search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹிந்திரா ஸ்கார்பியோ"

    • டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிக்கானர் [ Bikaner ] பகுதியில் கார் நின்றுகொண்டிருந்தது.
    • இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும்.

    காரை திருடிவிட்டு பிறகு மனம் கேட்காமல் அதில் மன்னிப்பு கடிதம் எழுதிவைத்து ரோட்டிலேயே திருடன் விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் பாலாம் காலனியை [Palam colony] சேர்ந்த வினய் குமார் என்பவரின் ஸ்கார்பியோ கார் சமீபத்தில் திருடுபோயுள்ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி காரின் உரிமையாளர் வினய் குமார் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

     

    அதன்படி எப்ஐஆர் பதித்து டெல்லி போலீஸ் காரை தேடிவந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் ராஜஸ்தானில் உள்ள பிக்கானர் [Bikaner] பகுதியில் திருடுபோன அந்த ஸ்கார்பியோ கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த காரின் பின்புற கண்டாடியில் காகிதங்கள் ஒட்டப்பட்ட நிலையில் இருந்தன. அதில், இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் அந்த காரின் நம்பர் எழுதப்பட்டிருந்தது. இது காரை மீண்டும் உரிமையாளரிடம் சிரமமின்றி ஒப்படைக்க திருடன் எழுதி வைத்த தகவல். மற்றொரு காகிதத்தில் நான் இந்தியாவை நேசிக்கிறேன் [I LOVE INDIA] என்று  எழுதப்பட்டு மற்றொன்றில் இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது, உடனே போலீசுக்குச் சொல்லுங்கள், அவசரம் என்று எழுதப்பட்டுள்ளது.

     

    ஜெய்ப்பூர் பிக்கானர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இந்த காரை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்  போலீசுக்கு புகார் அளித்ததன் மூலம் கார் மீட்கப்பட்டுள்ளது. இந்த கார் வேறு ஏதேனும் குற்றச்செயல்களுக்காக திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • ஜூலை 2023 முதல் மே 2024 வரை, ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ N ஆகிவை 1,42,403 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
    • பிப்ரவரி-ஜூன் 2024 காலகட்டத்தில் 27,000 யூனிட்களைச் சேர்த்து இந்த கார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,27,000 விற்பனையாகி இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் 2022-ம் ஆண்டு தனது ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி 2 ஆண்டுகளில் ஸ்கார்பியோ N விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்கார்பியோ சீரிஸ் மாடல்கள் உற்பத்தியில் 10 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

    முன்னதாக, ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து 11 ஆண்டுகளில் 9 லட்சம் கடந்துள்ளதாக அறிவித்து இருந்தது. ஸ்கார்பியோ N அதையும் தாண்டி விற்பனையாகி உள்ளது.

    கிளாசிக் மற்றும் N என்று இரண்டு மாடல்களை கொண்டுள்ள ஸ்கார்பியோ பிராண்ட் 2024 நிதியாண்டில் 4,59,877 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதன் காரணமாக 12-மாத காலத்தில் மஹிந்திராவின் ஒட்டுமொத்த விற்பனையில் புது மைல்கல்லை எட்ட ஸ்கார்பியோ மாடல்கள் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது.


    பிப்ரவரி 1, 2024 அன்று, ஸ்கார்பியோ N அறிமுகப்படுத்தப்பட்டு 19 மாதங்கள் 5 நாட்களில் 1,00,000வது விற்பனை மைல்கல்லைக் கொண்டாடியது. பிப்ரவரி-ஜூன் 2024 காலகட்டத்தில் 27,000 யூனிட்களைச் சேர்த்து இந்த கார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,27,000 விற்பனையாகி இருக்கிறது.

    ஜூலை 2023 முதல் மே 2024 வரை, ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ N ஆகிவை 1,42,403 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது ஜூன் 2002 இல் தொடங்கப்பட்ட ஸ்கார்பியோ பிராண்டின் ஒட்டுமொத்த விற்பனையை 10,42,403 ஆக உயர்த்தியுள்ளது.

    ஜூலை 1, 2022 அன்று ஸ்கார்பியோ N-க்கான ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் 1,00,000 யூனிட்கள் புக்கிங் ஆனது. அப்போது, முன்பதிவுக்கான தொகையின் மதிப்பு சுமார் ரூ.18,000 கோடி, எக்ஸ்ஷோரூம் என மஹிந்திரா நிறுவனம் கூறியிருந்தது.

    நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவை இணைந்து 28,524 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு உண்டு கொண்டாடினர்.

    தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பது வழக்கமான காரியம் தான். சில தினங்களுக்கு முன் இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், ஆமதாபாத்தில் இளைஞர்கள் வித்தியாசமாக பட்டாசு வெடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து காவல் துறை இந்த சம்பவத்திற்கு என்ன செய்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    சமூக வலைதளங்களில் வைரல் ஆன வீடியோவில் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு வானில் வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கும் பரபர காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இது தவிர காரின் பக்கவாட்டு பகுதியில் ஜன்னலின் வெளியில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர்.

    வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஆமதாபாத் காவல் துறை ஆபத்தான முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டப்படி அவர்களை கைது செய்யவில்லை என்ற போதிலும், தவறு செய்த இளைஞர்களை பொது வெளியில் தோப்புக்கரணம் போட செய்தனர். மேலும் இளைஞர்கள் தோப்புக்கரணம் போடும் வீடியோ ஆமதாபாத் காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    பட்டாசுகள் சரியாக கையாளப்படவில்லை எனில் வெடி விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமானவை ஆகும். இவற்றை கொண்டு சாகசம் செய்வது தீ விபத்தை ஏற்படுத்துவதற்கு சமம் ஆகும். முன்னதாக பட்டாசு வெடித்து பலமுறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    • மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N ஆட்டோமேடிக் மாடல் வெளியானது.
    • ஏற்கனவே இந்த காரின் மேனுவல் வேரியண்ட் விலை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N மாடலின் ஆட்டோமேடிக் மற்றும் 4 வீல் டிரைவ் வேரியண்ட்கள் விலையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பெட்ரோல் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம் ஆகும்.

    டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை அறிமுக விலை ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி தொடங்குகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.


    ஷிப்ட் ஆன் ஃபிளை 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்கார்பியோ N டீசல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய ஸ்கார்பியோ N பெட்ரோல் வேரியண்ட் விலை கடந்த மாதமே அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி இவற்றின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய ஸ்கார்பியோ N மாடலில் 2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் எம் ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 200 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 130 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகின்றன.

    ×