என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசேரியன்"

    • 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
    • பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது

    உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

    • சிசேரியன் அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
    • அவசர கால சிசேரியன்(Emergency Cesarean) என்று பெயர்.

    இயற்கையான முறையில் பிரசவம் நிகழும்போது, நேரம் அதிகமாக அதிகமாக, பிரசவ வலி அதிகரித்து, கருப்பை வாய் அகலமாக விரிந்து, குழந்தை வெளியில் வரும் அளவுக்குத் திறக்கும். இந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகும்போது, மருந்துகள் கொடுத்து இயற்கை பிரசவத்துக்கு முயற்சி செய்தபிறகும், பிரசவத்தில் சரியான முன்னேற்றங்கள் இல்லை எனும்போது, சிசேரியன் தேவைப்படும். மூன்றில் ஒரு பங்கு சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

    குழந்தைக்கு மூச்சுத்திணறல்குழந்தையின் கழுத்தைத் தொப்புள் கொடி சுற்றியிருந்தால், கருப்பையின் வாய்ப்பகுதி வழியாக முதலில் தொப்புள்கொடி வெளியில் வந்துவிட்டால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். கருவில் குழந்தையைச் சுற்றியுள்ள திரவம் மிகவும் குறைவாக இருந்தாலோ, மிகவும் அதிகமாக இருந்தாலோ, குழந்தை கருப்பையில் நெடுக்குவாட்டத்தில் படுத்திருந்தாலோ குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அ்ப்போது இனியும் காத்திருப்பது ஆபத்து என அறியப்பட்டால், சிசேரியன் அவசியப்படலாம். பெரும்பாலான சிசேரியன்கள் இந்தக் காரணத்துக்காகவே செய்யப்படுகின்றன.

    குழந்தையின் அளவும் நிலைமையும் உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு இடுப்பெலும்பின் துவாரம் சற்றே குறுகலாக இருக்கும். குழந்தை அதன் வழியாகப் புகுந்து வெளியில் வர இயலாமல் போகும் அல்லது குழந்தையின் தலை பெரிதாக இருக்கும். சில நேரங்களில் குழந்தையின் தலை மேலேயும், கை, கால், பிட்டம் கீழேயும் இருக்கும் அல்லது வெளியில் வர முடியாதபடி தலை சற்றே சாய்ந்தபடி இருக்கும். இம்மாதிரியான நேரங்களில் இயற்கை பிரசவத்தில் சிக்கல்கள் தோன்றலாம் என்பதால், சிசேரியன் செய்யப்படும்.

    பிரசவ நேரத்தில் குழந்தையின் தலைக்கு முன்னால் நஞ்சுக்கொடி இருந்தால், குழந்தை வெளியில் வருவதைத் தடுத்துவிடலாம். குழந்தை வெளியில் வருவதற்கு முன்பே அது கருப்பையை விட்டுத் திடுதிப்பென்று துண்டிக்கப்படலாம். அப்போது அளவுக்கு மீறிய ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த நிலைமைகளில் சிசேரியன்தான் கைகொடுக்கும்.

    • கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்
    • அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை.

    தற்போது இந்தியாவில் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

    அநேகமாக சிசேரியன்தான் என்று முடிவு செய்துவிட்டால், சிகிச்சைக்கு 6-8 மணி நேரத்துக்கு முன்பாகவே திட உணவு சாப்பிடக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடலின் வெப்பநிலை போன்ற கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்; எனிமா கொடுப்பது, சிறுநீர் வெளியேற கதீட்டர் சொருகுவது, உடலைச் சுத்தப்படுத்துவது, குளுக்கோஸ் சலைன் ஏற்றுவது போன்ற முன் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படும்.

    குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்படும். கர்ப்பிணிக்குப் பொருத்தமான ரத்தம் தயாராக வைத்துக் கொள்ளப்படும். பொதுவாக, சிசேரியனுக்கு மூச்சு வழியாகத் தரப்படும் பொதுவான மயக்கம், முதுகில் ஊசி போட்டு பெறப்படும் முதுகுத் தண்டுவட மயக்கம் (ஸ்பைனல் அல்லது எபிடூரல்) ஆகியவை பயன்படுத்தப்படுவது நடைமுறை.

    இவற்றில் பொதுவான மயக்கத்தில் கர்ப்பிணி உறங்கிவிடுவார். வலி தெரியாது. மற்ற மயக்கத்தில் கர்ப்பிணிக்கு நினைவு இருக்கும். குழந்தையை வெளியில் எடுப்பதைக் காண முடியும். என்றாலும் வலி தெரியாது.

