search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தடிமைகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கை துண்டிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்காமல் அப்படியே சாலையோரத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்
    • வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடந்தப்பட்ட 33 இந்திய விவசாயப் பணியாளர்களை அங்கிருந்து இத்தாலிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் எனபரின் கை பணியின்போது இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவர்க்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்.

     

    இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.360 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

    ரூ.15 லட்சம் கட்டினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருவதாக 2 இந்திய ஏஜெண்டுகள் இவர்களை ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் அங்கு அழைத்துச்சென்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.

    இந்த ரூ.15 லட்சம் தொகையை முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் கூடுதலாக ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கித்தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். தற்போது அப்படி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக 33 இந்தியர்களை மீட்ட இத்தாலிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

     

    • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று குழந்தை கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நடவடிக்கை எடுப்பதுடன் மறுவாழ்வுக்கு தொழில்தொடங்க உதவிகள் செய்து தரப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று குழந்தை கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை நீதிபதி லதா தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    குழந்தைகள் கடத்தலை உறுதி செய்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதுதான் உரிய இழப்பீடு கிடைப்பதுடன் கடத்தப்பட்டவர்களையும் மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்குவார்கள்.

    கவர்ச்சிகரமான பேச்சுகளை நம்பி அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகும்போது கடத்தல் சம்பவங்கள் நேர்ந்துவிடுகிறது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்கு உணர்ந்து செயல்படவேண்டும். கொத்தடிமைகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விற்கப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தெரியவந்தால் உடனடியாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் மறுவாழ்வுக்கு தொழில்தொடங்க உதவிகள் செய்து தரப்படும். இதுகுறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பாரதிராஜா, தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×