என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தின விழா"
- சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.
நாமக்கல்:
உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளார்கள்.
இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.
- 2-ந் தேதி நடக்கிறது.
- அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வள்ளலார் பேரவையில் திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாளின் 201-வது அவதார தினவிழா வருகிற 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அருட்ஜோதியை, மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார், சந்திர சேகரன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
- உலக புகைப்பட தின விழா நடந்தது
- போட்டோகிராபர் சங்கத்தின் சார்பில் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.
புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையிலும், புகைப்பட கலையை ஊக்குவிக்கும் பொருட்டாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ந் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று பெரம்பலூரில் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் மணி தேவன் வரவேற்றார். சங்கத்தின் நிர்வாகிளும், புகைப்பட ஒளிப்பட கலைஞர்களுமான ஸ்டீபன், தினேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோரது முயற்சியால் பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில அளவில் ஆர்ட் ஆப் நேச்சர் எனும் தலைப்பில் புகைப்பட போட்டி ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடந்தது.
இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இவ்விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைவர் அருண், அக்ரி மாதவன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளியில் உலக இளைஞா் தின விழா நடைபெற்றது.
- அரசு பள்ளியில் உலக இளைஞா் தின விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கோமாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக இளைஞா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தலைமை ஆசிரியா் முனைவா் ந. சாந்தி தலைமை வகித்தாா்.வல்லம் பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை இயக்குநா் செல்வகுமாா், மூத்த பேராசிரியா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலக இளைஞா் தினம் குறித்தும், வருங்கால இளைஞா்களாகிய மாணவா்களுக்கு தேவையான சமூகப் பற்று குறித்தும் இளைஞா்கள் சக்தியின் பலம், தேசத்திற்கு வளமான இளைஞா்களின் தேவை குறித்தும் அரசியல் அறிவியல் துறை பேராசிரியா் லெனின் சிறப்புரை ஆற்றினாா். இதில், பள்ளி ஆசிரியா்கள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பள்ளி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனா். சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் குமரேசன் நன்றி கூறினாா்.
- கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு தின விழா கொண்டாடப்பட்டது.
- இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
கல்லாக்கோட்டை இல்லம் தேடி கல்வி மையத்தில் தமிழ்நாடு தின நாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தங்கராசு, ரஹமதுல்லா கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவது நோக்கம் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் சர்மிளா, பொம்மி |சசிகலா, பூமாதேவி தங்கம்| பவித்ரா, சிவரஞ்சனி, விமலா, ரேவதி, கலைச்செல்வி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்