search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் அட்டை"

    • போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாக்கு மூட்டைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, வேதாளை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல்பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக நாட்டுப் படகுகளில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், கடல் பல்லி, கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி செல்வது அதிகரித்துள்ளது.

    மேலும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்திவரப்படுவதால் இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மண்டபம் அடுத்த வேதாளை-அரியமான் இடையே வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை ஓரமாக கிடந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். இதில் சாக்கு மூட்டைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இதனையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் அதனை மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

    • மண்டபம் அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் வேதாளை பகுதியில் இருந்து தொடா்ந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் ஆகியோா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் கடல் அட்டை கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குப்பை என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை நடத்தியபோது சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத் தப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி தோப்பின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கீழக்கரையில் கடல் அட்டைகள், சுறா பீலிகள் பதுக்கிய 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அவற்றின் மதிப்பு பல கோடி என வனத்துறையினா் கூறினா்.

    ராமநாதபுரம்

    கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கடல் பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கீழக்கரை அருகே பெரியபட்டினம் சல்லித்தோப்புப் பகுதியில் தனியாா் தோட்டத்தில் கடல் அட்டைகள், சுறா பீலிகள் பதுக்கிவைக்கப்ப ட்டிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கீழக்கரை வனச்சரகா் செந்தில்குமாா் மற்றும் அலுவலர்கள் பெரிய பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 8 மூட்டைகளில் சுமாா் 250 கிலோ சுறா பீலிகள் இருந்தன. தோட்டத்தில் மேலும் சோதனையிட்ட போது பதப்படுத்தப்பட்ட சுமாா் 1000 கிலோ கடல் அட்டைகள் 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு பல கோடி என வனத்துறையினா் கூறினா்.

    சுறா பீலி மற்றும் கடல் அட்டைகளுடன் அங்கிருந்த நாட்டுப்படகு, 10 கேன்களில் இருந்த டீசல் ஆகியவற்றையும் வனத்துறையினா் கைப்பற்றினா்.

    இது தொடர்பாக அந்த தோட்டத்தில் காவல் பணியில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த செல்வம் (வயது36), ரஞ்சித் (35) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து இவர்கள் தொடர்பில் யார்? யார்? உள்ளனர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதில் தொடர்புடைய ராமநாதபுரத்தை சேர்ந்த விஜயானந்த் என்பவரை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
    • இவைகளின் ெமாத்த மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் கடல் அட்டை ஆகியவற்றை கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் கடலோர பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கடத்தலை தடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நேற்று தனுஷ்கோடி பகுதியில் கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 96 கிலோ கஞ்சா பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக மன்சூர் அலிகான் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்திச் செல்ல கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடல் அட்டை கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இதனை தடுக்கும் வகையில் வனத் துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மற்றும் வேதாளை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத் துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

    இந்த நிலையில் மண்டபம் வனத்துறை வனவா் அருண்பிரகாஷ், வேட்டைத்தடுப்பு காவலா்கள் நேரு, கண்ணன், சிவசண்முகம், ராஜேஷ் ஆகியோர் மரைக்காயா்பட்டணம்- வேதாளை சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த வாகனம் வேதாளையை சோ்ந்த முகமது அலி ஜின்னா (வயது47) என்பவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.

    இதையடுத்து காரில் இருந்த முகமது அலி ஜின்னாவின் தம்பி சாதிக்அலியை வனத் துறையினா் கைது செய்ய முயன்றனா். அதற்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க வில்லை. மேலும் அவர் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு கும்பலை அங்கு வரவழைத்தாா். அங்கு வந்த 20 போ் கும்பல் வனத்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்து வாகனத்தை எடுத்துச் சென்றனா்.

    இதுகுறித்து வனவர் அருண்பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் சாதிக்அலி, அவரது அண்ணன் முகமது அலி ஜின்னா மற்றும் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

    ×