என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கியது"

    • முகிலன் வீட்டின் மாடியில் இருந்த பிளக்ஸ் பேனரை கீழே இறக்கும் போது எதிர்பாராத அவரை மின்சாரம் தாக்கியது
    • அப்போது அவரைக் காப்பாற்றும் முயன்ற தேவதர்ஷினியின் 2 கைகளும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டன.

    திருச்சி,

    திருச்சி வடக்கு தாரா நல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 43). இவருக்கு தேவதர்ஷினி(20), முகிலன் (17), பொழிலன் என மூன்று பிள்ளைகள் உள்ளன.

    இதில் முகிலன் சம்பவத்தன்று தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்த பிளக்ஸ் பேனரை கீழே இறக்கும் போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த மின் கம்பியில் பட்டு அவரை மின்சாரம் தாக்கியது.

    அப்போது அவரைக் காப்பாற்றும் முயன்ற தேவதர்ஷினியின் 2 கைகளும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டன. மேலும் முகிலன் ஒரு கை மற்றும் ஒரு கால் முழுமையாக தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டது.

    அவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தியாகராஜன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்விட்ச் பாக்ஸ் ஓட்டையில் விரலை நுழைத்துள்ளான்.
    • எதிர்பா ராதவிதமாக மின்சாரம் கமல்நாத்தை தாக்கியது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள மாசி நாயக்கன்பட்டி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன். இவரது மகன் கமல்நாத் (வயது 7). நேற்று வீட்டில் சிறுவன் விளையா டிக்கொண்டிருந்த போது வீட்டில் இருந்த ஸ்விட்ச் பாக்ஸ் ஓட்டையில் விரலை நுழைத்து ள்ளான். அப்போது எதிர்பா ராதவிதமாக மின்சாரம் கமல்நாத்தை தாக்கியது. இதில் அலறி துடித்த சிறுவனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு கமல்நாத் சிகிச்சை பெற்று வருகிறான்.

    ×