என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஆர் தனபாலன்"

    • நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற மக்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.
    • அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

    தமிழக அரசின் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டால் தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் வாங்கியுள்ள நான்கு லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி அடைப்பதற்கான திட்டங்கள் இல்லாதது தமிழக அரசை திவால் ஆகி விடும் என்பதில் ஐயமில்லை.

    தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 100 குறைக்கப்படும் என்ற அறிவிப்பும், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், மாத ஒரு முறை மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் மாணவர்களின் கல்வி கடன், மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி போன்ற தேர்தல் வாக்குறுதிகளும் நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற மக்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

    நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக உள்ளது. தமிழக மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்டை தமிழக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தண்ணீரில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் நடமாடுவதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.
    • மக்களின் அச்சத்தை போக்கி, நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி, தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்டு, தங்குவதற்கு இடம் கொடுத்து, உணவு, உடைகள் வழங்கி, கொசுத் தொல்லை மற்றும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போர்வைகள் வழங்கிட வேண்டும்.

    சென்னை மாநகராட்சியும், அரசும் துரிதமாக செயல்பட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதுகாக்கிற பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் தண்ணீரில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் நடமாடுவதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கி, நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி, தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண கூடத்தில் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் என்.ஆர்.தனபாலன் பங்கேற்று கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும், என்.ஆர்.டி. கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனருமான என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

    என்.ஆர்.தனபாலன் தனது பிறந்தநாளையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லறை தோட்டத்தில் உள்ள தாயாரின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் இயங்கி வரும் அரிமா சங்கத்திற்கு சொந்தமான டயாலிசிஸ் சென்டரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான பழங்கள், காலை உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து அவர் தி.நகர் திருமலைப்பிள்ளை தெருவில் காமராஜர் நினைவு இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண கூடத்தில் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.தனபாலன் பங்கேற்று கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.

    பிறந்தநாள் விழாவில் 1000 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, தையல் எந்திரம், வேட்டி-சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை என்.ஆர்.தனபாலன் வழங்கினார்.

    விழாவில் ஏராளமானோர் பங்கேற்று என்.ஆர்.தனபாலனை வாழ்த்தினார்கள். அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி.சேகர், த.மா.கா. நிர்வாகி ஜி.ஆர்.வெங்கடேஷ், இந்திய நாடார்கள் பேரமைப்பு பொதுச்செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், நிர்வாகி அண்ணா தனபால், பொருளாளர் ஏ.எம்.டி.சிவக்குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர்தர் தேவசகாயம், மாவட்ட செயலாளர் பெருமாள், ரத்தினம் ஹார்டுவேர்ஸ் என்.ஆர்.அந்தோணிதாஸ், தொழில் அதிபர் ஆவடி ஏ.முருகன் கிராமணியார், எஸ்.எம்.எண்டர்பிரைசஸ் கே.சத்தியமூர்த்தி, மனோபாக்யா டிரான்ஸ்போர்ட் எஸ்.பாக்யராஜ், ஸ்ரீ காமாட்சி அம்மன் பண்ட் கரு.வெள்ளைச்சாமி நாடார், பா.திருமலை நாடார், கரு.த.காமராஜ் நாடார், ஸ்ரீ பூர்ணிமா ஏஜென்சிஸ் என்.அஜித்குமார், ஆர்.முத்துகிருஷ்ணன்,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் குமார், மாநில பொருளாளர் துறையூர் பி.பிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் சந்தானம், மாவட்ட தலைவர் எம்.வைகுண்ட ராஜா, மாவட்ட செயலாளர் ஜெ.முத்து, மதுரவாயல் பகுதி தலைவர் டி.செல்டன், விருகை பகுதி தலைவர் கே.மணிராஜ், அம்பத்தூர் பகுதி தலைவர் எம்.சேர்மக்கனி, மகளிர் அணி துணைத்தலைவி சிவகங்கை விக்டோரியா, குமரி அன்பு கிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி காமராஜ், குலசை முத்து, கே.பி.நல்லதம்பி, வி.பி.ஐயர், பூவை.ஜெயக்குமார், நசரத்பேட்டை முருகேசன், திருமழிசை அய்யாத்துரை, ராஜாகனி,

    தமிழ்நாடு நாடார் பேரவை செயற்குழு உறுப்பினர் மதுரை பன்னீர்செல்வம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, சென்னை நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திக், அகில உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க துணைத்தலைவர் பவர் பாண்டியன், செயலாளர் முருககனி, நடிகர்கள் விஜய் பாரத், கரிகாலன், விஜித், இயக்குனர்கள் அருள் செல்வன், பகவதி பாலா, தயாரிப்பாளர் பூபால் அழகன், கேமராமேன் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

    பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை என்.ஆர்.டி. குழும இயக்குனர் ஆர்.சம்பத் தலைமையில், என்.ஆர்.டி. அறக்கட்டளை நிர்வாகிகள் என்.ஆர்.டி. பிரேம்குமார், என்.ஆர்.டி. பிர்லா டேவிட், என்.ஆர்.டி.சேசுராஜ், ஜெ.பிரவீன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தவறான கருத்தை பதிவு செய்கிறார்.
    • காமராஜரின் மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரை பற்றி தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவறான தகவல்களை நாட்டு மக்களிடம் பரப்பி வருவதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தவறான கருத்தை பதிவு செய்கிறார்.