    சிசேரியனுக்குப் பின்…

    சிசேரியன் செய்யப்பட்ட பிறகு 3 - 5 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும். இரண்டாம் நாளில் சாப்பிடத் தொடங்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாடிப்படி ஏறலாம். ஒரு மாதம் கழிந்த பிறகு பல வேலைகளைச் செய்ய முடியும். அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதை மட்டும் சில மாதங்களுக்குத் தள்ளிப் போட வேண்டும்.

    அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை. இரண்டாவது குழந்தைக்கான சிசேரியன் என்றால், குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், கருத்தடை அறுவை சிகிச்சைக்காக இன்னொரு முறை வயிற்றைக் கிழிக்க வேண்டியது வரும்.

    • சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    • சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது.

    தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புபடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

    * பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வது, பணி நிமித்தம் காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, 35 வயதை எட்டிய பிறகு கருத்தரிப்பது போன்றவை சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    * உடல் பருமனும் சிசேரியன் பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. பி.எம்.ஐ. அளவு 25-க்கு மேல் இருந்தால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாகிவிடும்.

    * சில பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்துக்கொள்வதற்கு விரும்புகிறார்கள்.

    * பிரசவ அறையில் அதிக நேரம் செலவிடும் சூழலும் சிசேரியனை தேர்ந்தெடுக்க காரணமாகிவிடுகிறது. குழந்தை பிறப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்தும் பிரசவ வலி ஏற்படாதபோது, தாய்-சேய் இருவரது உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு சிசேரியனை தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.

    சுகப் பிரசவத்திற்கு வழிமுறைகள்

    * சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது. பிரசவம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துக்களையும் குறைக்கும்.

    * நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் (ஸ்டெமினா) தேவைப்படும். பிரசவமும் அது போன்றதுதான். மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகுவதுபோல 10 மாத கர்ப்ப காலத்தையும் கருத வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

    * தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே சுக பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனினும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடல் நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமானது.

    * 'ஸ்குவாட்' எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியை செய்வது பிரசவத்தை எளிதாக்கும். கால்களை நேர் நிலையில் வைத்துக்கொண்டு மூட்டுகளை நன்றாக மடக்கியபடி குனிந்து நிமிரும்போது இடுப்பு பகுதிகள் விரிவடையும். கருவில் இருக்கும் குழந்தை எளிதாக பிரசவ நிலைக்கு வருவதற்கு வழிவகுக்கும். இந்த பயிற்சியை மருத்துவ ஆலோசனை பெற்று உடற்பயிற்சியாளரின் அறிவுரையின்படி மேற்கொள்ள வேண்டும்.

    * பிரசவ காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் மையங்கள் இருக்கின்றன. அங்கு பயிற்சி பெறுவது பிரசவத்தை எளிதாக்கும்.

    * கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. உடலுக்கு போதுமான புரதம் மற்றும் ஆற்றலை வழங்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் கருப்பையை வலுவாக்க முடியும்.

    • தமிழ்நாட்டில் 99.98% பிறப்புகள் மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன.
    • இயற்கை பெர்பெக்ட் என நம்புவது எல்லா விசயத்துக்கும் பொருந்துவதில்லை.

    மனிதனை தவிர 84 லட்சம் வகை உயிரினங்களுக்கும் இயற்கை பிரசவம் தான். மனிதனுக்கு மட்டும் ஏன் சிசேரியன்? என கேட்பவர்கள் உள்ளனர். ஆனால் அந்த 84 லட்சம் (!) உயிரினங்களில் எத்தனை தாய் உயிர்கள், பிரசவ சமயம் பலியாகிறது என சொல்வதில்லை.

    உதாரணமாக கழுதைப்புலியின் பிரசவம் வலி மிகுந்தது. பல சமயம் பிறப்புறுப்பே கிழிந்து பேறுகாலத்தில் சுமார் 18% கழுதைப்புலி தாய்கள் உயிரிழக்கும். பிற மிருகங்களின் கர்ப்பகால மரணவிகிதம் செம்மறி ஆடு 1.6%, மாடு 3%, ஆடு 2.6%.

    தமிழ்நாட்டில் கர்ப்பகால மரணவிகிதம் 0.06% மட்டுமே.

