என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 பேர் சிறையில் அடைப்பு"
- 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் பெருந்துறை கிளை சிறையில்அடைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை சாலை விக்னேஷ் நகரை சேர்ந்தவர் சேகர். இவர் திருப்பூரில் சொந்தமாக நூல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டார். அப்போது நள்ளிரவில் இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.1.30 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
இதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோரும் வெளியூர் சென்று இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள்ளும் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர்.
இது குறித்து தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது 2 மர்ம நபர்கள் முகத்தை மறைத்தப்படி வீட்டிற்குள் புகுந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெருந்துறையில் இருந்து வெள்ளோடு செல்லும் சாலையில் பெருந்துறை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் பேசினர்.
தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டதும், நூல் கம்பெனி உரிமையாளர் சேகர், துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோர் வீட்டில் நடந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் திருவாரூரை சேர்ந்த சதீஷ், தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிதுரை, நெல்லையை சேர்ந்த சுபாஷ் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களது கூட்டாளிகள் நெல்லையை சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் ஆகிய 2 பேர் ஏற்கனவே வேறு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறை யில்அடைத்தனர்.
- பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.
- ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பண்டகசாலை சென்னிமலை அருகே எம்.பி.என் காலனியில் உள்ளது. இது ஈரோடு சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த பண்டக சாலையில் கடந்த 1.4.2015 முதல் 31.3.2016 வரை நடைபெற்ற வரவு செலவுகளின் உண்மை தன்மையினை கண்டறியும் வகையில் கணக்கு தணிக்கை செய்ய ப்பட்டது. இந்த தணிக்கை யில் அனைத்து வகை சங்க பதிவேடு ஆதாரங்கள் குறித்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது 2015-2016-ம் ஆண்டில் பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நர்மதா மூலம் சென்னையில் உள்ள வணிக குற்றப்பிரிவு (புலனாய்வு பிரிவு) கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பண்டக சாலையில் ஸ்டோர் மேலாளராக பணிபுரிந்த சென்னிமலை அருகே உள்ள எம்.பி.என் காலனி சரவணபுரியை சேர்ந்த கணேசன் (55), பண்டக சாலையின் தலைவராக இருந்த முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்த தேவராஜ் ( 61) மற்றும் விற்பனையாளராக இருந்த ரவிச்சந்திரன் (61) ஆகிய 3 பேர் ரூ.57 லட்சத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
- விசாரணை நடத்தியதில் ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.
- அதன் அடிப்படையில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சவுண்டப்பூர் தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தின் தலைவராக அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் பதவி வகித்து வருகிறார்.
சங்க உறுப்பினர்களுக்கு பயிர் கடன், நகை கடன் வழங்கப்பட்டு 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை வசூலிக்கப்பட்ட பணம் வங்கி கணக்கில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் விசாரணை நடத்தியதில் ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த மோசடியில் சங்க தலைவர் ரமேஷ் அவருக்கு உடந்தையாக சங்க ஊழியர்களான கோபியை சேர்ந்த சத்தியமூர்த்தி (53), தங்கமுத்து (55) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரி கரையில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
- 3 பேரை தளி போலீசார் நேற்று கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் தொட்டதோகூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஓட்டுநர் சாந்தகுமார் (வயது30). இவரது மனைவி சுஷ்மா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் கார்த்தியாகினி என்ற மகள் உள்ளார்.
கடந்த 13-ம் தேதி அங்குள்ள மதுக்கடை ஒன்றில் மது குடித்த போது சாந்தகுமாருக்கும் வீர்சந்திரா என்ற கிராமத்தை சேர்ந்த பல்வேறு கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நேபால் மஞ்சுநாத் (31), என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது சாந்தகுமார் நேபால் மஞ்சுநாத்தை அடித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்து விடுவேன் என நேபால் மஞ்சுநாத் கூறியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சாந்தகுமார் எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உன்னை மன்னித்து விடுகிறேன். புகாரை வாபஸ் பெற்றுக்கொள் என கூறிய நேபால் மஞ்சுநாத் சாந்தகுமாரை கடந்த 24-ம் தேதி ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளிக்கு வருமாறு கூறியுள்ளார்.
அங்கு வந்த சாந்தகுமாரை தனது நண்பர்களுடன் காரில் கடத்தி சென்ற நேபால் மஞ்சுநாத் தளி அருகே உள்ள எலேசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரி கரையில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி நேபால் மஞ்சு நாத், பெங்களூரு மங்கம்மாபாளையத்தை சேர்ந்த சதீஷ் (22), பன்னார்கட்டாவை சேர்ந்த சுனில்குமார் (19), ஆகிய 3 பேரை தளி போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான அவர்களை தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- பாலக்கோடு அருகே கேட் மேன் தாக்கப்பட்டார்.
- தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் நாகராஜன் (56) பாலக்கோடு அருகே தளவாய்பட்டி ரெயில்வே கேட்டில் கேட்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை தருமபுரியில் இருந்து பயணிகள் ரயில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இதை தொடர்ந்து தளவாய்பட்டி ெரயில்வே கேட்டில் பணியில் இருந்த நாகராஜன் கேட்டை பூட்டினார்.
இதனால் ரயில் செல்லும் வரை வாகனங்கள் காத்திருந்தன. அங்குவந்த 3 வாலிபர்கள் உடனடியாக செல்ல வேண்டும் எனக் கூறி கேட்டை திறந்து விடுமாறு கேட்டனர். ஆனால் கேட்மேன் ரயில் வருவதாகவும் அதற்கான சிக்னல் கிடைத்துள்ளது எனவே கேட்டை திறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால் 3 வாலிபர்களும் கேட் மேனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு நாகராஜனை தாக்கியுள்ளனர். இதில் காயம்மடைந்த நாகராஜன் பாலகோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து நாகராஜன் தருமபுரி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையில் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேல்(39), சரவணன் மகன் கார்த்தி (வயது28), பொன்வயல் நகர் பகுதியைச் சேர்ந்த சித்தன் மகன் சின்னசாமி (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்