search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு கைது"

    • கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.
    • போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    தேவதானப்பட்டி:

    மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சடகோபாலன் மகன் வெங்கடேன் (வயது 46). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ஜாமீனில் வெளி வந்த வெங்கடேசன் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெரியகுளம் உதவி அமர்வு நீதிபதி தலைமறைவான குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தேவதானப்பட்டி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.

    பின்னர் நேற்று இரவு அவரை கைது செய்து பெரியகுளம் அழைத்து வந்தனர். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    • மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
    • ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான டின்சின் நம்கட் என்பவரை கைது செய்தனர்.

    மடிப்பாக்கம், பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், மனைவி மோகனா மற்றும் 2 வயது மகனுடன் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

    பின்னர் அவர்கள் 2-வது பிளாட்பாரத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மோகனா பார்த்தபோது அருகில் வைத்திருந்த 17பவுன் நகை இருந்த கைப்பை மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து கோயம்பேடு போலீசில்புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான டின்சின் நம்கட் (26) என்பவரை கைது செய்தனர்.

    • போலீசாரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர்.
    • காப்பர் கம்பிகளை பிரித்து எடுக்க தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைமன் துரை மற்றும் போலீசார் இரவு காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள முட்புதரில் கரும்புகையுடன் தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அருகில் சென்றனர்.

    போலீசாரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அத்திப்பட்டை சேர்ந்த ரவிக்குமார், நெட்டுகுப்பத்தைச் சேர்ந்த ராம்குமார், அண்ணாமலை சேரியை சேர்ந்த திவாகர், எர்ணாவூரைச் சேர்ந்த பரத் என்பதும், காமராஜர் துறைமுகம் அருகே மூடி கிடந்த தனியார் கம்பெனியில் காப்பர் வயர்களை திருடியதும் தெரிந்தது. காப்பர் கம்பிகளை பிரித்து எடுக்க தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ காப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×