    தமிழ்நாட்டில் 99.98% பிறப்புகள் மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிக விகிதம் இது. இங்கே கர்ப்பகால மரணவிகிதம் லட்சத்துக்கு 62 தாய்மார்கள் மாத்திரமே

    இயற்கை பெர்பெக்ட் என நம்புவது எல்லா விசயத்துக்கும் பொருந்துவதில்லை. பல விசயங்களுக்கு இயற்கை வைத்துள்ள தீர்வு வலியும், மரணமுமே. இவை இரண்டும் இயற்கையே. அதற்கு தீர்வு காண மனிதன் முயன்றே மானுட சமுதாயம் இந்த அளவு உயர்ந்துள்ளது.

    - நியாண்டர் செல்வன்

    • சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.
    • பிரசவத்திற்கு பின் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

    பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.

    மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

     அந்த காலத்தில் பிரசவத்திற்கு பின்பு பெண்களின் வயிற்றில் இறுக்கமாக, துண்டை கட்டி வைப்பார்கள். கால்களையும் சேர்த்து அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே காற்று உட்செல்வது தடுக்கப்பட்டு, எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும் வயிறு ஒட்டிய நிலையில் அக்கால தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

    கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திவிடும்.

    தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.

    சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு அவசியம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது.

    ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்றப் பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகிவிடும்.

    இப்போது வயது வித்தியாசமின்றி பலரும் தொப்பை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதும் தொப்பைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு வித்திடும். கார்போஹைட்ரேட் அதிகம் கலந்த உணவுகள், புரதம், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படக்கூடும். பெண்களுக்கு தொப்பை அதிகம் இருந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும். தொப்பை உருவாகுவதற்கு முதன்மை காரணம் கொழுப்புதான். தண்ணீருக்கு பதிலாக அவ்வப்போது வெந்நீர் பருகுவது தொப்பையை கரைக்க உதவும்.

    • தாய்மை பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்.
    • அனைவரின் கவனமும் கர்ப்பிணியின் மீது இருக்கும்.

    ஒன்பது மாத புதிய உயிர் ஒன்றை உருவாக்கும் பயணம் பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். நாம் நினைப்பதைக் காட்டிலும், தாயின் வயிற்றில் கரு உருவாவது மிகவும் சிக்கலான விஷயம். இந்த காலகட்டத்தில் கணவன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கவனமும் அந்த கர்ப்பிணியின் மீது இருக்கும். கர்ப்பிணியை சந்திக்கும் மூத்தவர்கள், "வயிறு மேல இருக்கு… பெண் குழந்தைதான்" என்பது உள்பட பல்வேறு விஷயங்களைச் சொல்லிச் சென்றுவிடுகின்றனர்.

    கர்ப்பகாலத்தில், கர்ப்பிணியின் உடலில் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் சில அறிகுறிகளை வைத்து பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என கணித்துவிட முடியும் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

    மக்கள் மத்தியில் பொதுவாக நிலவி வரும் கர்ப்பகாலம் குறித்த தவறான நம்பிக்கைகளையும் அவற்றுக்கான சரியான அறிவியல் விளக்கங்களையும் தெரிந்துகொள்வோம்.

    தவறான நம்பிக்கை – 1

    தாயின் வயிற்றுக் கோணத்தை வைத்தும், பருமனை வைத்தும் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. கர்ப்பமான தாயின் வயிறு மேலே இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் எனவும், கீழே இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் எனவும் கூறுவர்.

    உண்மை நிலை:

    தாயின் வயிற்றில் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்பு படலத்தின் அளவு, தசை வலிமை, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தே கருவைச் சுமக்கும் வயிற்றின் அளவு மாறுபடும். எனவே, தாயின் வயிற்றின் அமைப்புக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    தவறான நம்பிக்கை – 2

    தாய்க்கு உப்புச் சுவை பிடித்தால், ஆண் குழந்தையும் இனிப்புச் சுவை பிடித்தால், பெண் குழந்தையும் பிறக்கும்.

    உண்மை நிலை:

    நமது உடலில் தாது உப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது உடல் தானாகவே சுவைத்தேடல் மூலம் குறைபட்ட ஊட்டச்சத்தைக் கேட்டுப்பெறும். இதை `ஃபுட் க்ரேவிங்' என்பார்கள். `ஃபுட் க்ரேவிங்'குக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் எந்தசம்பந்தமும் இல்லை.

     தவறான நம்பிக்கை – 3

    கர்ப்பமுற்ற மூன்றாவது மாதத்தில் தாய் அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தைக்கு முடி அதிகம் இருக்கும்.

