search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்சியின்"

    • திருமாவளவன் எம்.பி. இன்று மாலை திறந்து வைக்கிறார்
    • மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார்.

    நாகர்கோவில்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே சண்முகா தெருவில் இன்று (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார். புதிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திறந்து வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கம் முன்பு மணிப்பூர் மாநில மக்களுக்கு நீதி வழங்கக்கோரி நடைபெறும் சிறப்பு மாநாட் டில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. புதிய அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

    • கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • தோட்டக்கலை மூலம், ஒட்டுண்ணி இலவசமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கிட இந்த செயற்குழு வேளாண் துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அணிகளின் சார்பாக பலர் கலந்து கொண்டனர்.

    சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சொட்டு நீர் அமைப்பதற்கான மானியம் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதால் மேலும் சொட்டு நீர் அமைக்கும் நிறுவனங்களுக்கான அனுமதி இன்னும் தரப்படா ததால் விவசாயிகள் அவதி பட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

    கள்ளிப்பூச்சி எனப்படும் மாவு பூச்சிகளால் ஏறக்குறைய ஈரோடு மாவ ட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிடும் பரப்பளவு குறைந்து விட்டது.

    எனவே அதற்கான நடவடிக்கைகளை தோட்டக்கலை மூலம், ஒட்டுண்ணி இலவசமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கிட இந்த செயற்குழு வேளாண் துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது.

    ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர்.ரகுகுமார் இந்த தீர்மானங்களை முன்மொழி ந்தார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், நீராபாலு, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சிவகுமார் மற்றும்நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×