search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா வாகனம்"

    • வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுவரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்.
    • 7,575 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 38,116 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர்.

    நீலகிரிக்கு ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கின்றனர்.

    இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுவரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதையடுத்து நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 6 நாட்களில் 1,03,308 வாகனங்களுக்கு இ-பாஸ் ழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இன்று மட்டும் (இரவு 8 மணி வரை) 7,575 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 38,116 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர்.

    • ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.
    • போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் மாநில வருவாய் சுற்றுலா துறையை நம்பி உள்ளது.

    வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்தால் தான் வியாபாரம் அதிகரிக்கும். தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்ட், மதுபான விற்பனை அனைத்தும் வெளிமாநில சுற்றுலா பயணிகளையே நம்பி உள்ளது.

    தற்போது கோடை விடுமுறையொட்டி, புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    அப்படி வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

    குறிப்பாக சிக்னல்களில் நிற்கும் போக்குவரத்து போலீசார், சிக்னலை கடக்க வரும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில கார்களை உடனே நிறுத்தி விடுகின்றனர். அவர்களிடம், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் ஆவணங்களை கேட்கின்றனர்.

    அனைத்தும் இருந்தாலும் கூட, ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.

    அதேபோன்று, கடலுார் சாலையில் மாநில எல்லையான முள்ளோடையில், வாகன சோதனை என்ற பெயரில் புதுச்சேரி போலீசார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் நிறுத்தி சோதனை நடத்தி அபராதம் விதித்தும் வருகின்றனர்.

    போக்குவரத்து சட்டப்படி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பது தவறில்லை.

    ஆனால், வெளி மாநில வாகனங்களை மட்டும் குறி வைத்து அபராதம் விதிப்பதும், அவர்களை விரட்டுவதும், புதுச்சேரி அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்தும்.

    சுற்றுலா பயணிகளின் வருகையும் குறையும். எனவே, போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசா ருக்கு வழங்க வேண்டும் என வெளிமாநில சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.

    • பார்வதிபுரத்தில் தந்தையிடம் பொருட்களை கொடுத்து விட்டு ஆனந்த், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்
    • கேரள பதிவு எண் கொண்ட சுற்றுலா வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள முத்தலகுறிச்சி என்ற இடத்தை சேர்ந்தவர் பத்மநாபபிள்ளை. இவரது மகன் ஆனந்த் (வயது 28), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    சம்பவத்தன்று பத்மநாப பிள்ளை பார்வதிபுரம் சென்றிருந்தார். அப்போது சில பொருட்களை கொண்டு வருமாறு ஆனந்திடம் போனில் கூறி உள்ளார். இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பார்வதிபுரத்தில் தந்தையிடம் பொருட்களை கொடுத்து விட்டு ஆனந்த், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். களியங்காடு அடுத்த சுங்கான்கடையில் அவர் வந்தபோது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட சுற்றுலா வாகனம் வந்தது. அந்த வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காய மடைந்த ஆனந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து இரணி யல்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையம் விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்து உள்ளது
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏலம் விடப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்கள் ஊழியர்களை வைத்து நுழைவுக் கட்டணம் வசூலித்து

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையம் விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்து உள்ளது. இந்த நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு டெண்டர் மூலம் குத்தகை விட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏலம் விடப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்கள் ஊழியர்களை வைத்து நுழைவுக் கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் விட்டது. இதனை மாதவபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஏலம் எடுத்தார்.

    இதையடுத்துநுழைவுக் கட்டண வசூல் மையத்தை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் திறந்து வைத்தார். மேலும், முதல் வாகன கட்டண வசூலையும் அவர் தொடங்கி வைத்தார்.இந்தநிகழ்ச்சியில்பேரூராட்சிவார்டு கவுன்சிலர்சி.எஸ்.சுபாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகபட்சமாக பஸ், வேன், கார், ஜீப் மற்றும் டிரக்கர் போன்ற வாகனங்களில் சுற்றுலா வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்க ளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஆண்டுதோறும் கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பதிலாக கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்களது ஊழியர்களை வைத்து சுற்றுலா வாகன ங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த ஏலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் நடந்தது.

    இந்த ஏலம் மற்றும் டெண்டரில் மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை கன்னியாகுமரி மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 111க்கு ஏலம் எடுத்துள்ளார்.

    ×