என் மலர்
நீங்கள் தேடியது "44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி"
- 187 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
- 21 வட்டாரங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் ப்பள்ளியில் கடந்த 20-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம்:
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் வருகின்ற வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 187 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
மாநிலம் முழுவதும் வீடுகள் தோறும் இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 15-ந்தேதி சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 21 வட்டாரங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகள் சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 20-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.வட்டார அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் பிரிவுகள் வாரியாக சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 126 மாணவ, மாணவியர்களும், அரசு உயர் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 126 மாணவ, மாணவியர்களும், அரசு மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 126 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 378 மாணவ, மாணவியர்கள் முதல் 3 இடங்களைப் பெற்றனர். அவர்களுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் சேலம், அழகாபுரம் புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முதல் 2 இடங்களை பெறக்கூடிய 6 முதல் 8-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் 5 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்பர். இம்முகாமில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெறும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு , 11 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு சென்னை செல்கின்றனர்.நிகழ்ச்சியில் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பள்ளி முதல்வர் சகாயராஜ், செயலாளர் அருளப்பன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
- கடலூரில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மின்னனு வீடியோ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
கடலூர்:
பேரறிஞர் அண்ணாவால்'தமிழ்நாடு" என அறிவிக்கப்பட்ட ஜுலை -18-ம் நாளினை தமிழ்நாடு திருநாளாக கொண்டாடப்படும் வகையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல் அழிஞ்சிப்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட லூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஊராட்சிகளில் 1100 மரக்கன்றுகள் நடப்படப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தமிழ்நாடு திருநாளை கொண்டாடும் வகையில் 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலிம்பிக் ஜோதி விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளுதல், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் ஸ்டிக்கர் ஒட்டுதல், செஸ் போட்டிகள் நடத்துதல் மற்றும் செஸ் போட்டிகள் குறித்து மாணவ-மாணவியர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டிகள் நடத்துதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாகனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர். , சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ், துணைத் தலைவர் செல்ல பாண்டியன் பகுதி செயலாளர்கள் சதீஷ், தமிழ் முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.