    உண்மை நிலை:

    குழந்தையின் உச்சந்தலை, முடியின் அடர்த்தி பரம்பரை மரபணுக்களைப் பொறுத்தது. இதற்கும் வாந்தி, நெஞ்செரிச்சல் ஆகியவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    தவறான நம்பிக்கை – 4

    தாய்க்கு வலியில்லாத சுகப்பிரசவம் ஆகியிருந்தால், அவரது பெண்ணுக்கும் சுகப்பிரசவமே ஆகும்.

    உண்மை நிலை:

    இதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. குழந்தையின் எடை, வயிற்றில் குழந்தையின் நிலை, தாயின் இடுப்பு எலும்பின் சுற்றளவு, கர்ப்பகாலத்தில் தாயின் உணவுக்கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் ஆகியவையே சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யும் முக்கியக் காரணிகள்.

     தவறான நம்பிக்கை – 5

    கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

    உண்மை நிலை:

    கருவுற்ற தாயின் வயிற்றின் கீழ்ப் பகுதியில் ஏழு அடுக்குத் தோல் படலம் கருவைப் பாதுகாக்கிறது. இந்த தோல் படலம், வெளியில் இருந்து வரும் எதிர்பாராத அதிர்வுகளிடம் இருந்து கர்ப்பப்பை நீரில் மிதக்கும் கருவைப் பாதுகாக்கிறது. கரு முட்டையில் விந்து நுழைந்து, கர்ப்பப் பையில் கரு பதிந்ததும், `செர்விக்ஸ்' எனப்படும் கர்ப்பப்பை வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளும். இதனால் மேற்கொண்டு விந்து நுழைய முடியாது. ஆகையால், உடலுறவு கொள்வதால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதீத ரத்தப் போக்கு, வெள்ளைப்படுதல், கருச்சிதைவுக்கான வாய்ப்பு மற்றும் வேறு சில கோளாறுகள் உள்ள தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உறவு வைத்துக் கொள்வது நல்லது.

    தவறான நம்பிக்கை – 6

    குங்குமப் பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.

    உண்மை நிலை:

    தோலின் நிறம், மெலனின் நிறமியின் அளவைப் பொறுத்தது. குழந்தையின் கண், காது, மூக்கு, கை, கால் உள்ளிட்ட உடற்பகுதிகளின் அமைப்பு, தோலின் நிறம், குணாதிசயங்கள் ஆகியவை, தாய், தந்தை, முன்னோர்கள் ஆகியோரின் மரபணுக்களைச் சார்ந்தது. தாய் ஊட்டச்சத்து பானங்களைப் பருகுவதன் மூலமாகவோ குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிடுவதனாலோ, குழந்தையின் சரும நிறத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது.

    தவறான நம்பிக்கை – 7

    கர்ப்பகாலத்தில் தாயின் ஊட்டச்சத்துக்காக இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால், குழந்தையின் சரும நிறம் கறுக்கும்.

    உண்மை நிலை:

    இது உடல்நலத்துக்கே ஆபத்தான, மிகத்தவறான நம்பிக்கை. கர்ப்பிணிக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இந்தியாவில், பிரசவ காலத்தில் ஏற்படும் மரணங்களில், 50 சதவிகிதம் ரத்த சோகையினால் ஏற்படுகிறது. இந்த நோய் வராமல் தடுக்க, மருத்துவர் ஆலோசனையின் பேரில் தாய்மார்கள் கட்டாயம் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

     தவறான நம்பிக்கை – 8

    மாதவிலக்கு தள்ளிப்போன மூன்றாவது மாதத்தில் தான் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடனே செய்து கொண்டால், கரு கலைந்துவிட வாய்ப்புஉண்டு.

    உண்மை நிலை:

    இந்த தவறான நம்பிக்கை, தமிழகத்தில் பல குடும்பங்களில் நிலவுகிறது. சிக்கலான பிரசவத்தில் மிக முக்கியமானது எக்ட்டோபிக் கர்ப்பம். இந்த நிலையில் கர்ப்பப்பைவாய் வழியாக உள்ளே நுழையும் விந்தணு, கரு முட்டையை அடையாமல், இடையில் உள்ள கருக்குழாயில் தங்கி, அங்கேயே கரு உருவாகி வளரத் தொடங்கிவிடும். கருவின் எடையைத் தாங்க முடியாமல் கருக்குழாய் வெடித்து, சிசுவுக்கு ஆபத்து ஏற்படும். கரு, முட்டையில் தான் உருவாகி வளர்ந்து வருகிறது என்பதை உறுதிசெய்துகொள்ள, மாதவிலக்கு தள்ளிப்போனதுமே கட்டாயம் மகப்பேறு மருத்துவரை சந்தித்து, ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    தவறான நம்பிக்கை – 9

    தாயின் வயிற்றில் மச்சம் இருந்தால், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்.