    காமராஜர் என்றுமே தோற்றவர் அல்ல. அவர் கொண்டு வந்த கே பிளான் படி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சி பணிக்கு வந்தார். அவர் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இன்றளவும் தி.மு.க. என்கிற கட்சியே தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும் என்பதை ஆ.ராசா போன்றவர்கள் உணர வேண்டும். விருதுநகரில் தோற்கடிப்பட்ட காமராஜருக்கு, நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்தார்கள் என்பதை நாடறியும்.

    பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவரது மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க.வினர் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை அசோக் நகரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் சங்கத்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • காமராஜர் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து வருகிற 7-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அசோக் நகரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடைபெற்ற சங்கத் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், சந்திரன், ஜெயபால், மாரிதங்கம், மின்னல் ஸ்டீபன், முத்துரமேஷ், கொட்டிவாக்கம் முருகன், கோயம்பேடு வைகுண்டராஜா, ஸ்ரீனிவாசன், பாடி விஜயகுமார், பல்லாவரம் மணிகண்டன், வேல்முருகன், ஓட்டேரி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காமராஜர் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல்கட்ட போராட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மருதுபாண்டிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு முழு உருவ சிலையும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபமும் மார்பளவு சிலையும் அமைத்து தியாகிகளை பெருமைப்படுத்தியதை வரவேற்கிறோம்.
    • தியாகி சங்கரலிங்கனாரின் தியாகங்களை போற்றும் வகையில் அவருக்கும் தமிழக அரசு முழு உருவ சிலை அமைத்து பெருமைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிண்டி காந்தி மண்டபம் அருகில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுகளை போற்றும் வகையில் மருதுபாண்டிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோருக்கு முழு உருவ சிலையும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபமும் மார்பளவு சிலையும் அமைத்து தியாகிகளை பெருமைப்படுத்தியதை வரவேற்கிறோம்.

    அதேநேரத்தில் தியாகி சங்கரலிங்கனாரின் தியாகங்களை போற்றும் வகையில் அவருக்கும் தமிழக அரசு முழு உருவ சிலை அமைத்து பெருமைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள்.
    • காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்ட விளம்பரங்களில் பெருந்தலைவர் காமராஜர் படம் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயங்களில் மட்டும் காமராஜர் படத்தை சிறிய அளவில் பயன்படுத்தி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மற்ற நேரங்களில் அவரது படத்தையும், பெயரையும் மறைக்கிறார்கள்.

    காமராஜர் பெயரையும், புகழையும் மறைக்க நினைக்கும் காங்கிரஸ்காரர்களின் எண்ணங்கள் காங்கிரஸ் கட்சியை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் காமராஜர் போன்ற அரசியல்வாதிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள். எனவே காமராஜர் படத்தையும் புகழையும், இருட்டடிப்பு செய்து அவருடைய பெயரை உச்சரிக்காத அரசியல்வாதிகளை புறந்தள்ள தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதத்தை பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளில் வைத்து கொடுத்து வருகிறார்கள்.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூ, மாலைகள் வைக்கவும், பிரசாதங்கள் கொடுக்கவும் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளை அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதத்தை பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளில் வைத்து கொடுத்து வருகிறார்கள். இதே போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூ, மாலைகள் வைக்கவும், பிரசாதங்கள் கொடுக்கவும் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளை அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு செய்யும்போது தமிழகத்தில் உள்ள 10 லட்சம் பனைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படும். ஆண்டுதோறும் பனைத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
    • இந்திய சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு" என்ற பாடலுக்கும் தமிழில் வெளிவந்த "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்ற குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

    ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற "நாட்டு நாட்டு" என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்திய சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விருது கிடைத்துள்ளது. அதே நேரத்தில் "தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்" என்ற தமிழில் வெளியான குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் கலைத்திறன் உலக அளவில் உயர்ந்து நிற்பதை எண்ணி நாடே பெருமை கொள்கிறது. இந்த விருது கிடைப்பதற்காக கடுமையாக உழைத்த அத்துணை கலைத்துறையை சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    • பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

    சென்னை :

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    காஞ்சிபுரம் பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள 3 லட்சம் போதுமானதல்ல, தொழிலாளர்களின் உயிர் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது என்பதை அரசு கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாளை தொடங்க இருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
    • தன் மீதுள்ள திடமான நம்பிக்கையாலும், அச்சம் தவிர்த்து, வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடும், எதிர்கால சிந்தனையோடும், நாமும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நாளை தொடங்க இருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தன் மீதுள்ள திடமான நம்பிக்கையாலும், அச்சம் தவிர்த்து, வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடும், எதிர்கால சிந்தனையோடும், நாமும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்கிற லட்சியத்தோடும், உயர்ந்த கனவுகளோடும், தேர்வு மையத்திற்கு தவறாமல் வருகை தந்து தேர்வுகளை எழுதி வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு வேலையாகும்.
    • தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பவர்களை குண்டர் சட்டதில் கைது செய்யவேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இரு நிகழ்வுகளிலும் ஒரே வகையான கள்ளச்சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி வரும் ஆய்வுகளில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய மதுவிலக்கு நடைமுறைப் பிரிவு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வரையிலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும்.

    கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர்.

    காரணைப் புதுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மற்றும் குடிப்பகத்தை அரசு உடனடியாக மூட வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவு எடுத்து உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிர் இழந்த சம்பவம் துரதிஷ்டவசமானதாகும்.

    கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு வேலையாகும்.

    தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருப்பவர்களை குண்டர் சட்டதில் கைது செய்யவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×