என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடல் அட்டைகள் பறிமுதல்
- மண்டபம் அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் வேதாளை பகுதியில் இருந்து தொடா்ந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் ஆகியோா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் கடல் அட்டை கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குப்பை என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை நடத்தியபோது சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத் தப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி தோப்பின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.