என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கபடி வீரர்"
- கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
- இப்படத்தை பரியேறும் பெருமாள், ரைட்டர், ப்ளூ ஸ்டார் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் படமானது மே மாதத்தில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பின்னர், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கினார்.
இப்படத்தை பரியேறும் பெருமாள், ரைட்டர், ப்ளூ ஸ்டார் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் பெற்று வந்தார். ஆனால், திடீரென்று இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தை தொடங்கினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. மேலும், இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த படத்தின் நாயகியாக பிரபல மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்களை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.
1990-காலக்கட்டத்தில் உருவாகும் இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
- மோட்டார் சைக்கிளில் திருச்சி அருகே நடக்கும் கபடி விளையாட்டு போட்டிக்கு நேற்று சென்றனர்.
- டி.பளூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையில் விபத்துக்குள்ளானது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூராசாமி மகன் சரத்குமார் (வயது 23). ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார். சரத்குமார் முன்னதாகவே கபடி விளையாட்டு வீரர்.இந்நிலையில் சரத்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த கதிரவன் (20) மணிமாறன் (20)என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி அருகே நடக்கும் கபடி விளையாட்டு போட்டிக்கு நேற்று சென்றனர்.
அப்போது டி.பளூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சரத்குமாரும், கதிரவன், மணிமாறனும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சரத்குமாரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட கதிரவன் மணிமாறனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் விபத்தில் இறந்த சரத்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி போலீசார் காட்டுமன்னார்கோவில் போலீசார் இடம் ஒப்ப டைத்தனர். இதனையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார் கபடி வீரர் செந்தில்
- கபடி விளையாடி முடித்த உடனே களத்தில் மயங்கி விழுந்தார்
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் பகுதியில் கபடிப் போடி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி அணிகள் பங்கேற்றன. போட்டி முடிந்த சற்று நேரத்தில் நன்னிலத்தை சேர்ந்த கபடி வீரர் செந்திலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக வீரர்கள அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக செந்திலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கபடி போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ள கபடி வீரர் செந்திலின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்.
- விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய புறங்கணிமுருகன் கோவில் தெரு சேர்ந்த கபடி அணி வீரர் விமல்ராஜ் நேற்று இரவு பண்ருட்டி அருகே மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடினார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுய நினைவில்லாமல் கிடந்தார்.
உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விமல்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
- பெண்கள் பிரிவில் 12 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் பங்குபெற்றனர்.
- போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் ஊடையகாடு கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திடலில் ராகவன் நினைவாக மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் பெண்கள் பிரிவில் 12 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் பங்குபெற்றனர். போட்டியை நிமல் ராகவன் ஒருங்கிணைத்து நடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை திருவாரூர் மாவட்டம் வடுவூர் அணியினரும், 2-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் முல்லை வெண்புறா அணியும், 3-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடி அணியும், 4-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் அணியினரும் வென்று பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் பெற்றனர்.
இதேபோல, பெண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை மதுரை மாவட்டம் சித்தம்பட்டி அணியினரும், 2-ம் பரிசை கட்டகுடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், 3-ம் பரிசை தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தென்னவன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், 4-ம் பரிசை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் செல்வம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும் வென்று பரிசு மற்றும் சுழற்கோப்பை பெற்றனர். நிறைவாக முன்னாள் மாநில கபடி வீரர் வெண்புறா சடகோபன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்