என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்கி ஊழியர்கள்"
- வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும்.
புதுடெல்லி:
வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீதம் ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.
இவற்றை அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் அமலுக்கு வரும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்பட பல்வேறு படிகளைச் சேர்த்து புதிய ஊதிய நிர்ணயம், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒரு முறை விடுமுறை எடுக்கலாம் உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புக்கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன. இது வங்கித் துறையில் மைல் கல்லாகும்.
வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளர்கள் பலனடைவர்.
- வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஊதிய உயர்வு 2022, நவம்பர் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாகும்.
சென்னை:
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு கடந்த 2022 நவம்பர் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாகும்.
இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு ரூ.7,898 கோடி கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
- பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
- 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். கடைசியாக 2014, 2017, 2020 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
இந்த ஆண்டும், தொடர்ச்சியாக 4-வது முறையாக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிபெயர்ச்சி விழாவிற்கு முன்னதாக உண்டியலை எண்ண, மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்து வரு கின்றனர்.
- பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.
- இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார்.
கோவை:
கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கியும், அதன் பண சேமிப்பு கிடங்கும் உள்ளது.
வங்கி பண சேமிப்பு கிடங்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கிக்கு பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ.70.40 கோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது பல்வேறு வகைகளில் ரூ.3.28 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பண சேமிப்பு கிடங்கு கடந்த ஆண்டு 3 முறை முறைகேடாக திறக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார். புகாரின் பேரில் வங்கி அலுவலர் செல்வராஜன், மேலாளர் ராஜன், அலுவலர் ஜெயசங்கரன், சார்பு அலுவலர் ஸ்ரீகாந்த், பண பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் ஆகியோர் மீது சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட மூத்த வங்கி மேலாளர் விஜயலட்சுமி இறந்து விட்டார்.
புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வங்கியில் பதிவான கண்காணிப்பு காட்சிகளை கொண்டு 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது வங்கி கதவுகள் எதற்காக 3 முறை திறக்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தை வேறு வங்கியில் டெபாசிட் செய்து உள்ளார்களா? அல்லது சொத்துக்கள் வாங்கி உள்ளனரா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி போலி நோட்டுகள் தயாரித்து அதனை சேமிப்பு கிடங்கில் வைத்து விட்டு ஓரளவு நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை அவர்கள் கைப்பற்றி இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் 5 பேரும் கைதாக வாய்ப்பு உள்ளது.
இந்த விவகாரத்தில் இந்த 5 பேர் மட்டும் தான் காரணமா, அல்லது வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்