     உண்மை நிலை:

    மச்சம் என்பது, நிறமியைத் தயாரிக்கும் தோல் செல்களான மெலனோசைட்கள், தோலில் ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் மச்சம் உருவாகிறது. மனிதர்களுக்கு 40 வயது வரை புதிய புதிய மச்சங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. தோலின் நிறத்தைப் பொறுத்து இவை சிவப்பு, கறுப்பு, பழுப்பு என பல நிறங்களில் உடலில் தோன்றும். இதற்கும் கர்ப்பத்துக்கும், பிரசவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    தவறான நம்பிக்கை – 10

    குழந்தையின் உடல்பருமன் முன்னோர்களின் மரபணுக்களை மட்டுமே சார்ந்தது.

    உண்மை நிலை:

    கருவுற்றிருக்கும் தாய்மார்களின் தவறான உணவுப் பழக்கம் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கருவுற்ற சமயத்தில் அதிக அமிலத்தன்மை உடைய உணவுகள், மசாலா மற்றும் நிறைவுறாக் கொழுப்பு கலந்த உணவுகளைத் தாய்மார்கள் சாப்பிட்டால், அவை குழந்தையின் உடல்பருமனை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, கருவுற்ற காலத்தில் தாய்மார்கள் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு, பயறு வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.
    • நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர்.

    அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்காவில் (Fort Worth Zoo) கர்ப்பமாக இருந்த செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.

    பிரீக்ளம்ப்சியா என்பது கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் தீவிர ரத்த அழுத்த நிலையால் செகானி என்ற கொரில்லா பாதிக்கப்பட்டிருந்தால் தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் இந்த 'குட்டி' கொரில்லா பிறந்தது.

    நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிறந்த இந்த கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைத்துள்ளனர். தற்போது செகானி மற்றும் ஜமீலா ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது. 

    • குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சிசேரியனை திட்டமிடலாம்.
    • பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும்.

    சிசேரியன் என்பது கர்ப்பிணியின் வயிறு மற்றும் கருப்பையை திறக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழி. இது சிசேரியன் முறை பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

    சிசேரியனுக்கான காரணங்கள்

    கர்ப்பிணிக்கு அல்லது குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சிசேரியனை திட்டமிடலாம். ஏற்கனவே சிசேரியன் இருந்தால் அடுத்த குழந்தையை பிரசவிப்பதும் சிசேரியனாக இருக்கலாம்.

    யோனி பிரசவத்தின் போது தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி மற்றும் செயலில் உள்ள ஹெர்ப்ஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளை கொடுக்கலாம்.

    கர்ப்பிணி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சில நிபந்தனைகள் கொண்டிருக்கும் போது மருத்துவர் சிசேரியனை அறிவுறுத்தலாம்.

    நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கலாம். சில பிரசவங்கள் சிசேரியனை அவசியமாக்கலாம். குழந்தை மிகவும் பெரியதாக இருக்கலாம். அல்லது பிரசவத்துக்கு தவறான நிலையில் இருக்கலாம். சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சிசேரியனுக்கு மாற்றப்படலாம்.

    வயிற்றில் குழந்தைக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான அறிகுறிகளை மருத்துவர்கள் கவனிக்கலாம். ஏனெனில் பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு, கரு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும். பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். சாதாரண விகிதம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை இடையில் மாறுபடும்.

    கருவின் இதயத்துடிப்பு ஏதேனும் சிக்கல் இருப்பதாக தெரிந்தால் மருத்துவர் உடனடி நடவடிக்கையை எடுப்பார். தாய்க்கு ஆக்சிஜனை வழங்குவது, திரவத்தை அதிகரிப்பது மற்றும் தாயின் நிலையை மாற்றுவது போன்றவை முயற்சிக்கப்படும். இதயத்துடிப்பு மேம்படவில்லை எனில் டாக்டர் சிசேரியன் சிகிச்சைக்கு வலியுறுத்தலாம்.

    சில குழந்தைகள் பிறக்கும் போது கருவின் அசாதாரண நிலையில் இருக்கலாம். பிரசவத்தின் போது கருவின் இயல்பான நிலை தாயின் முதுகை எதிர்கொள்ளும் வகையில் தலை கீழாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கரு சரியான நிலையில் இருக்காது. இது யோனி வழியாக பிரசவத்தை கடினமாக்கலாம் எனவே டாக்டர் சிசேரியனை திட்டமிடுகின்றனர்.

