்லாண்டி அம்மன் கோவிலில் கொடியேற்ற ப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் 12 மணி வரை ஆயிரக்கண க்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவிலில் உள்ள மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து செல்லாண்டி அம்மன் கோவிலில் இருந்து புது பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில் வரை சக்தி அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாட்டனர்.

    அதேபோல் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியின் போது எல்லையம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சாமி அழைத்து வரப்பட்டது.

    அப்போது ஆயிரக்க ணக்கான பக்தர்கள் உடம்பில் சேறு பூசி கொண்டும் அம்மன் வேடம் உள்பட பல்வேறு வகையான வேடங்கள் அணிந்து கொண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பக்தர்கள் உப்பு, மிளகு, வாழைப்பழம், தேங்காய், பிஸ்கட், புது துணி, பேனா, பென்சில் உட்பட பல வகை யான பொருட்களை சூறை யிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை செல்லாண்டி யம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது.

    நாளை இரவு 8 மணிக்கு கம்பம் எடுத்து காவிரி ஆற்றில் விடப்படு கிறது. வரும் 3-ந் தேதி பரிவேட்டையும், 4-ந் தேதி தெப்ப உற்சவம், 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 

    • பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
    • அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம், போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (59). இவரது மனைவி பேச்சியம்மாள் (47). பாலகிருஷ்ணன் பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவினில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.

    மதியம் சுமார் 2 மணியளவில் குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டிருந்தபோது பூஜை பொருள்கள் வாங்குவதற்காக கோவிலுக்கு வெளியில் உள்ள கடைக்கு பாலகிருஷ்ணனும், அவரது மனைவியும் சென்றனர்.

    அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். உனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெண் பக்தர் 38 அடி வேல் குத்தி வந்தார்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியில் ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு 3 கிலோமீட்டர் அந்தரத்தில் தொங்கி வந்து பக்தர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தினார்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற முருகர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் நாளில் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருவது வழக்கம்.

    இந்த நிலையில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் முருகர் கோவிலுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்ற பக்தர் கிரேன் மூலமாக தனது முதுகில் அலகு குத்தி சுமார் 3 கிலோமீட்டர் வரை அந்தரத்தில்தொங்கி வந்து முருகர் நேர்த்திக்கடன் செலுத்தினார்.

    அதேபோல் மற்றொரு பெண் பக்தர் 38அடி வேல் குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×