என் மலர்
நீங்கள் தேடியது "மதுக்கடை அமைக்க எதிர்ப்பு"
- தங்களது ஊரில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
- தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பழைய சுக்காம்பட்டி கிராமம். மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இதனை அறிந்த கிராம மக்கள், தங்களின் ஊரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுக்கடைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டினர். இந்நிலையில் மதுக்கடை தொடங்க திட்டமிட்டிருந்த கட்டிடத்தில் நேற்று இரவு மதுபாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த கிராம மக்கள் இன்று காலை மேலூர்-அழகர்கோவில் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரெபோனி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் தாசில்தார் சரவணபெருமாளும் பழைய சுக்காம்பட்டி கிராமத்திற்கு வந்தார். தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தங்களது ஊரில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதில் சமரசம் அடைந்த கிராம மக்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- ராசிபுரம் மெயின் ரோடு பகுதியில் முகுந்தன் கென்னடி என்பவரின் தோட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
- விவசாய தோட்டத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
சேலம்:
சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.பாப்பாரப்பட்டி கிராம மக்கள் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ராசிபுரம் மெயின் ரோடு பகுதியில் முகுந்தன் கென்னடி என்பவரின் தோட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
இதை இடமாற்றம் செய்து பாப்பாரப்பட்டி ஊராட்சி ராசிபுரம் மெயின் ரோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பின்புறம் உள்ள விவசாய தோட்டத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு சித்தேரி காடு, சரவென்காடு கடுகு காரன் காடு வெள்ளையா கவுண்டனூர், போயர் தெரு கூனங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாய பகுதியில் மதுபான கடை வைக்க உயர் நீதிமன்றம் தடைவித்துள்ளதாலும், இரவு நேரங்களில் பெண்கள் அதிகமாக செல்லும் பகுதி என்பதாலும் அந்த பகுதியில் அமைப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.