    திட்டமிட்ட சிசேரியன்

    சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நீங்கள் பிரசவ தேதியையும் மருத்துவர் மூலம் அறிந்துகொள்ளலாம். ஐவிஎஃப் முலம் மருந்துகள் மற்றும் திரவங்களை பெற்று, அறுவை சிகிச்சையின் போது உங்கள் சிறுநீர்ப்பை காலியாக வைக்க ஒரு வடிகுழாய் வைக்கப்படும்.

    சிசேரியனை திட்டமிடும் பெரும்பாலான பெண்களுக்கு மயக்க மருந்து ஒரு எபிட்யூரல் அல்லது ஸ்பைனல் பிளாக் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிடும். இதனால் எந்த வலியையும் அவர்கள் உணரமாட்டார்கள். இந்த வகையான மயக்க மருந்து உங்களை இன்னும் விழித்திருக்கவும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

    அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு குறுக்கே ஒரு திரை வைக்கப்படும் இதனால் அதை பார்க்க முடியாது. வயிற்றில் அதன் பிறகு கருப்பையில் ஒரு வெட்டு இருக்கும் என்றாலும் மயக்க மருந்து காரணமாக நீங்கள் அதை உணர மாட்டீர்கள்.

    கருப்பையில் இருந்து குழந்தையை அகற்ற மருத்துவர்கள் பணிபுரியும் போது நடுப்பகுதியை அவர்கள் தள்ளுவதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் உணர முடியும். அல்லது அழுத்தமாக உணர்வீர்கள். குழந்தை பிறந்தவுடன் அழுவதை கேட்கவும், பார்க்கவும் முடியும். எனினும் சிசேரியன் முடிந்ததும் மருத்துவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கலாம். அதே நேரம் எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் குழந்தையை உடன் வைத்திருக்க முடியாது.

    சில நேரங்களில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மருத்துவர்களின் உதவி தேவைப்படலாம்.

    குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி தையல் போடப்படும். சிசேரியன் பிரசவம் செய்வதற்கு ஒரு மணி நேரம் வரை இருக்கலாம்.

    அதே நேரம் அவசரகால சிசேரியன் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையின் வேகம் மற்றும் அவசரம் உள்பட சில வித்தியாசங்கள் இருக்கலாம். திட்டமிடப்பட்ட சிசேரியனை காட்டிலும் அவசரமாக செய்யப்படும் சிசேரியனில் வேகம் அதிகமாக இருக்கும்.

    • உடல்நல பிரச்சனைகள் இருந்தால் சி பிரிவை திட்டமிடலாம்.
    • சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சி பிரிவுக்கு மாற்றலாம்.

    சிசேரியன் பிரசவம் என்பது கர்ப்பிணியின் வயிறு மற்றும் கருப்பையை திறக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழி. இது சிசேரியன் முறை பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

    சி-பிரிவு காரணங்களாக பலவற்றை சொல்லலாம். கர்ப்பகாலத்தில் சிசேரியன் என்று உறுதியாக இருந்தாலும் சிலசமயங்களில் சுகப்பிரசவமும் யோனி வழி பிரசவமும் நடக்கலாம்.

    திட்டமிடப்பட்ட சிசேரியன்

    சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நீங்கள் பிரசவ தேதியையும் மருத்துவர் மூலம் அறிவீர்கள். ஐவிஎஃப் முலம் மருந்துகள் மற்றும் திரவங்களை பெறுவீர்கள். அறுவை சிகிச்சையின் போது உங்கள் சிறுநீர்ப்பை காலியாக வைக்க ஒரு வடிகுழாய் வைக்கப்படும்.

    இந்த சி பிரிவுக்கு திட்டமிடும் பெரும்பாலான பெண்களுக்கு மயக்க மருந்து ஒரு எபிட்யூரல் அல்லது ஸ்பைனல் பிளாக் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிடும். இதனால் எந்த வலியையும் நீங்கள் உணரமாட்டீர்கள். இந்த வகையான மயக்க மருந்து உங்களை இன்னும் விழித்திருக்கவும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

    அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு குறுக்கே ஒரு திரை வைக்கப்படுவதால் அதை பார்க்க முடியாது. வயிற்றில் அதன் பிறகு கருப்பையில் ஒரு வெட்டு இருக்கும் என்றாலும் மயக்க மருந்து காரணமாக நீங்கள் அதை உணர மாட்டீர்கள்.

