என் மலர்
நீங்கள் தேடியது "கே.எல். ராகுல்"
- சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.
- 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்து வார்னரின் சாதனையை கே.எல். ராகுல் முறியடித்துள்ளார். 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் :
1. கே.எல். ராகுல் - 130 இன்னிங்ஸ்
2. டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்
3. விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
4. ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
5. ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்
- கே.எல். ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.
- கே.எல். ராகுலின் பிறந்த நான் இன்று. பிறந்த நாளில் மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் அதியா ஷெட்டியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் கே.எல். ராகுல் விளையாடவில்லை.
இன்று கே.எல். ராகுலுக்கு பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளில், தனது மகளுக்கு இவாரா (Evaarah) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவாரா என்றால் கடவுளின் பரிசு என அர்த்தம்.
- ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாம்.
- கேப்டன் ரோகித் ஷர்மா, அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஆறு நாட்கள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். இன்றைய பயிற்சியில் கே.எல். ராகுல் கலந்து கொண்டார். முதலில் தான் கடந்த சில வாரங்களாக செய்துவரும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் கே.எல். ராகுல்.
அதன் பிறகு, நெட்ஸ்-இல் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவருக்கு ஷர்துல் தாக்கூர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பந்து வீசினர். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல், உடலில் எந்த இடையூறும் ஏற்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. கே.எல். ராகுல் பயிற்சியில் ஈடுபடுவதை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்து வந்தனர்.
வேகப்பந்து வீச்சை தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் மயான்க் மார்கன்டே ஜோடி கே.எல். ராகுலுக்கு பந்துவீசியது. இவர்களின் பந்துவீச்சில் கே.எல். ராகுல் பல்வேறு ஷாட்களை அடித்தார். இதில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களும் அடங்கும்.
- முதல் போட்டியின்போது கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.
- 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில், கடைசி 3 போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பு.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது
இதனால் இரண்டாவது போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயம் சரியாகி உடல் தகுதி பெற்றதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நூறு சதவீதம் உடல் தகுதி பெறவில்லை என்பதால் முழுமையாக குணமடைவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
23 வயதான இடது கை பேட்ஸ்மேன் ஆன தேவ்தத் படிக்கல் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதால் அணியில் இடம் கிடைத்துள்ளது. தேவ்தத் படிக்கல் பஞ்சாப் அணிக்கெதிராக 193 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்சில் 105, 65, 21 என ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடினாலும் கூட, அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்.
- சில பெரிய வீரர்கள் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும்போது நீங்கள் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சுமார் ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. வருகிற 19-ந்தேதி இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் ஜூரெல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வங்கதேச அணிக்கெதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் இடம் பிடித்துள்ளார். இவர் சர்பராஸ் கானுக்கு பதிலாக களம் இறக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறுகையில் "உண்மையிலேயே, சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடினாலும் கூட, அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். சில பெரிய வீரர்கள் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும்போது நீங்கள் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.
ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியதால் ஜூரெல் அணியில் இருந்து வெளியேறுவதை பார்க்க முடியும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களை நீங்கள் மனதில் வைத்து பார்க்கும், கே.எல். ராகுல் அங்கே இருப்பார். ஆஸ்திரேலியாவில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடியுள்ளார்" என்றார்.
சர்பராஸ் கான் இந்திய அணிக்காக ஐந்து இன்னிங்சில் போட்டிங் செய்து 200 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 50 ஆகும். ஸ்டிரைக் ரேட் 79.36 வைத்துள்ளார்.
- சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை கே.எல்.ராகுல் தொட்டு பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கே.எல்.ராகுல் 2 ஆவது இன்னிங்சில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் ஆட்டம் நடந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 107 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை கே.எல்.ராகுல் தொட்டு பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தை தொட்டு பார்ப்பார். அதனையும் கே.எல்.ராகுலின் இந்த வீடியோவையும் நெட்டிசன்கள் தொடர்புப்படுத்தி தனது கடைசி டெஸ்டில் கே.எல். ராகுல் விளையாடியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கே.எல்.ராகுல் 2 ஆவது இன்னிங்சில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
இப்போட்டியில் காயம் காரணமாக விளையாடாத சுப்மன் கீல் அடுத்த போட்டியில் இந்திய அணியில் இணையவுள்ள நிலையில் கே.எல்.ராகுலின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 2 ஆவது இன்னிங்சில் சதமடித்ததால் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பெங்களூரு டெஸ்டில் சர்பாராஸ் கான் 150 ரன் விளாசினார்.
- சுப்மன் கில் அணிக்கு திரும்புவதால் 2-வது டெஸ்டில் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் விளையாடவில்லை. சர்பராஸ் கான் அணியில் இடம் பிடித்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது. இதற்கு சர்பாராஸ் கான் விளாசிய 150 ரன்கள் முக்கியமானதாகும்.

2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாட சுப்மன் கில் தயாராகிவிட்டார். இதனால் சர்பராஸ் கான் நீக்கப்படலாம். அதேவேளையில் கே.எல். ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சரியாக விளையாடவில்லை. இதனால் சர்பராஸ் கான் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம்.
ஆனால் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் கே.எல். ராகுலை நீக்காது எனத் தெரிகிறது. இதனால் சர்பராஸ் கான் வெளியே இருக்க வாய்ப்புள்ளது.
இதற்கு முன்னதாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் கருண் நாயர் முச்சதம் விளாசினார். ஆனால் அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கருண் நாயர் அந்த போட்டியில் ரகானேவிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்டார். அடுத்த போட்டிக்கு ரகானே தயாரானதால் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
சேவாக்கிற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர்தான். இருந்தபோதிலும் அதன்பிறகு அவரது டெஸ்ட் வாழ்க்கை மங்கிப்போனது.
அதேபோல் சர்பராஸ் கானை வெளியில் வைக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. அவர் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும் என இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில் "அங்கு ஒரு கோட்பாடு உள்ளது. கருண் நாயர் 300 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டார். ஏன்?. ஏன் என்றால் அவர் ரகானோ இடத்தில் களம் இறங்கினார். ரகானே மீண்டும் அணிக்கு திரும்பியதும், கருண் நாயர் வெளியில் உட்கார வைக்கப்பட்டார். அதனோடு அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.
இந்த கோட்பாட்டின்படி, சர்பராஸ் கான் வெளியில் உட்கார வைக்கப்படுவார். அது நடக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டிற்கு தற்போது முக்கியமான விசயம், வெளிப்புறத்தில் இருந்து சர்பராஸ் கானுக்கு சாதகமான ஆதரவு வெளிப்புறத்தில் இருக்கிறது" என்றார்.
- ஜெய்ஸ்வால் 42 ரன்கள் எடுத்துள்ளார்.
- கே.எல். ராகுல் 34 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனதும் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். கே.எல். ராகுலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் தொடக்க ஜோடியை பிரிக்க சிரமமப்பட்டனர்.
ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோருடன் நாதன் லயனும் பந்து வீசி எந்த பயனும் இல்லை. மதியம் தேநீர் இடைவேளை வரை ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் ஜோடி விக்கெட் இழக்கவில்லை.
தேநீர் இடைவேளை வரை இந்தியா 26 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 88 பந்தில் 42 ரன்கள் அடித்தும், கே.எல். ராகுல் 70 பந்தில் 34 ரன்கள் அடித்தும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இந்தியா 130 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
- டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். கே.எல். ராகுலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் தொடக்க ஜோடியை பிரிக்க சிரமப்பட்டனர்.
ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோருடன் நாதன் லயனும் பந்து வீசி எந்த பயனும் இல்லை.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 90 ரன்கள் அடித்தும் கே.எல். ராகுல் 153 பந்துகளில் 62 ரன்கள் அடித்தும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இந்தியா 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
- தற்போதைய சூழ்நிலையில் கே.எல். ராகுல் தொடக்க வீரரான களம் இறங்குவார்.
- முதல் போட்டியில் மிகவும் அற்புதமாக கே.எல். ராகுல் பேட்டிங் செய்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இதனால் ஜெய்ஸ்வால் உடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. 2-வது இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் அடித்து அசத்தியது.
இதற்கிடையே நாளை தொடங்க இருக்கும் 2-வது போட்டியில் ரோகித் சர்மா விளையாடுகிறார். இதனால் ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்ற கேள்வி எழுந்தது.
பெர்த்தில் சிறப்பாக விளையாடியதால் ஜெய்ஸ்வால் உடன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அடிலெய்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரோகித் சர்மா கூறுகையில் "கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார். நான் மிடில் ஆர்டரில் ஏதாவது ஒரு இடத்தில் களம் இறங்குவேன். நான் எப்படி அந்த முடிவுக்கு வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். பேட்டிங்கில் கீழ் வரிசையில் இறங்குவது தெளிவாக இருக்கிறது. நாங்கள் முடிவை விரும்புகிறோம். நாங்கள் வெற்றியை விரும்புகிறோம் என்பது உங்களுக்கு தெரியும்.
ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி முதல் போட்டியில் சிறப்பாக விளையாடியது. நான் எனது மகனை (அஹான்) கையில் ஏந்தியவாறு கே.எல். ராகுல் பேட்டிங் செய்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். கே.எல். ராகுலை தொந்தரவு செய்ய விருமப்விலிலை. இந்த முடிவு தற்போதுள்ள சூழ்நிலை அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த விசயம் எதிர்காலத்தில் மாறுபடுமா? என்பது குறித்து எனக்குத் தெரியாது.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே, முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- இஷான் கிஷான், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற வாய்ப்பு.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும், முதல் ஒருநாள் போட்டி போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. டி20 தொடரில் இடம் பெற்றுள்ள அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி 20 அணியில் ராகுல் இடம் பெறாத பட்சத்தில் இஷான் கிஷான், தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.