    கருப்பையில் இருந்து குழந்தையை அகற்ற மருத்துவர்கள் பணிபுரியும் போது நடுப்பகுதியை அவர்கள் தள்ளுவதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் உணர முடியும். அல்லது அழுத்தமாக உணர்வீர்கள். குழந்தை பிறந்தவுடன் அழுவதை கேட்கவும், பார்க்கவும் முடியும்.

    எனினும் சிசேரியன் முடிந்ததும் மருத்துவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கலாம். அதே நேரம் எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் குழந்தையை உடன் வைத்திருக்க முடியாது.

    சில நேரங்களில் சி – பிரிவு மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மருத்துவரகளின் உதவி தேவைப்படலாம். குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி தையல் போடப்படும். சிசேரியன் பிரசவம் செய்வதற்கு 1 மணி நேரம் வரை இருக்கலாம்.

    அதே நேரம் அவசரகால சிசேரியன் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையின் வேகம் மற்றும் அவசரம் உட்பட சில வித்தியாசங்கள் இருக்கலாம். திட்டமிடப்பட்ட சி பிரிவு காட்டிலும் அவசரமாக செய்யப்படும் சி- பிரிவில் வேகம் அதிகமாக இருக்கும்.

    சிசேரியனுக்கான காரணங்கள்

    கர்ப்பிணிக்கு அல்லது குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சி பிரிவு திட்டமிடலாம்.

    ஏற்கனவே சி- பிரிவு இருந்தால் அடுத்த குழந்தையை பிரசவிப்பதும் சிசேரியனாக இருக்கலாம்.

    யோனி பிரசவத்தின் போது தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி மற்றும் செயலில் உள்ள ஹெர்ப்ஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளை கொடுக்கலாம்.

    கர்ப்பிணி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சில நிபந்தனைகள் கொண்டிருக்கும் போது மருத்துவர் சி -பிரிவு அறிவுறுத்தலாம்.

    நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கலாம். சில பிரசவங்கள் சி பிரிவை அவசியமாக்கலாம். குழந்தை மிகவும் பெரியதாக இருக்கலாம். அல்லது பிரசவத்துக்கு தவறான நிலையில் இருக்கலாம். குழந்தைக்கு சி- பிரிவு பாதுகாப்பானதாக மற்றும் பிறப்பு குறைபாடுகள் இருக்கலாம். சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சி பிரிவுக்கு மாற்றலாம்.

    வயிற்றில் குழந்தைக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான அறிகுறிகளை மருத்துவர் கவனிக்கலாம். ஏனெனில் பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு, கரு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.

    பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். சாதாரண விகிதம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை இடையில் மாறுபடும்.

    கருவின் இதயத்துடிப்பு ஏதேனும் சிக்கல் இருப்பதாக காட்டினால் மருத்துவர் உடனடி நடவடிக்கையை எடுப்பார். தாய்க்கு ஆக்சிஜனை வழங்குவது, திரவத்தை அதிகரிப்பது மற்றும் தாயின் நிலையை மாற்றுவது போன்றவை முயற்சிக்கப்படும். இதயத்துடிப்பு மேம்படவில்லை எனில் அவர் சி பிரிவு சிகிச்சைக்கு வலியுறுத்தலாம்.

    சில குழந்தைகள் பிறக்கும் போது கருவின் அசாதாரண நிலையில் இருக்கலாம். பிரசவத்தின் போது கருவின் இயல்பான நிலை தாயின் முதுகை எதிர்கொள்ளும் வகையில் தலை கீழாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கரு சரியான நிலையில் இருக்காது. இது பிறப்பு கால்வாய் அதாவது யோனி வழியாக பிரசவத்தை கடினமாக்கலாம்.

    பிரசவக்காலத்தில் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது கூட சி பிரிவு பிரசவத்தை தூண்டக் கூடும். இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறப்பது.

    நஞ்சுக்கொடி பிரச்சனைகள், இது ப்ரீவியாவை உள்ளடக்கியது. இதில் நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கிறது. இது கருவில் இருந்து துண்டிக்கப்படும் ஒரு நிலைமை.

    • தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 21.5 சதவீதமாகும்.
    • தென் மாநிலங்களில் சிசேரியன் பிரசவ விகிதம் அதிகமாகவும், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பீகாரில் குறைவாகவும் உள்ளது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சிசேரியன் பிரசவங்கள் குறைவாக உள்ளன. நாட்டில் அரசு மருத்துவமனைகளைவிட தனியாா் மருத்துவமனைகளில் அதிக சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது.

    'தி லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா' எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் கடந்த 2019 முதல் 2021 வரையிலான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, டெல்லியில் உள்ள 'ஜாா்ஜ் இன்ஸ்டிடியூட் பாா் குளோபல் ஹெல்த்' நிறுவன ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனா்.

    நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 15 முதல் 49 வயதுடைய 7.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பிரசவ தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 21.5 சதவீதமாகும். பல்வேறு மாநிலங்களில் இந்த விகிதம் கணிசமாக வேறுபடுகிறது. ஒப்பீட்டளவில், நாகாலாந்தில் குறைந்தபட்சமாக 5 சதவீதமும், தெலுங்கானாவில் அதிகபட்சமாக 60.7 சதவீதமும் சிசேரியன் பிரசவ விகிதம் உள்ளது.

    பெரும்பாலான மாநிலங்களில் வசதியான குடும்ப பெண்கள் மத்தியில் சிசேரியன் பிரசவம் இரு மடங்கு அதிகமாக உள்ளது. தெலுங்கானா, தமிழகம், ஆந்திரம் போன்ற தென் மாநிலங்களில் சிசேரியன் பிரசவ விகிதம் அதிகமாகவும், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பீகாரில் குறைவாகவும் உள்ளது.

    பொருளாதார வளா்ச்சி, போதிய சுகாதார வசதிகள், அதிக கல்வியறிவு போன்ற காரணிகளுடன் சுக பிரசவம் மீதான அச்சம், வலியற்ற பிரசவம், நல்ல நாளில் குழந்தை பெற வேண்டுமென்ற விருப்பம் ஆகியவையும் சிசேரியன் பிரசவம் அதிகரிப்புக்கு காரணமாகின்றன.

    பீகாரை பொருத்தவரை, பெரும்பாலும் வசதி குறைவானவா்களைக் கொண்ட மாநிலம். அங்கு மருத்துவா் சிசேரியனுக்கு பரிந்துரைத்தாலும் குறைவான மருத்துவச் செலவு மற்றும் எளிதில் குணமடைவதைக் கருத்தில் கொண்டு, மக்கள் சுகப்பிரசவத்தையே தோ்வு செய்கின்றனா் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு.
    • நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

    ஆபரேஷனுக்கு பிறகு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி வருகிறது என்றால் அது இடுப்பு எலும்பு, குருத்தெலும்புகளின் தேய்மானம், அதிக உடல் எடை, கடின உழைப்பு, வயதுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் போன்றவை கூட இடுப்பு வலியை ஏற்படுத்தலாம்.

    கர்ப்பத்தின்போது உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பு. ஆனால் இந்த அதிகரிக்கும் உடல் எடை உங்கள் தோற்ற நிலையை மாற்றி முதுகு பக்கம் வளைந்து உங்களது வயிற்றுப்பகுதி தசைகளை வலுவிழந்ததாக ஆக்கிவிடுகிறது.


    இதனால் உங்கள் இடுப்பெலும்புக்கும், குருத்தெலும்புக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் பின்பக்கமுள்ள தசைகளும், எலும்பு இணைப்புகளும் அதிக எடையினால், அதிக பளுவை பல மாதங்கள் சுமக்க நேரிடுகிறது.

    பிரசவத்துக்குப் பிறகு சில பேருக்கு சில காலங்களுக்கு இடுப்பு வலி வந்து பின்பு பூரண குணமாகிவிடுகிறது. ஆனால் சில பேருக்கு இந்த இடுப்பு வலி ஓரிரு ஆண்டுகள் இருந்து பின் சரியாகிவிடுகிறது.

    இடுப்பு தசைப்பிடிப்பு, தசை பிறழ்தல், ஜவ்வு இறுக்கம், குருத்தெலும்பு வரிசை சீராக இல்லாமலிருப்பது, கீல் வாத நோய், எலும்பு வலு இழப்பு நோய், மடங்காநிலை முதுகெலும்பு வீக்கம், விபத்து, சதைப்பிடிப்பு, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் பிறழ்தல், நீண்டு, கிழிந்து போதல் போன்றவைகளினாலும் இடுப்பு வலி ஏற்படலாம்.


    அதிக எடை தூக்காமல் இருப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடப்பது, முறையாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை கடைப்பிடித்து வருவது நல்லது.


    மேலும் இடுப்பு வலி மறைய மருத்துவர் மற்றும் பிசியோதெரபி நிபுணர் ஆலோசனையின் பேரில் அவர்கள் அளிக்கும் மருத்துவம் மற்றும் உடல் இயக்க பயிற்சிகளை செய்வது பலன் தரும்.

    ×